டி. என். ஏ. கைரேகை மற்றும் ஆய்ந்தறிதல் மையம்
டி. என். ஏ. கைரேகை மற்றும் ஆய்ந்தறிதல் மையம் (Centre for DNA Fingerprinting and Diagnostics) என்பது இந்திய உயிரித்தொழில்நுட்பவியல் ஆய்வு நிறுவனமாகும். இது இந்தியாவின் ஐதராபாத்தில் அமைந்துள்ளது., இது இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உயிரிதொழிநுட்பவியல் துறையின் கீழ் செயல்படுகிறது. இந்நிறுவனம், சன் மைக்ரோசிஸ்டம்ஸ் ஆதரவுடன் மருத்துவ உயிரி-தகவலியலில், ஒரு வலுவான சிறப்பு மையமான மருத்து தகவலியல் வசதியினை இங்கு ஏற்படுத்தியுள்ளது. இதற்காக இஎம்பிநெடுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இம்மையம் டி.என்.ஏ கைரேகை மற்றும் ஆய்ந்தறிதழில் சேவைகள் சிலவற்றைச் செய்கின்றது. இம்மையம் டி.என்.ஏ சுயவிவர பொருத்துதலுக்கான ஒருங்கிணைந்த டி.என்.ஏ குறியீட்டு முறையைப் பயன்படுத்துகிறது. டி.என்.ஏ கைரேகை மற்றும் ஆய்ந்தறிதழ் மையம், அமெரிக்கப் புலன் விசாரணை கூட்டாச்சிப் பணியகத்துடன் கோடிசு (CODIS) வசதியினைப் பெறப் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது.[1]
வகை | தன்னாட்சி |
---|---|
உருவாக்கம் | 1990 |
பணிப்பாளர் | கே. தங்கராஜ் |
அமைவிடம் | , , |
வளாகம் | நகரம் - உப்பல் |
இணையதளம் | cdfd.org.in |
டி.என்.ஏ. கைரேகை மற்றும் ஆய்ந்தறிதல் மையம், வெல்கம் அறக்கட்டளை போன்ற பிற நிறுவனங்களிடமிருந்து குறிப்பிட்ட ஆய்வு கூட்டுத் திட்டங்களுக்கு நிதியுதவியினைப் பெறுகிறது. உயிரியலில் முனைவர் பட்ட ஆய்வு மையமாகவும், பட்டங்களை வழங்குவதற்காகவும் இந்த மையத்தை ஐதராபாத்து பல்கலைக்கழகமும் மணிப்பால் பல்கலைக்கழகம் அங்கீகரித்துள்ளன.[2] இந்நிறுவனத்தின் ஆய்வு, பெரும்பாலும் பாக்டீரியா நோய்க்கிருமிகளின் மூலக்கூறு தொற்றுநோயியல், கட்டமைப்பு மரபியல், மூலக்கூறு மரபியல், உயிர் தகவலியல் மற்றும் கணக்கீட்டு உயிரியல் அடிப்படையில் உள்ளது.[3]
வரலாறு
தொகுடி.என்.ஏ. கைரேகை மற்றும் ஆய்ந்தறிதழ் மையம் உருவாகக் காரணமாக அன்றைய சி.சி.எம்.பி இயக்குநர் லால்ஜி சிங் காரணமாக இருந்தார். நவீன உயிரியலின் பல்வேறு பகுதிகளில் அடிப்படை மற்றும் பயன்பாட்டு ஆராய்ச்சிகளை உள்ளடக்கிய ஒரு நவீன நிறுவனமாக, தற்போதைய வடிவத்தில் இந்நிறுவனம் உருவானது. இதன் நிறுவன இயக்குநர் சையத் ஈ. ஹஸ்னைன் (ஐதராபாத் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்), இந்த நோக்கத்தை உணர்ந்து தனது பணிக்காலத்தில் (1999 முதல் 2005 வரை) சிறப்பாகப் பின்பற்றினார். உயிரி அறிவியல் ஆராய்ச்சிக்குத் தேவையான அனைத்து கருவி மற்றும் கணினி உள்கட்டமைப்பு வசதி இந்த மையத்தில் உள்ளது. இந்நிறுவனத்தில் உயிரியலின் பல்வேறு ஆராய்ச்சிப் பிரிவுகளில் இருபத்தி இரண்டு குழுக்கள் செயல்படுகின்றன.[4] நிஜாமின் மருத்துவ அறிவியல் நிறுவனம் (நிம்ஸ்) உடன் கண்டறியும் பரிசோதனைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
வளாகம்
