பொட்டாசியம் அயோடேட்டு
பொட்டாசியம் அயோடேட்டு (Potassium iodate) என்பது KIO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பொட்டாசியம் (K+) நேர்மின் அயனிகளும் அயோடேட்டு (IO3) எதிர்மின் அயனிகளும் 1:1 என்ற விகிதத்தில் சேர்ந்து பொட்டாசியம் அயோடேட்டு என்ற அயனிச் சேர்மம் உருவாகிறது. எத்தனால், நீர்ம அமோனியா, நைட்ரிக் காடி போன்ற கரைசல்களில் பொட்டாசியம் அயோடேட்டு கரையாது. பொட்டாசியம் அயோடைடு கரைசலில் இது கரையும். வெண்மை நிறத்தில் படிகத் தூளாக நெடியற்றதாக பொட்டாசியம் அயோடேட்டு காணப்படுகிறது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
பொட்டாசியம் அயோடேட்டு
| |
வேறு பெயர்கள்
அயோடிக் அமிலத்தின் பொட்டாசியம் உப்பு
| |
இனங்காட்டிகள் | |
7758-05-6 | |
ChemSpider | 22856 |
EC number | 231-831-9 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 23665710 |
வே.ந.வி.ப எண் | NN1350000 |
| |
UNII | I139E44NHL |
பண்புகள் | |
KIO3 | |
வாய்ப்பாட்டு எடை | 214.001 கி/மோல் |
தோற்றம் | வெண்மையான படிகப் பொடி |
மணம் | நெடியற்றது |
அடர்த்தி | 3.89 கி/செ.மீ3 |
உருகுநிலை | 560 °C (1,040 °F; 833 K) (சிதைவடையும்) |
4.74 கி/100 மி.லி (0 °செ) 9.16 கி /100 மி.லி (25 ° செ) 32.3 கி /100 மி.லி (100 ° செ) | |
கரைதிறன் | பொட்டாசியம் அயோடைடு கரைசலில் கரையும். எத்தனால், நீர்ம அமோனியா, நைட்ரிக் காடி போன்றவற்றில் கரையாது. |
−63.1•10−6செ.மீ3/மோல் | |
தீங்குகள் | |
R-சொற்றொடர்கள் | R9, R22, R36, R37, R38 |
S-சொற்றொடர்கள் | S35 |
தீப்பற்றும் வெப்பநிலை | எளிதில் தீப்பற்றாது |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | பொட்டாசியம் குளோரேட்டு பொட்டாசியம் புரோமேட்டு |
ஏனைய நேர் மின்அயனிகள் | சோடியம் அயோடேட்டு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பும் வினைகளும்
தொகுபொட்டாசியம் அயோடேட்டு ஒரு ஆக்சிசனேற்ற முகவர் என்பதால் எரியக்கூடிய பொருட்களுடன் தொடர்பு கொண்டால் அல்லது ஒடுக்கும் முகவர்களுடன் தொடர்பு கொள்ள நேரிட்டால் இது தீயை ஏற்படுத்தும். . பொட்டாசியம் தனிமத்தை கொண்ட பொட்டாசியம் ஐதராக்சைடு போன்ற காரத்துடன் அயோடிக் அமிலம் வினைபுரிவதால் பொட்டாசியம் அயோடேட்டு உருவாகிறது. உதாரணமாக,
செறிவூட்டப்பட்ட பொட்டாசியம் ஐதராக்சைடின் சூடான கரைசலுடன் அயோடினை சேர்த்து வினைபுரியச் செய்வதன் வழியாகவும் பொட்டாசியம் அயோடேட்டை தயாரிக்கலாம்.
அல்லது பொட்டாசியம் அயோடைடுடன் பொட்டாசியம் குளோரேட்டு, பொட்டாசியம் புரோமேட்டு அல்லது பொட்டாசியம் பெர்குளோரேட்டை சேர்த்து உருக்குதல் மூலமாகவும் பொட்டாசியம் அயோடேட்டு உற்பத்தி செய்யப்படுகிறது. கிடைக்கும் உருகலுடன் நீர் சேர்க்கப்பட்டு பொட்டாசியம் அயோடேட்டு படிகமாக்கல் மூலம் கரைசலிலிருந்து தனிமைப்படுத்தப்படுகிறது:[1]
- KI + KClO3 → KIO3 + KCl
வெப்பம், அதிர்ச்சி, உராய்வு, எரியக்கூடிய பொருட்கள், ஒடுக்கும் பொருட்கள், அலுமினியம், கரிம சேர்மங்கள், கார்பன், ஐதரசன் பெராக்சைடு, சல்பைடுகள் .போன்றவை பொட்டாசியம் அயோடேட்டு கையாள்கையில் தவிர்க்க வேண்டிய சில பொருள்களின் பட்டியலாகும்.
