டால்பின் மூக்கு

டால்பின் மூக்கு (Dolphin's Nose) என்பது விசாகப்பட்டினத்தில் யராட மற்றும் கங்காவாரம் துறைமுகத்திற்கு இடையில் காணப்படும் ஓர் மலையாகும். இந்த மலை டால்பின் மூக்கு போன்று காட்சியளிப்பதால் இதற்கு டால்பினின் மூக்கு எனப்பெயரிடப்பட்டது.[1]

டால்பின் மூக்கு
ஆர் கே கடற்கரையிலிருந்து டால்பின் மூக்கு
உயர்ந்த புள்ளி
உயரம்358 m (1,175 அடி)
புவியியல்
அமைவிடம்விசாகப்பட்டினம், ஆந்திரா, இந்தியா

வரலாறு

தொகு

சுதந்திரத்திற்கு முன்பு, பிரித்தானிய இராணுவம் இதை ஒரு இராணுவ முகாமாகப் பயன்படுத்தியது. இதன் அருகிலுள்ள மலையில் இந்து கோயில், தேவாலயம் மற்றும் மசூதி உள்ளது. 1804 ஆம் ஆண்டில் பிரித்தானிய மற்றும் பிரெஞ்சு படைகள் இந்த மலையின் அருகே விசாகப்பட்டிணப் போரில் ஈடுபட்டன.[2]

கலங்கரை விளக்கம்

தொகு
 
கலங்கரை விளக்கத்திலிருந்து விசாகப்பட்டினம் துறைமுகம்

இந்த மலையில் உள்ள ஒரு கலங்கரை விளக்கம் விசாகப்பட்டினம் துறைமுகத்திற்குள் நுழையும் கப்பல்களை வழிநடத்துகிறது.[3] இந்திய அரசு கலங்கரை விளக்கம் சுற்றுலாவைத் தொடங்க திட்டமிட்டுள்ளது.[சான்று தேவை]

மேற்கோள்கள்

தொகு
  1. Bayya, Venkatesh (17 March 2016). "Dolphin's Nose a natural wonder of Vizag". பார்க்கப்பட்ட நாள் 23 July 2018.
  2. "History Dolphins nose" (PDF). censusindia. பார்க்கப்பட்ட நாள் 12 March 2011.
  3. "Lighthouse on hill". business standard. பார்க்கப்பட்ட நாள் 28 September 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டால்பின்_மூக்கு&oldid=3925148" இலிருந்து மீள்விக்கப்பட்டது