தொகுடி.என்.ஏ கைரேகை மற்றும் ஆய்ந்தறிதல் மையம் இதன் செயல்பாடுகளை உயிரணு மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்தில் தொடங்கியது. இடைக்காலத்தில் 1999 முதல் 2008 வரை நாசாரம் கட்டடத்தில் செயல்பட்டது.[5] பின்னர் 2009ஆம் ஆண்டில், இது ஐதராபாத்தின் புறநகரில் உள்ள காந்திப் பேட்டை வட்டாரத்தில் ஒரு புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. ஆனால், ஓசுமான் சாகர் ஏரிக்கு அருகாமையில் இந்த புதிய வளாகம் இருப்பது தொடர்பான அரசாங்கத்தின் சில ஆட்சேபனைகள் காரணமாக, ஆய்வக சோதனைப் பணிகள் எதுவும் அனுமதிக்கப்படவில்லை. இதன் விளைவாக, காந்தி பேட்டையில் கட்டப்பட்ட கட்டடம் 2009ஆம் ஆண்டின் முற்பகுதியில் பயன்படுத்தாமல் இருந்தது.[6] மேலும் இந்நிறுவனம் நாம்பள்ளியில் உள்ள வாடகை கட்டிடத்திலிருந்து இயங்கியது.
1 நவம்பர் 2017 முதல் டாக்டர் டெபாஷிஸ் மித்ரா இதன் புதிய இயக்குநராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, டி.என்.ஏ கைரேகை மற்றும் ஆய்ந்தறிதழ் மையம் உப்பலில் உள்ள நிரந்தர வளாகத்திலிருந்து செயல்படத் தொடங்கியது. மேலும் 15 மார்ச் 2018 நிலவரப்படி இந்த நிறுவனம் நாகோல் மெற்றோ நிலையத்திற்கு அடுத்துள்ள இதன் நிரந்தர கட்டிடத்தில் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ http://gadgets.ndtv.com/science/news/cdfd-to-use-fbis-codis-software-for-dna-profile-matching-547689
- ↑ "Academics". http://cs-test.ias.ac.in/cs/Volumes/102/06/0934.pdf. பார்த்த நாள்: 2012-08-21.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Bashyam MD, Chaudhary AK, Manjari S, Nagarajaram HA, Devi AR, Bashyam L, Reddy EC, Dalal A. Molecular genetic analysis of MSUD from India reveals mutations causing altered protein truncation affecting the C-termini of E1α and E1β. J Cell Biochem. 2012 May 16.
- ↑ "CDFD - On an innovation drive - Institutions - Express Pharma Pulse". Expresspharmaonline.com. 2002-11-21 இம் மூலத்தில் இருந்து 2011-07-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110717190119/http://www.expresspharmaonline.com/20021121/institutions3.shtml. பார்த்த நாள்: 2012-08-21.
- ↑ "Andhra Pradesh / Hyderabad News : CDFD may be shifted to IISM premises". தி இந்து (Chennai, India). 2010-09-04 இம் மூலத்தில் இருந்து 2012-11-08 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121108161559/http://www.hindu.com/2010/09/04/stories/2010090453260500.htm. பார்த்த நாள்: 2012-08-21.
- ↑ "CDFD campus to come up at Survey of India premises". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 2011-06-18 இம் மூலத்தில் இருந்து 2012-04-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120419124616/http://articles.timesofindia.indiatimes.com/2011-06-18/hyderabad/29673940_1_cdfd-centre-for-dna-fingerprinting-soi. பார்த்த நாள்: 2012-08-21.