டிரைபியூட்டைல் வெள்ளீய ஐதரைடு
டிரைபியூட்டைல் வெள்ளீய ஐதரைடு (Tributyltin hydride) என்பது C4H9)3SnH என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். நிறமற்ற இந்நீர்மம் கரிமக் கரைப்பான்களில் கரைகிறது. கரிமத் தொகுப்பு வினைகளில் ஐதரசன் அணுக்களின் மூலமாக இந்நீர்மம் பயன்படுத்தப்படுகிறது.
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
முறையான ஐயூபிஏசி பெயர்
டிரைபியூட்டல்சிடானேன்[1] | |||
இனங்காட்டிகள் | |||
688-73-3 | |||
Beilstein Reference
|
3587329 | ||
ChEBI | CHEBI:27086 | ||
ChemSpider | 5734 | ||
EC number | 211-704-4 | ||
Gmelin Reference
|
4258 | ||
InChI
| |||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
ம.பா.த | வெள்ளீயம் டிரைபியூட்டல் வெள்ளீயம் | ||
பப்கெம் | 5948 | ||
| |||
பண்புகள் | |||
SnC 12H 28 | |||
வாய்ப்பாட்டு எடை | 291.06 கி மோல்−1 | ||
அடர்த்தி | 1.082 கி செ.மீ−3 | ||
கொதிநிலை | 80 °C (176 °F; 353 K) 50 இல் பாசுக்கல் | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
தயாரிப்பும் பண்புகளும்
தொகுடிரைபியூட்டல்வெள்ளீய ஆக்சைடுடன் பாலிமெத்திலைதரோசிலாக்சேன் (Bu = CH3CH2CH2CH2) சேர்த்து ஒடுக்க வினைக்கு உட்படுத்தி டிரைபியூட்டைல் வெள்ளீய ஐதரைடு தயாரிக்கப்படுகிறது:[2][3]
- 2"(MeSiH)" + (Bu3Sn)2O → "(Me2Si)2O" + 2 Bu3SnH
- (Bu3Sn)2O + 2/n (MeSi(H)O)n → 2 Bu3SnH + 1/n [(MeSiO)2O]n
இந்த ஐதரைடு ஒரு காய்ச்சி வடிக்கக்கூடிய நீர்மமாகும். இலேசான காற்று உணரியான இது (Bu3Sn)2O சேர்மமாக சிதைவடைகிறது.
1814 செ.மீ−1 for νSn-H இல் இதனுடைய அகச்சிவப்பு நிறமாலை ஒரு வலிமையான கற்றையை வெளிப்படுத்துகிறது.
பயன்பாடுகள்
தொகுஒரு பயனுள்ள வினையாக்கியாக டிரைபியூட்டைல் வெள்ளீய ஐதரைடு கரிமத் தொகுப்பு வினைகளில் பயன்படுகிறது. அசோபிசு ஐசோபியூட்டைரோநைட்ரைலுடன் இணைத்து அல்லது ஒளியுடன் கதிர்வீச்சுக்கு உட்படுத்தினால் கரிம ஆலைடுகள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய குழுக்களை இது ஐதரோகார்பனாக மாற்றுகிறது. Bu3Sn• தனியுருபு ஈடுபாட்டால் தனியுருபு சங்கிலி வழிமுறை வழியாக இச்செயல்முறை நிகழ்கிறது[4][5]. தனியுருபு ஒரு நுண் ஐதரசனை மற்றொரு சமமான டிரைபியூட்டைல்வெள்ளீய ஐதரைடிலிருந்து பெற்று சங்கிலியைப் பரப்புகிறது. ஐதரசன் நன்கொடையாளராக டிரிபியூட்டில்வெள்ளீய ஐதரைடின் பயன்பாடு ஒப்பீட்டளவில் அதன் பலவீனமான பிணைப்பு வலிமைக்கு (78 கிலோகலோரி / மோல்) காரணமாக இருக்கலாம்[6].
வெள்ளீய - ஐதரசன் பிணைப்புகளுக்கிடையில் நிறைவுறா அடிமூலக்கூறுகளை புகுத்தும் வினைகளுக்கு இவ்வினையாக்கி ஒரு நல்ல தேர்வு ஆகும்:[7].
- RC2R' + HSnBu3 → RC(H)=C(SnBu3)R'
மேற்கோள்கள்
தொகு- ↑ "SnBu3H - PubChem Public Chemical Database". The PubChem Project. USA: National Center for Biotechnology Information.
- ↑ Maleczka, Robert E.; Terrell, Lamont R.; Clark, Damon H.; Whitehead, Susan L.; Gallagher, William P.; Terstiege, Ina (1999). "Application of Fluoride-Catalyzed Silane Reductions of Tin Halides to the in Situ Preparation of Vinylstannanes". J. Org. Chem. 64: 5958–5965. doi:10.1021/jo990491+.
- ↑ Tormo, J.; Fu, G. C. (2002). "α-D-Ribo-hexofuranose, 3-deoxy-1,2:5,6-bis-O-(1-methylethylidene)". Org. Synth. 78: 239. doi:10.15227/orgsyn.078.0239.
- ↑ OUP catalogue page பரணிடப்பட்டது 2008-06-04 at the வந்தவழி இயந்திரம், J. Clayden, N. Greeves, S. Warren and P. Wothers, in Organic Chemistry, 2000, OUP, Oxford, ch. 39, pp. 1040-1041.
- ↑ T. V. (Babu) RajanBabu, Philip C. Bulman Page, Benjamin R. Buckley, "Tri-n-butylstannane" Encyclopedia of Reagents for Organic Synthesis 2004, John Wiley & Sons. எஆசு:10.1002/047084289X.rt181.pub2
- ↑ Laarhoven, L. J. J.; Mulder, P.; Wayner, D.D. M. "Determination of Bond Dissociation Enthalpies in Solution by Photoacoustic Calorimetry" Acc. Chem. Res. 1999, 32, 342 எஆசு:10.1021/ar9703443
- ↑ Smith, Nicholas D.; Mancuso, John; Lautens, Mark (2000). "Metal-Catalyzed Hydrostannations". Chemical Reviews 100 (8): 3257–3282. doi:10.1021/cr9902695. பப்மெட்:11749320.