டி. சி. ஆனந்த் குமாா்

இனப்பெருக்க உயிரியலாளர் மற்றும் மருத்துவ ஆராய்ச்சியாளர்

திருச்சிராப்பள்ளி செல்வராஜ் ஆனந்த் குமார் (T.C. Anand Kumar) (1936-2010) என்பவர் ஓர் இந்திய இனப்பெருக்க உயிரியலாளர் [1] மற்றும் இந்தியாவின் முதல் அறிவியல் பூர்வமாக ஆவணப்படுத்தப்பட்ட சோதனைக் குழாய் குழந்தையை உருவாக்கியவரும் ஆவாா்.[2] [note 1] பெங்களூரில் ஹோப் மலட்டுத்தன்மைக்கான சிகிச்சை மைய நிறுவனர் ஆவார். இவர் தேசிய இனப்பெருக்க சுகாதார ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராக இருந்தார். பின்னர் இந்நிறுவனம் இனப்பெருக்க ஆராய்ச்சி நிறுவனம் என்று அழைக்கப்பட்டது.[5] செல்வராஜ், இந்திய அறிவியல் கழகம் மற்றும் தேசிய மருத்துவ அறிவியல் கழகம் ஆகியவற்றின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராக உள்ளார். சஞ்சய் காந்தி தேசிய விருதினையும் இவர் பெற்றுள்ளார்.[6] இவரது அறிவியல் ஆராய்ச்சிக்காக, இந்திய அரசின், அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி கவுன்சில், இவருக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான 1977ஆம் ஆண்டு, சாந்தி ஸ்வரூப் பட்நகர் விருதினை வழங்கியது.[7]

தி. செ. ஆனந்த் குமார்
பிறப்பு(1936-01-18)18 சனவரி 1936
மதராசு மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போது தமிழ்நாடு, இந்தியா)
இறப்பு26 சனவரி 2010(2010-01-26) (அகவை 73)
பெங்களூரு, கர்நாடகா, இந்தியா
தேசியம்இந்தியன்
துறைஇனப்பெருக்க உயிரியல்
பணியிடங்கள்
கல்வி கற்ற இடங்கள்
  • ஜோத்பூர் பல்கலைக்கழகம்
அறியப்படுவது
விருதுகள்1977 & சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது
சஞ்சய் காந்தி தேசிய விருது

வாழ்க்கை குறிப்பு

தொகு

தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் தமிழ் குடும்பத்தில் ஜனவரி 18, 1936இல் பிறந்த ஆனந்த்குமார் தனது கல்லூரி படிப்பை பெங்களூருவிலும் முனைவர் பட்டத்தினை ஜோத்பூர் பல்கலைக்கழகத்திலும் பெற்றார்.[8] பின்னர், முனைவர் பட்டத்திற்குப் பிந்தைய ஆராய்ச்சிக்காக இங்கிலாந்து சென்றார். ஆனால், 1969ஆம் ஆண்டில் அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம் டெல்லியில் சேர இந்தியா திரும்பினார். இங்கு 1982வரை பணியாற்றிய பின்னர். மும்பையில் உள்ள இனப்பெருக்க ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். இங்கு பணி ஓய்வு பெறும் வரை பணியாற்றிவிட்டு, மலட்டுத்தன்மைக்கான மருத்துவ சேவையின் மையமான பெங்களூரில் உள்ள 'ஹோப் கருத்தரிப்பு சிகிச்சை மையத்தினை' நிறுவினார்.[9][10]

குமார் கற்பகத்தினை மணந்தார். இத்தம்பதியருக்கு விஜய் என்ற மகனும் அம்பிகா என்ற மகளும் மூன்று பேரக் குழந்தைகளும் உள்ளனர். இவரது குடும்பம் பெங்களூரில் வசித்து வருகிறது. இவர் 2010ஆம் ஆண்டில் ஜனவரி 26 அன்று தனது 74 ஆம் வயதில் இறந்தார்.[2]

குறிப்புகள்

தொகு
  1. It was reported that the birth of Durga, the first test tube baby born in India, was pioneered by Subhas Mukhopadhyay which was subsequently acknowledged and supported by Anand Kumar [3][4]

மேற்கோள்கள்

தொகு
  1. "A leg up for baby making". The Telegraph. 26 May 2008. பார்க்கப்பட்ட நாள் 22 September 2016.
  2. 2.0 2.1 "The pioneer of IVF in India - Dr. T C Anand Kumar passes away". IVF.net. 23 February 2010. பார்க்கப்பட்ட நாள் 22 September 2016.
  3. "Late honour for test tube pioneer". Times of India. 8 January 2004. பார்க்கப்பட்ட நாள் 22 September 2016.
  4. K. S. Jayaraman (6 October 2010). "Nobel to IVF pioneer revives feelings of loss". Nature India 139. doi:10.1038/nindia.2010.139. 
  5. "Test-tube baby pioneer dead". The Hindu. 31 January 2010. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/testtube-baby-pioneer-dead/article694616.ece. 
  6. Rajvi H. Mehta (2010). "Dr. T. C. Anand Kumar (1936–2010)". Reproductive Biomedicine Online 20 (4): 443. doi:10.1016/j.rbmo.2010.02.008. http://www.rbmojournal.com/article/S1472-6483(10)00064-7/abstract. 
  7. "View Bhatnagar Awardees". Shanti Swarup Bhatnagar Prize. 2016. பார்க்கப்பட்ட நாள் 19 September 2016.
  8. Rajvi H. Mehta (March 2010). "Dr T.C. Anand Kumar - a doyen in reproductive biology". Indian J Med Res 131: 446–467. http://medind.nic.in/iby/t10/i3/ibyt10i3p466.pdf. [தொடர்பிழந்த இணைப்பு]
  9. Satish Kumar Gupta (6 December 2012). Reproductive Immunology. Springer Science & Business Media. pp. 10–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-94-011-4197-0.
  10. S. C. Bhatt (2006). Land and People of Indian States and Union Territories: In 36 Volumes. Karnataka. Gyan Publishing House. pp. 230–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7835-369-2.


"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._சி._ஆனந்த்_குமாா்&oldid=3938851" இலிருந்து மீள்விக்கப்பட்டது