கால்சியம் சிலிகேட்டு

கால்சியம் சிலிகேட்டு (Calcium silicate) (கால்-சில் அல்லது கால்சில் என்ற சுருக்கப்பட்ட வணிகப்பெயரால் அடிக்கடி குறிக்கப்படுவது) Ca2SiO4 என்ற மூலக்கூறு வாய்ப்பாட்டை உடைய ஒரு வேதிச்சேர்மம் ஆகும். இது கால்சியம் ஆர்த்தோ சிலிகேட் எனவும் அழைக்கப்படுகிறது. சில நேரங்களில் இது 2CaO.SiO2 என்ற வாய்ப்பாட்டையும் பெறுகிறது. இது கால்சியம் ஆக்சைடு மற்றும் சிலிகன் டைஆக்சைடு ஆகிய சேர்மங்கள் வெவ்வேறு விகிதங்களில் கலந்து வினைபுரிவதால் கிடைக்கக்கூடிய சேர்மங்களின் தொகுதியில் ஒரு சேர்மமாகும்.[5] உதாரணமாக, 3CaO•SiO2, Ca3SiO5; 2CaO•SiO2, Ca2SiO4; 3CaO•2SiO2, Ca3Si2O7 and CaO•SiO2, CaSiO3 போன்றவை இத்தொகுதியைச் சேர்ந்தவை.கால்சியம் சிலிகேட்டு சுண்ணாம்புக்கல் மற்றும் கீசல்கா் உப்பு ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட வெண்ணிற எளிதாகக் கொட்டும் தன்மையுடைய பொடியாகும். இது மிகக் குறைவான பரும அடர்த்தி மற்றும் அதிக நீர் உட்கவர் தன்மை பெற்றதாகும். இது சாலைகள் செப்பனிடுதல் மற்றும் காப்பில் பயன்படுகிறது. செங்கல்கள், தட்டோடுகள், உணவு உப்பு [6] மற்றும் சிமெண்டுகளில் காணப்படுகிறது. இது உணவுத் தயாரிப்பின் போது உணவு கெட்டிப்படுதலைத் தடுக்கும் காரணியாகவும் பயன்படுகிறது. இது ஒரு அமிலநீக்கியாகவும் பயன்படுகிறது. இது அமெரிக்க ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (Food and Agricultural Organization of the United Nations) மற்றும் உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்பான உணவுடன் சேர்க்கத் தகுந்த பொருளாக இருக்கிறது. உணவுப்பொருட்கள் தயாரிப்பில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது..[7]

கால்சியம் சிலிகேட்டு
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
கால்சியம் சிலிகேட்டு
முறையான ஐயூபிஏசி பெயர்
டைகால்சியம் சிலிகேட்டு
வேறு பெயர்கள்
பெலைட்டு

கால்சியம் மோனோசிலிகேட்டு
கால்சியம் ஐதரோசிலிகேட்டு
கால்சியம் மெடாசிலிகேட்டு, கால்சியம் ஆர்த்தோசிலிகேட்டு
கிராமைட்டு
நுண்கலம்
சிலேன்

சிலிசிக் அமில கால்சியம் உப்பு
இனங்காட்டிகள்
1344-95-2 Y
111811-33-7 ஐதரேட்டு Y
12168-85-3 கால்சியம் ஆக்சைடு Y
ChemSpider 14235 N
23811 கால்சியம் ஆக்சைடு Y
EC number 235-336-9
InChI
  • InChI=1S/2Ca.O4Si/c;;1-5(2,3)4/q2*+2;-4 N
    Key: JHLNERQLKQQLRZ-UHFFFAOYSA-N N
யேமல் -3D படிமங்கள் Image
KEGG D03309 N
ம.பா.த கால்சியம்+சிலிகேட்டு
பப்கெம் 14941
44154858 ஐதரேட்டு
25523 கால்சியம் ஆக்சைடு
  • [Ca++].[Ca++].[O-][Si]([O-])([O-])[O-]
UNII S4255P4G5M Y
பண்புகள்
Ca2O4Si
வாய்ப்பாட்டு எடை 172.24 g·mol−1
தோற்றம் வெண்ணிறப் படிகம்
அடர்த்தி 0.29 கி/செமீ3 (திண்மம்)[1]
0.01% (20 °C)[2]
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
−1630 kJ·mol−1[3]
நியம மோலார்
எந்திரோப்பி So298
84 ஜுல்மோல்−1·கெல்வின்−1[3]
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் எரிச்சலுாட்டுபவை
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் [4]
தீப்பற்றும் வெப்பநிலை பொருந்தாதது
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
TWA 15 மி.கி/மீ3 (மொத்ததம்) TWA 5 மி.கி/மீ3 (resp)[2]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
TWA 10 மி.கி/மீ3 (total) TWA 5 மி.கி/மீ3 (resp)[2]
உடனடி அபாயம்
N.D.[2]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

