டெட்ராகுளோரோ அலுமினேட்டு

எதிர்மின் அயனி

டெட்ராகுளோரோ அலுமினேட்டு (Tetrachloroaluminate) என்பது [AlCl4] என்ற மூலக்கூற்று வாய்பாடால் அடையாளப்படுத்தப்படும் ஓர் எதிர்மின் அயனியாகும். அலுமினியமும் குளோரினும் சேர்ந்து இந்த அயனி உருவாகிறது. அயனி நான்முகி வடிவத்தில் காணப்படுகிறது. கார்பன் டெட்ராகுளோரைடு போலவே காணப்படும் இதன் அமைப்பில் கார்பனுக்குப் பதிலாக அலுமினியம் இடம்பெற்றுள்ளது. சில டெட்ராகுளோரோ அலுமினேட்டுகள் கரிமக் கரைப்பான்களில் கரையக்கூடியவையாகும். ஓர் அயனி நீர் அல்லாத கரைசலை உருவாக்கி, மின்கலங்களுக்கான மின்பகுளி கூறுகளாக அவை பொருத்துகின்றன. உதாரணமாக, இலித்தியம் மின்கலன்களில் இலித்தியம் டெட்ராகுளோரோ அலுமினேட்டு பயன்படுத்தப்படுகிறது.

டெட்ராகுளோரோ அலுமினேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
டெட்ராகுளோரோ அலுமினேட்டு(1–)
முறையான ஐயூபிஏசி பெயர்
டெட்ராகுளோரோ அலுமினேட்டு(1–)
வேறு பெயர்கள்
 
  • அலுமினேட்டு(1-), டெட்ராகுளோரோ
  • டெட்ராகுளோரிடோ அலுமினேட்டு(1-)
  • டெட்ராகுளோரோ அலுமினேட்டு(1-);
  • டெட்ராகுளோரோ அலுமேனைடு
இனங்காட்டிகள்
ChEBI CHEBI:30110
ChemSpider 10737456
Gmelin Reference
2297
InChI
  • InChI=1S/Al.4ClH/h;4*1H/q+3;;;;/p-4
    Key: BXILREUWHCQFES-UHFFFAOYSA-J
  • InChI=1S/Al.4ClH/h;4*1H/q+3;;;;/p-4
    Key: BXILREUWHCQFES-UHFFFAOYSA-J
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 3728926
  • Cl[Al-](Cl)(Cl)Cl
பண்புகள்
AlCl4
வாய்ப்பாட்டு எடை 168.78 g·mol−1
கட்டமைப்பு
மூலக்கூறு வடிவம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

உருவாக்கம்

தொகு

அலுமினியம் குளோரைடு வினையூக்கியாகப் பயன்படுத்தப்படும்போது, பீரீடல்-கிராஃப்ட்சு வினைகளில் டெட்ராகுளோரோ அலுமினேட்டு அயனிகள் இடைநிலைகளாக உருவாகின்றன. பிரீடல் -கிராஃப்ட்சு ஆல்க்கைலேற்ற நிகழ்வில் வினையை பின்வருமாறு மூன்று படிகளாகப் பிரிக்கலாம்: [1]

1. ஆல்க்கைல் ஆலைடு வலுவான இலூயிசு அமிலத்துடன் வினைபுரிந்து டெட்ராகுளோரோ அலுமினேட் அயனி மற்றும் ஆல்க்கைல் குழுவைக் கொண்ட ஒரு செயல்படுத்தப்பட்ட மின்னணு கவரியை உருவாக்குகிறது.

 

2. அரோமாட்டிக் வளையம் (இந்த நிகழ்வில் பென்சீன்) செயல்படுத்தப்பட்ட மின்னணு கவரியுடன் வினைபுரிந்து ஆல்க்கைல் பென்சீனியம் கார்பன் நேர்மின் அயனியை உருவாக்குகிறது.

 

3. ஆல்க்கைல் பென்சீனியம் கார்பன் நேர்மின் அயனி டெட்ராகுளோரோ அலுமினேட் அயனியுடன் வினைபுரிந்து, அரோமாட்டிக் வளையம் மற்றும் இலூயிசு அமிலத்தை மீண்டும் உருவாக்கி ஐதரோகுளோரிக் அமிலத்தை (HCl) உருவாக்குகிறது.

 

பிரீடல் கிராப்ட்சு அசைலேற்ற வினையிலும் இதே போன்ற ஒரு வழிமுறை நிகழ்கிறது.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "electrophilic substitution - the alkylation of benzene". www.chemguide.co.uk. பார்க்கப்பட்ட நாள் 2020-09-07.
  2. Friedel-Crafts Acylation. Organic-chemistry.org. Retrieved on 2014-01-11.