டெர்பியம் ஆக்சலேட்டு
டெர்பியம் ஆக்சலேட்டு (Terbium(III) oxalate) என்பது Tb2(C2O4)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். டெர்பியத்தின் ஆக்சலேட்டு சேர்மமாக இது வகைப்படுத்தப்படுகிறது. டெர்பியம் (III) குளோரைடு சேர்மத்துடன் ஆக்சாலிக் அமிலத்தின் நீர்த்த கரைசலைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் டெர்பியம் ஆக்சலேட்டின் டெக்கா ஐதரேட்டு உருவாகும்.[1] இந்த டெக்கா ஐதரேட்டை வெப்பமடையும் போது படிப்படியாக தண்ணீரை இழந்து நீரற்றதாக மாறும். தொடர்ந்து சூடாக்குவது டெர்பியம்(III,IV) ஆக்சைடைக் கொடுக்கும்.[3] இது காற்றில் இருந்து தனித்தனியாக சிதைந்து டெர்பியம்(III) ஆக்சைடை உருவாக்குகிறது. சிதைவடைந்த வாயு கார்பன் மோனாக்சைடையும் கார்பன் டை ஆக்சைடையும் கொடுக்கிறது. டெர்பியம் ஆக்சலேட்டு ஐதரோகுளோரிக் அமிலத்துடன் வினைபுரிந்து H[Tb(C2O4)2]·6H2O.[4] சேர்மத்தைக் கொடுக்கிறது.
| |||
| |||
இனங்காட்டிகள் | |||
---|---|---|---|
996-33-8 | |||
ChemSpider | 144445 | ||
EC number | 213-632-9 | ||
InChI
| |||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 164770 | ||
| |||
பண்புகள் | |||
Tb2(C2O4)3 | |||
தோற்றம் | வெண் திண்மம், புற ஊதா ஒளியில் பச்சை(டெக்கா ஐதரேட்டு)[1] | ||
தீங்குகள் | |||
GHS pictograms | |||
GHS signal word | அபாயம் | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Alexander, Dinu; Thomas, Kukku; Sisira, S.; Biju, P.R.; Unnikrishnan, N.V.; Ittyachen, M.A.; Joseph, Cyriac (January 2018). "Synthesis and optical characterization of sub-5 nm Terbium oxalate nanocrystals: A novel intense green emitting phosphor". Dyes and Pigments 148: 386–393. doi:10.1016/j.dyepig.2017.09.029.
- ↑ "Diterbium trioxalate". pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 7 March 2024.
- ↑ Wendlandt, W. W. (1959). "Thermal Decomposition of Rare Earth Metal Oxalates". Analytical Chemistry 31 (3): 408–410. doi:10.1021/ac60147a024. பன்னாட்டுத் தர தொடர் எண்:0003-2700.
- ↑ Moebius, R.; Matthes, F. The exchange of oxalate ions for chloride ions of the oxalate hydrates of the rare earths and yttrium. Zeitschrift fuer Chemie, 1964. 4 (6): 234-235. ISSN: 0044-2402.