உயர் வெப்பநிலை காப்புப்பொருள்

தொகு
 
கால்சியம் சிலிகேட்டுமுனைப்பற்ற தீ பாதுகாப்பு பலகை - எஃகு அமைப்பினைச் சுற்றிலும் தீ தடுப்பு வீதத்தை அதிகரிக்கத் தேவையான பலகையால் மூடப்பட்டது.

உயர் வெப்பநிலையில் பயன்படுத்தப்படும் காப்புப்பொருட்களில் கல்நாருக்குப் பதிலான பாதுகாப்பான மாறறுப்பொருளாக கால்சியம் சிலிகேட்டு பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. தொழிற்துறையில் பயன்படுத்தப்படும் அடுக்குமுறை குழாயமைப்பு மற்றும் கருவிகள் காப்புப்படுத்துதல் போன்றவற்றிற்கு கால்சியம் சிலிகேட்டினால் ஆன விளிம்புகள். பூச்சுகள் பயன்படுத்தப்படுகின்றது.

தீ பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் பயன்பாடு

தொகு

ஐரோப்பாவில் தீத்தடுப்பு மற்றும் பாதுகாப்புப் பொருட்களாக பயன்படுத்தப்படுகின்ற மிகவும் வெற்றிகரமான பொருளாக கால்சியம் சிலிகேட்டு விளங்குகின்றது. வட அமெரிக்கர்கள் தெளிப்பு வகை தீத்தடுப்பு காரைகளை பயன்படுத்துகிறார்கள். ஆனால், ஐரோப்பியர்களோ கட்டுமானத்தின் போது கால்சியம் சிலிகேட்டைக் கொண்டு உறையிடுதல் அல்லது மூடுதலையே விரும்புகிறார்கள். கால்சியம் சிலிகேட்டு பலகைகளின் உயர் செயல்திறனானது அவை ஈரப்பதமான சூழ்நிலைகளிலும் கூட தனது பரிமாண நிலைப்புத்தன்மையை இழக்காமலிருப்பது மற்றும் கட்டுமானத்தின் ஆரம்ப நிலையிலேயே இதை நிறுவி விடக்கூடிய வசதியைக் கொண்டிருப்பது ஆகியவற்றில் அடங்கியுள்ளது.

