சிலாண்டார்

சிலாண்டார் (ஆங்கிலம், மலாய் மொழி: Selandar) என்பது மலேசியா, மலாக்கா, ஜாசின் மாவட்டத்தில் அமைந்து இருக்கும் ஒரு கிராமப்புற நகரமாகும். இந்த நகரம் மலாக்கா மாநகரத்தில் இருந்து 17 கி.மீ. தொலைவிலும்; டுரியான் துங்கல் நகரத்தில் இருந்து 18 கி.மீ. தொலைவிலும் இருக்கிறது.

சிலாண்டார்
Selandar
நாடு மலேசியா
மாநிலம் மலாக்கா
அரசு
 • சட்டமன்ற உறுப்பினர்லாய் மெங் சோங் (2013 - 2018)
நேர வலயம்MST (ஒசநே+8)
 • கோடை (பசேநே)பயன்பாடு இல்லை (ஒசநே)
அஞ்சல் குறியீடு77500
தொலைபேசி குறியீடு06
இணையதளம்http://www.mpag.gov.my/en/
சிலாண்டார்
Selandar
நாடு மலேசியா
மாநிலம் மலாக்கா
அரசு
 • சட்டமன்ற உறுப்பினர்லாய் மெங் சோங் (2013 - 2018)
நேர வலயம்MST (ஒசநே+8)
 • கோடை (பசேநே)பயன்பாடு இல்லை (ஒசநே)
அஞ்சல் குறியீடு77500
தொலைபேசி குறியீடு06
இணையதளம்http://www.mpag.gov.my/en/

வடக்கு-தெற்கு விரைவுசாலை (மலேசியா), ஆயர் குரோ கட்டணச் சாவடி வழியாகவும், இந்த நகரத்திற்கு வரலாம். கட்டணச் சாவடியில் இருந்து 18.5 கி.மீ. தொலைவில் இருக்கிறது. இந்த நகருக்கு மிக அருகாமையில் இருப்பது கீசாங் சிறுநகரமாகும்.

நீர் பிடிப்பு வளாகம் தொகு

மெர்லிமாவ், சுங்கை ஊடாங், மஸ்ஜீத் தானா போன்ற மற்ற சிறுநகரங்களைப் போல, சிலாண்டார் நகரம் தொழில்துறையில் துரிதமாக வளர்ச்சி அடையவில்லை. அதற்கு காரணம், சிலாண்டார் காட்டுப் பகுதி ஒரு பாதுகாக்கப்பட்ட இடமாக மலாக்கா மாநில அரசாங்கம் அறிவித்துள்ளது. இங்குதான் மலாக்காவின் நீர் பிடிப்பு வளாகம் உள்ளது.

சிலாண்டார் நகரில் இருந்து 5 கி.மீ. தொலைவில் இருக்கும், ஜூஸ் அணைக்கட்டில் (Jus Dam) இருந்துதான் மலாக்கா நகருக்கு நீர் விநியோகம் செய்யப்படுகிறது.[1] மலாக்காவிற்கு டுரியான் துங்கல், சின் சின் பகுதிகளில் இருக்கும் அணைக்கட்டுகளில் இருந்தும் நீர் விநியோகம் செய்யப்படுகிறது.

சிலாண்டார் பள்ளத்தாக்கு தொகு

தொழில்துறையில் துரித வளர்ச்சி அடையவில்லை என்றாலும், சிலாண்டார் பள்ளத்தாக்கில் வீடமைப்புத் திட்டங்கள் அதிகரித்து வருகின்றன. ஜுஸ் பெர்மாய், ஜுஸ் பெர்டானா, தாமான் பெலாங்கி, சிலாண்டார் பொது வீடமைப்புத் திட்டம், பெல்க்ரா புக்கிட் செடானான் (Felcra Bukit Sedanan),[2] தாமான் ஆயர் பாசீர் போன்றவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

மலாக்காவில் நன்கு அறியப்பட்ட கல்விக் கழகங்களில், சிலாண்டார் சமூகக் கல்லூரி (Selandar Community College)[3], தொழில்துறை பயிற்சிக் கழகம் (Industrial Training Institute)[4] போன்ற கல்லூரிகள் இங்குதான் கட்டப்பட்டு உள்ளன. இந்த இரு கல்லூரிகளும் 2004-ஆம் ஆண்டில் கட்டப்பட்டவை.

சில ஆண்டுகளுக்கு முன்னால், ஒரு வேளாண்மைப் பண்ணை இங்கு உருவாக்கப்பட்டது. இது ஒரு வகையில் ஒரு வெப்ப மண்டல பழத் தோட்டமாகும். அதன் பெயர் தாமான் அக்ரோ சிலாண்டார் (Taman Agro Selandar). மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் பின் முகமது, 2002 அக்டோபர் 3-ஆம் தேதி திறந்து வைத்தார்.[5]

வீடமைப்புப் பகுதிகள் தொகு

  • தாமான் ஐ.கே.எஸ். சிலாண்டார் II
  • கம்போங் சிலாண்டார்
  • தாமான் சிலாண்டார் பாரு
  • பெல்டா துன் காபா ஆயர் காங்கோங்

அருகாமை நகரங்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிலாண்டார்&oldid=3554237" இருந்து மீள்விக்கப்பட்டது