டி. ஜி. ஆராவமுதன்

தமிழ்நாட்டு வரலாற்று ஆய்வாளர்

திருக்கண்ணங்குடி ஜி. ஆராவமுதன் (Thirukannangudi G. Aravamuthan, 1890 - 9 மே 1970) என்பவர் ஒரு இந்திய தொல்லியல் ஆய்வாளர் மற்றும் நாணயவியலாளர் ஆவார். [1]

டி. ஜி. ஆராவமுதன்
பிறப்பு1890 (1890)
திருக்கண்ணங்குடி, நாகப்பட்டினம், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு9 மே 1970 (அகவை 79–80)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியர்
பணிதொல்லியல் ஆய்வாளர், நாணயவியலாளர்

வாழ்கை குறிப்பு தொகு

ஆராவமுதன் 1890 ஆம் ஆண்டு பிரித்தானிய இந்தியாவின் மதறாஸ் மாகாணத்தில் (தற்போதைய தமிழ்நாட்டில் ) நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருக்கண்ணங்குடிக்கு அருகிலுள்ள ஒரு சிற்றூரில் பிறந்தார். முதுகலைப் படிப்பை முடித்த இவர், முதலில் ஆங்கிலத்திலும், பின்னர் சட்டப்படிப்பிலும் பட்டம் பெற்றார். இவர் தி இந்து நாளிதழில் மெய்ப்புபார்ப்பவர், நகைக்கடையில் வைர மதிப்பீட்டாளர், பச்சையப்பன் கல்லூரியில் ஆங்கில ஆசிரியர், சென்னை உயர்நீதிமன்றத்தில் சட்டப் பயிற்சி என பல்வேறு வேலைகளைச் செய்தார். இருப்பினும், இவரது ஆர்வம் வரலாற்றில்தான் இருந்தது. [2] சென்னை அரசு அருங்காட்சியகத்தின் கண்காணிப்பாளராக சில காலம் பணியாற்றினார். [3]

படைப்புகள் தொகு

குறிப்புகள் தொகு

  1. "Obituary, Archaeologist". The Indian Express. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19700510&printsec=frontpage&hl=en. 
  2. Srivathsan, A. (16 November 2013). "Coining a catalogue". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 12 February 2018.
  3. "Catalogue of the Roman and Byzantine Coins: Foreword". பார்க்கப்பட்ட நாள் 13 February 2018.[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._ஜி._ஆராவமுதன்&oldid=3711156" இலிருந்து மீள்விக்கப்பட்டது