கீசாங் (ஆங்கிலம், மலாய் மொழி: Kesang) என்பது மலேசியா, மலாக்கா, ஜாசின் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு நகரம் ஆகும். ஜாசின் நகரில் இருந்து 7 கி.மீ. தொலைவிலும், மலாக்கா மாநகரில் இருந்து 26 கி.மீ. தொலைவிலும் இருக்கிறது.

கீசாங்
Kesang
நாடு மலேசியா
மலேசியா
மலாக்கா
நேர வலயம்MST (ஒசநே+8)
 • கோடை (பசேநே)பயன்பாடு இல்லை (ஒசநே)
அஞ்சல் குறியீடு77000
தொலைபேசி குறியீடு06

கீசாங் சிறுநகரம் ஒரு சமவெளியில் அமைந்து இருக்கிறது. முன்பு காலத்தில் ஈயக் கனிமத்திற்கு பெயர் போன இடம். ஈயம் தோண்டி எடுக்கப்பட்ட இடங்கள் இப்போது ஈயக் குட்டைகளாக மாறியுள்ளன. அந்தக் குட்டைகளில் இப்போது மீன்கள் வளர்க்கப் படுகின்றன. மீன் வளர்ப்புத் துறை உபரி வருமானத்தை ஈட்டித் தரும் துறையாக மாறி வருகிறது.

மலாயா அவசரகாலம் தொகு

இந்த நகரில் சீனர்கள் அதிகமாக வாழ்ந்தாலும், நகரைச் சுற்றியுள்ள கிராமங்களில் மலாய்க்காரர்களையும் கணிசமான எண்ணிக்கையில் காண முடியும். கீசாங் சிறுநகரத்தைச் சுற்றிலும் நிறைய ரப்பர் தோட்டங்களும், எண்ணெய்ப்பனைத் தோட்டங்களும் காணப்படுகின்றன. சில இடங்களில் நெல் விவசாயம் செய்யப்படுகிறது.

1950-களில் டுரியான் துங்கலில் இருந்து கீசாங்கிற்குச் செல்வதற்கு மண்பாதை இருந்தது. பாதை நெடுகிலும் அடர்ந்த காடுகள் இருந்தன. அவை 1960-களில் மலாயா அவசரகாலத்தின் போது கம்யூனிஸ்டுகளின் புகலிடமாகவும் விளங்கின. இப்போது அந்த மண்பாதை, தார் சாலையாக மேம்பாடு கண்டுள்ளது.

மலேசிய மலாக்கா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் தொகு

கீசாங்கில் இருந்து ஆறு கி.மீ. தொலைவில் மலேசிய மலாக்கா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (Universiti Teknikal Malaysia Melaka) இருக்கிறது. இந்தப் பல்கலைக்கழகம் 2000-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் தேதி கட்டப்பட்டது.[1] இது மலேசியாவின் 14-ஆவது பல்கலைக்கழகம் ஆகும். இந்தப் பல்கலைக்கழகத்திற்கு மூன்று பயிற்று வளாகங்கள் உள்ளன.

தலை வளாகம் கீசாங் - டுரியான் துங்கல் பகுதியில் உள்ளது. 2010-ஆம் ஆண்டு 766 ஏக்கர் பரப்பளவில் தலை வளாகம் உருவாக்கப்பட்டது. மிக நவீன வசதிகளுடன் கூடிய கட்டமைப்புகளுடன் இந்தப் பல்கலைக்கழகம் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இரு பயிற்று வளாகங்கள் மலாக்கா ஹங் துவா சாலையிலும், ஆயர் குரோ தொழில்பேட்டையிலும் இயங்கி வருகின்றன.

இந்தோனேசியா, சவூதி அரேபியா, சாட், சிரியா, பாகிஸ்தான், கேமரூன், வங்காள தேசம், தான்சானியா, இந்தியா, சோமாலியா, சிங்கப்பூர், கத்தார், பாலஸ்தீனம், லிபியா, ஈராக், ஈரான், கானா, பிரான்ஸ், ஏமன், நைஜீரியா, ஜோர்டான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் இங்கு உயர்க்கல்வி பயில்கின்றனர்.[2]

அருகாமையில் உள்ள நகரங்கள் தொகு

  1. டுரியான் துங்கல்
  2. பெம்பான்
  3. புக்கிட் சிங்கி
  4. ஜாசின்
  5. சிலாண்டார்

மேற்கோள் தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=கீசாங்&oldid=3549960" இருந்து மீள்விக்கப்பட்டது