சுரங்க அமில வடிகால் மறுசீரமைப்பு

தொகு

ஊது உலையில் இரும்புத் தாது, சிலிகன் டை ஆக்சைடு மற்றும் கால்சியம் கார்பனேட் ஆகியவற்றிலிருந்து உருகிய இரும்பு பிரித்தெடுக்கும் போது கசடு என அழைக்கப்படும் கால்சியம் சிலிகேட்டு கிடைக்கிறது. இத்தகைய கால்சியம் சிலிகேட்டு உயர் சுத்திகரிப்பு முறைகளைப் பயன்படுத்தி பண்படுத்தப்பட்டு கால்சியம் சிலிகேட்டு தொகுப்பாக மாற்றப்படுகிறது. இவ்வாறு கிடைத்த கால்சியம் சிலிகேட்டு செயல்படுகின்ற மற்றும் செயல்படா சுரங்கங்களில் சுரங்க அமில வடிகாலை மறுசீரமைப்பு செய்ய பயன்படுகிறது. [8] கால்சியம் சிலிகேட்டு பெருமளவு கரைசல்களிலிருந்து தனித்த ஐதரசன் அயனிகளை நீக்குவதன் மூலமும் சுரங்க அமில வடிகால் அமைப்புகளில் காணப்படும் செயல்படு அமிலத்தன்மையை கார-அமிலத்தன்மை (pH) மதிப்பை உயர்த்துவதன் மூலமும் நடுநிலையாக்குகிறது.கால்சியம் சிலிகேட்டின் எதிர் மின் அயனியான சிலிகேட்டு அயனி ஐதரசன் அயனியை (H+) ஏற்றுக்கொண்டு (pH மதிப்பை உயர்த்துதல்), மோனோசிலிசிக் அமிலம் (H4SiO4) எனும் ஒரு நடுநிலைத் தன்மையுடைய கரைபொருளை உருவாக்குகிறது. மோனோசிலிசிக் அமிலம் பெரும அளவு கரைசலில் தங்கி நின்று அமிலத் தன்மையின் காரணமாக ஏற்படும் இதர வெறுக்கத்தக்க விளைவுகளை சரி செய்கிறது. மற்றுமொரு மறுசீரமைப்புப் பொருளான சுண்ணாம்புக்கல்லுடன் ஒப்பிடும் போது,[9]கால்சியம் சிலிகேட்டானது கன உலோகங்களை சிறந்த முறையில் வீழ்படிவாக்குகிறது. மேலும் இது உறை போன்று படியாமல் சுரங்க அமில வடிகால் அமைப்புகளில் இதன் செயல்திறனை நீட்டிக்கிறது. [8][10]

அடைக்கும் பொருள்களின் விளைபொருளாக பயன்பாடு

தொகு

கற்காரையை பதப்படுத்துதலில் அடைக்கும் பொருளாக சோடியம் சிலிகேட்டு அல்லது புதிய முட்டைகளின் ஓடுகளை பயன்படுத்தும் போது அது வேதிநிலையில் கால்சியம் ஐதராக்சைடு அல்லது கால்சியம் கார்பனேட் உடன் வினைபுரிந்து கால்சியம் சிலிகேட்டு ஐதரேட்டை உருவாக்கி நீர் கசியா பொருட்களில் உள்ள துளைகளை அடைப்பதற்குப் பயன்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. "NIOSH Pocket Guide to Chemical Hazards". Centers for Disease Control and Prevention. பார்க்கப்பட்ட நாள் 28 சூன் 2017.
  2. 2.0 2.1 2.2 2.3 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0094". National Institute for Occupational Safety and Health (NIOSH).
  3. 3.0 3.1 Zumdahl, Steven S. (2009). Chemical Principles 6th Ed. Houghton Mifflin Company. p. A21. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-618-94690-X.
  4. http://www.bnzmaterials.com/msds/msds218.html
  5. H F W Taylor, Cement Chemistry, Academic Press, 1990, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-683900-X, p 33-34
  6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2008-12-25. பார்க்கப்பட்ட நாள் 2017-06-28.
  7. "Food Additive Details: Calcium silicate". Archived from the original on June 5, 2012. பார்க்கப்பட்ட நாள் July 28, 2013. Codex General Standard for Food Additives (GSFA) Online Database, FAO/WHO Food Standards Codex alimentarius, published by the Food and Agricultural Organization of the United Nations / World Health Organization, 2013.
  8. 8.0 8.1 Ziemkiewicz, Paul. "The Use of Steel Slag in Acid Mine Drainage Treatment and control". பார்க்கப்பட்ட நாள் 25 April 2011.
  9. Skousen, Jeff. "Chemicals". Overview of Acid Mine Drainage Treatment with Chemicals. West Virginia University Extension Service. Archived from the original on 24 மே 2011. பார்க்கப்பட்ட நாள் 29 March 2011.
  10. Hammarstrom, Jane M.; Philip L. Sibrell; Harvey E. Belkin. "Characterization of limestone reacted with acid-mine drainage". Applied Geochemistry (18): 1710–1714. http://mine-drainage.usgs.gov/pubs/AG_18-1705-1721.pdf. பார்த்த நாள்: 30 March 2011. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கால்சியம்_சிலிகேட்டு&oldid=4057261" இலிருந்து மீள்விக்கப்பட்டது