டி. ஆர். பி. பொறியியல் கல்லூரி

திருச்சிராப்பள்ளி மாவட்டதிலுள்ள கல்லூரி

எஸ். ஆர். எம். பொறியியல் கல்லூரிக்கு (SRM Engineering College) பிரபல கல்வியாளரும், தொழில்முனைவோருமன டி. ஆர். பரிவேந்தர் பெயரை சேர்த்து எஸ். ஆர். எம். டி. ஆர். பி. பொறியியல் கல்லூரி என பெயரிடப்பட்டது. கல்வித் துறையில் குறிப்பிடத்தக்க புகழை இந்த நிறுவனம் தொடர்ந்து பெற்றுள்ளது, இது எஸ்ஆர்எம் குழுமத்தின் நிறுவனமாகும். எஸ். ஆர். எம். பொறியியல் கல்லூரியானது ஐ.எஸ்.ஓ 9001: 2000 சான்றளிக்கப்பட்ட நிறுவனமாகும். மேலும் இக்கல்லூரியானது தொழில்நுட்ப கல்விக்கான அகில இந்தியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

எஸ். ஆர். எம். டி. ஆர். பி. பொறியியல் கல்லூரி
வகைபொறியியல் கல்லூரி
உருவாக்கம்2010
நிறுவுனர்பாரிவேந்தர்
தலைவர்ஆர். சிவகுமார்
முதல்வர்பி. கணேஷ் பாபு
அமைவிடம், ,
சுருக்கப் பெயர்SRM
சேர்ப்புஅண்ணா பல்கலைக்கழகம்,
இணையதளம்trpengg.ac.in

இக்கல்லூரி திருச்சிராப்பள்ளி அருகே உள்ள இருங்கலூரில், தேசிய நெடுஞ்சாலை -45 இல் அமைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள சமயபுரம் மாரி அம்மன் கோயில் புகழ் பெற்றது. இக்கல்லூரியானது   திருச்சிராப்பள்ளியில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ளது. கல்லூரி கிராமப்புறத்தில் கட்டப்பட்டு, 2011 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது, எனவே இது அமைதியான மற்றும் மாசு இல்லாத வளாகமாக உள்ளது.