டுரியான் துங்கல் ஏரி

டுரியான் துங்கல் ஏரி (மலாய்: Tasik Durian Tunggal ; ஆங்கிலம்: Durian Tunggal Lake); என்பது மலேசியா, மலாக்கா மாநிலத்தில், அலோர் காஜா மாவட்டத்தில் (Alor Gajah District) அமைந்துள்ள ஓர் ஏரியாகும். மலாக்கா மாநகரத்தில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது.[1]

டுரியான் துங்கல் ஏரி
டுரியான் துங்கல் ஏரி
டுரியான் துங்கல் ஏரி is located in மலேசியா
டுரியான் துங்கல் ஏரி
டுரியான் துங்கல் ஏரி
அமைவிடம்டுரியான் துங்கல், மலாக்கா, மலேசியா
ஆள்கூறுகள்2°19′00″N 102°17′00″E / 2.316667°N 102.283333°E / 2.316667; 102.283333
வகைஇயற்கை ஏரி
பூர்வீக பெயர்Durian Tunggal Lake Error {{native name checker}}: parameter value is malformed (help)
வடிநில நாடுகள்மலேசியா
மேற்பரப்பளவு15 km2 (5.8 sq mi)
நீர்க் கனவளவு32,600,000 கன சதுர மீட்டர்கள் (26,400 acre⋅ft)

டுரியான் துங்கல் நகரில் இருந்து ஜாசின் நகருக்குச் செல்லும் வழியில், பெரிய அளவிலான இந்த டுரியான் துங்கல் ஏரி உள்ளது. உண்மையில் இது ஒரு நீர்த்தேக்கமாகும்.

பொது தொகு

இந்தத் நீர்த் தேக்கத்தில் இருந்து குடிநீர் மலாக்கா மாநிலம் முழுமைக்கும் விநியோகம் செய்யப்படுகிறது. 1992-ஆம் ஆண்டில் சீனப் புத்தாண்டின் போது அந்த நீர்த் தேக்கத்தில் இருந்த நீர் முழுமையாக வற்றிப் போனது.[2]

அதனால் இந்நீர்த் தேக்கத்தை நம்பியிருந்த பெரும்பாலான மலாக்கா வாசிகள் அவதியுற்றனர். தேக்கத்தில் இருந்த எல்லா உயிர்ப் பொருள்களும் அழிந்து போயின. அந்தக் குளம் மீண்டும் புத்துயிர் பெற ஐந்து ஆண்டுகள் பிடித்தன.

அதன் பின்னர், மூவார் ஆற்றில் இருந்து, நீர் டுரியான் துங்கல் குளத்திற்குத் திருப்பி விடப்பட்டது. அதன் பிறகு அப்படிப்பட்ட இடர்பாடுகள் எதுவும் ஏற்படவில்லை.[3]

வரலாறு தொகு

1900களில் டுரியான் துங்கல் ஓர் அடர்ந்த காட்டுப் பகுதியாக இருந்த போது, நிறைய காட்டு யானைகள் சுற்றித் திரிந்தன. இந்த யானைகள் மாச்சாப், கீசாங், திபோங், தங்காக், தம்பின் பகுதிகளில் இருந்து டுரியான் துங்கல் காடுகளுக்கு வந்தவை.

அந்தக் காலக்கட்டத்தில், டுரியான் துங்கல் காடுகளில் ’டுரியான்’ எனும் முள்நாரிப் பழ மரங்கள் அதிகமாக விளைந்தன. காட்டு யானைகளுக்கு முள்நாரிப் பழங்கள் மிகவும் பிடிக்கும்[4][5]

ஒரு முறை, பல ஆயிரம் டுரியான் பழமரங்கள் இருந்தும், ஒரு மரத்தில்கூட காய்கள் காய்க்கவில்லை. ஆனால், ஒரே ஒரு மரத்தில் ஒரே ஒரு காய் மட்டும் காய்த்து இருந்தது. அந்தக் காய், காய்த்துப் பழமாக விழும் வரையில் எல்லா யானைகளும் அந்த மரத்தின் அடியிலேயே காத்து இருந்தன.

பெயர் விளக்கம் தொகு

நாட்கள் வாரங்களாகி பல மாதங்கள் ஆகியும், அந்த முள்நாரிப் பழம் கீழே விழவே இல்லை. மரத்திலேயே தொங்கிக் கொண்டு இருந்தது. யானைகள் ஏமாந்து காட்டை விட்டு திரும்பிப் போய்விட்டன.

அதன் பின்னர் பூர்வீகக் குடிமக்கள் அந்த இடத்திற்கு டுரியான் துங்கல் என்று பெயர் வைத்தனர். இப்படித்தான் டுரியான் துங்கல் நகரத்திற்கும்; டுரியான் துங்கல் ஏரிக்கும் பெயர் வந்தது.

மேற்கோள்கள் தொகு

மேலும் காண்க தொகு

மலேசிய ஏரிகளின் பட்டியல்

"https://ta.wikipedia.org/w/index.php?title=டுரியான்_துங்கல்_ஏரி&oldid=3427982" இருந்து மீள்விக்கப்பட்டது