பயன்கள்
தொகுசில நேரங்களில் அயோடின் குறைபாட்டைத் தடுக்க மேசை உப்பை அயோடினேற்றம் செய்ய பொட்டாசியம் அயோடேட்டு பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் ஈரமான சூழ்நிலையில் மூலக்கூறு ஆக்சிசனால், அயோடைடை அயோடினாக ஆக்சிசனேற்ற முடியும்.. அமெரிக்க நிறுவனங்கள் பொட்டாசியம் அயோடைடுடன் தயோசல்பேட்டுகள் அல்லது பிற ஆக்சிசனேற்றிகளை சேர்க்கின்றன. மற்ற நாடுகளில், உணவு அயோடினுக்கான ஆதாரமாக பொட்டாசியம் அயோடேட்டு பயன்படுத்தப்படுகிறது. இது குழந்தைகளுக்காகத் தயாரிக்கப்படும் சில வகையான பாலில் ஒரு மூலப்பொருளாக உள்ளது. . பொட்டாசியம் புரோமேட்டை போலவே, பொட்டாசியம் அயோடேட்டும் எப்போதாவது ரொட்டி தயாரிக்கும் தொழிலில் மாவை பதப்படுத்தும் முகவராகப் பயன்படுத்தப்படுகிறது.
கதிரியக்கப் பாதுகாப்பு
தொகுதைராய்டில் கதிரியக்க அயோடின் திரட்டப்படுவதிலிருந்து பாதுகாக்க பொட்டாசியம் அயோடேட்டு பயன்படுகிறது, உடலில் அயோடின் வெளிப்படுத்துவதற்கு முன்பாகவே அயோடினின் நிலையான மூலத்திலிருந்து உடலுக்குத் தேவையான தேவையான அயோடினைப் பெற்று தன்னிறைவு அடையச் செய்ய இது உதவுகிறது[2]. கதிர்வீச்சு பாதுகாப்புக்காக உலக சுகாதார அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட பொட்டாசியம் அயோடேட்டு (KIO 3 ) பொட்டாசியம் அயோடைடு (KI) சேர்மத்திற்கு ஒரு மாற்றாக பயன்படுகிறது, வெப்பமான மற்றும் ஈரப்பதமான காலநிலையில் பொட்டாசியம் அயோடைடின் சேமிப்பு நிலைத்தன்மை ஒரு மோசமான நிலையில் இருக்கும் .[3]. என்பது இதற்கான காரணமாகும். செப்டம்பர் 11 தாக்குதல்களைத் தொடர்ந்து அயர்லாந்து அரசாங்கமும் அனைத்து வீடுகளுக்கும் பொட்டாசியம் அயோடேட்டு மாத்திரைகளை கொடுத்தது[4][5]. பொட்டாசியம் அயோடேட்டை ஒரு தைராய்டு தடுப்பானாக பயன்படுத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் அங்கீகரிக்கவில்லை. மேலும் இந்த பயன்பாட்டை ஊக்குவிக்கும் அமெரிக்க வலைத்தளங்களுக்கு எதிராக இந்த அமைப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது[6][7].
வயது | KI மில்லி கிராம்களில் | KIO3 மில்லி கிராம்களில் |
---|---|---|
12 வயதிற்கு மேல் | 130 | 170 |
3 – 12 வயது | 65 | 85 |
1 – 36 மாத குழந்தை | 32 | 42 |
< 1 மாத குழந்தை | 16 | 21 |
மேற்கோள்கள்
தொகு- ↑ Pradyot Patnaik. Handbook of Inorganic Chemicals. McGraw-Hill, 2002, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-07-049439-8
- ↑ Astbury, John; Horsley, Stephen; Gent, Nick (1999), "Evaluation of a scheme for the pre-distribution of stable iodine (potassium iodate) to the civilian population residing within the immediate countermeasures zone of a nuclear submarine construction facility", Journal of Public Health, 21 (4): 2008–10, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1093/pubmed/21.4.412, PMID 11469363
- ↑ Pahuja, D.N.; Rajan, M.G.; Borkar, A.V.; Samuel, A.M. (Nov 2008), "Potassium iodate and its comparison to potassium iodide as a blocker of 131I uptake by the thyroid in rats", Health physics, 65 (5): 545–9, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1097/00004032-199311000-00014, PMID 8225995
- ↑ "Archived copy". Archived from the original on 2013-10-17. பார்க்கப்பட்ட நாள் 2013-04-08.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ "Archived copy". Archived from the original on 2013-10-18. பார்க்கப்பட்ட நாள் 2013-05-22.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ http://www.nukepills.com/potassium-iodate-vs-potassium-iodide.html
- ↑ http://www.nukepills.com/docs/Potassium%20Iodate%20warning%20letter.pdf
- ↑ Guidelines for Iodine Prophylaxis following Nuclear Accidents (PDF), Geneva: World Health Organization, 1999