டெஸ்மண்ட் ஹெய்ன்ஸ்
டெஸ்மண்ட் லியோ ஹெய்ன்ஸ் (Desmond Leo Haynes) (பிறப்பு பெப்ரவரி 15, 1956) என்பவர் மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணியின் முன்னாள் வீரர் ஆவார். இவர் 1991 ஆம் ஆண்டின் விசுடன் நாட்குறிப்பின் சிறந்த துடுப்பாட்ட வீரராகவும் இடம்பெற்றார்.1980 ஆம் ஆண்டுகளில் இவர் கார்டன் கிரீனிஜ் என்பவருடன் இணைந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் மட்டையாடினார். இந்த இணை 6482 ஓட்டங்களை எடுத்துள்ளனர். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் எடுத்துள்ள இணைகளின் வரிசையில் இவர்கள் மூன்றாவது இடத்தினைப் பிடித்தனர்.[1] இவர் 116 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 7487 ஓட்டங்களை 42.29 எனும் மட்டையாட்ட விகிதத்தில் எடுத்துள்ளார். 1980 ஆம் ஆண்டில் இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் 184 ஓட்டங்கள் எடுத்ததே அதிகபட்ச ஓட்டமாகும்.ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் தனது அறிமுகப் போட்டியிலேயே நூறு ஓட்டங்களை எடுத்துள்ளார்.
2007 இல் டெஸ்மண்ட் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | டெஸ்மண்ட் லியோ ஹெய்ன்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 15 பெப்ரவரி 1956 செயிண்ட் ஜேம்ஸ், பார்படோசு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலது கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலது கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 163) | 3 மார்ச் 1978 எ. ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | 13 ஏப்ரல் 1994 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 25) | 22 பெப்ரவரி 1978 எ. ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | 5 மார்ச் 1994 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
1976–1995 | பார்படோசு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
1983 | ஸ்காட்லாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
1989–1994 | மிடில்செக்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
1994–1997 | மேற்கு மாகாணம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: Cricinfo, 4 பெப்ரவரி 2010 |
சர்வதேசப் போட்டிகள்
தொகு1978 ஆம் ஆண்டில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. மார்ச் 3 இல் போர்ட் ஆஃப் ஸ்பெயினில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 75 பந்துகளில் 61 ஓட்டங்கள் எடுத்து ஹிக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதில் 7 நான்கு ஓட்டங்களும் 2 ஆறோட்டங்களும் அடங்கும். இந்தப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி ஒரு ஆட்டப்பகுதி மற்றும் 106 ஓட்டங்களில் வெற்றி பெற்றது. இதே தொடரில் இந்த அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியிலும் இவர் அறிமுகமானார். தனது அறிமுகப் போட்டியிலேயே 148 ஓட்டங்கள் எடுத்தார். இதன்மூலம் அறிமுகப் போட்டியில் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர் மற்றும் விரைவாக அறிமுகப் போட்டியில் நூறு ஓட்டங்கள் எடுத்தவர் ஆகிய சாதனைகளைப் படைத்தார்.[2] இந்தச் சாதனை தற்போது வரை எந்த வீரராலும் முறியடிக்கப்படவில்லை. 1979 ஆம் ஆண்டில் நடைபெற்ற துடுப்பாட்ட உலகக் கிண்ணத் தொடரில் கோப்பை வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணியில் இவர் இடம் பெற்றிருந்தார். மேலும் 1983, 1987 மற்றும் 1992 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடர்களிலும் இவர் விளையாடினார்.25 ஆவது போட்டித் தொஅரில் இவர் 854 ஓட்டங்களை 37.13 எனும் மட்டையாட்ட விகித்ததில் எடுத்தார். அதில் மூன்று அரை நூறு மற்றும் ஒரு நூறு ஓட்டங்களும் அடங்கும். டிசம்பர் 10, 2013 அன்றைய கணக்கின்படி ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் தனது முதல் மற்றும் இறுதி போட்டிகளில் நூறு ஓட்டங்கள் எடுத்த இரண்டு வீரர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணியின் டென்னிஸ் அமிஸ் மற்றொரு வீரர் ஆவார்.1994 ஆம் ஆண்டில் இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணி மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. ஏப்ரல் 8 இல் பிரிட்ஸ்டவுனில் இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான நான்காவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் இறுதியாக விளையாடினார். போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 51 பந்துகளில் 35 ஓட்டங்கள் எடுத்து ஃபிரேசர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் 42 பந்துகளில் 15 ஓட்டங்கள் எடுத்து டஃப்னெல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 208 ஓட்டங்களில் வெற்றி பெற்றது.
சான்றுகள்
தொகு- ↑ ESPNCricinfo (2011). ESPNCricinfo Partnership records. Retrieved 20 August 2011.
- ↑ http://stats.espncricinfo.com/ci/content/records/233754.html