டெஸ்மோப்பிரஸ்ஸின்

டெஸ்மோப்பிரஸ்ஸின் DDAVP என்ற வணிகப்பெயரில் விற்கப்படுகிறது.இம்மருந்து நீரிழிவு நோய், படுக்கையில் சிறுநீர் கழித்தல், இரத்தப்போக்கு (ஹீமோஃபிலியா-A), வான் வில்லிபிரண்டு நோய், மற்றும் இரத்தத்தில் அதிக யூரியா, போன்ற நோய்களை குணப்படுத்தப்பயன்படுகிறது. ஹீமோஃபிலியா-A, வான் வில்லிபிரண்டு நோய்களுக்கு, தீவிரமில்லாத நிலையிலிருந்து மிதமான நிலைகளில் உள்ளவர்களுக்கு மட்டுமே இதனை பயன்படுத்தவேண்டும். இதனை மூக்குவழியாகவோ, நரம்புக்குள் ஊசி மூலமாகவோ, வாய் வழியாகவோ அல்லது நாவிற்கடியிலோ கொடுக்கலாம்.

டெஸ்மோப்பிரஸ்ஸின்
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர்
(2S)-N-[(2R)-1-[(2-amino-2-oxoethyl)amino]-5-
(diaminomethylideneamino)-1-oxopentan-2-yl]-1-
[(4R,7S,10S,13S,16S)-7-(2-amino-2-oxoethyl)-10-
(3-amino-3-oxopropyl)-16-[(4-hydroxyphenyl)methyl]-
6,9,12,15,18-pentaoxo-13-(phenylmethyl)1,2-dithia-
5,8,11,14,17-pentazacycloicosane-4-carbonyl]
pyrrolidine-2-carboxamide
மருத்துவத் தரவு
வணிகப் பெயர்கள் DDAVP, Minirin, others
AHFS/திரக்ஃசு.காம் ஆய்வுக் கட்டுரை
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை B2(AU) B(US)
சட்டத் தகுதிநிலை POM (UK) ?-only (அமெரிக்கா)
வழிகள் IV, IM, SC, intranasal, by mouth, under the tongue
மருந்தியக்கத் தரவு
உயிருடலில் கிடைப்பு Variable; 0.08–0.16% (by mouth)
புரத இணைப்பு 50%
அரைவாழ்வுக்காலம் 1.5–2.5 hours
கழிவகற்றல் சிறுநீரகம்
அடையாளக் குறிப்புகள்
CAS எண் 16679-58-6 Y
ATC குறியீடு H01BA02
பப்கெம் CID 5311065
IUPHAR ligand 2182
DrugBank DB00035
ChemSpider 4470602 N
UNII ENR1LLB0FP Y
மரபணுக்கள் மற்றும் மரபணுத்தொகுதிகளின் கியோத்தோ கலைக்களஞ்சியம் D00291 Y
ChEMBL CHEMBL376685 Y
வேதியியல் தரவு
வாய்பாடு C46

H64 Br{{{Br}}} N14 O12 S2  

மூலக்கூற்று நிறை 1069.22 g/mol
SMILES eMolecules & PubChem
  • InChI=1S/C46H64N14O12S2/c47-35(62)15-14-29-40(67)58-32(22-36(48)63)43(70)59-33(45(72)60-18-5-9-34(60)44(71)56-28(8-4-17-52-46(50)51)39(66)53-23-37(49)64)24-74-73-19-16-38(65)54-30(21-26-10-12-27(61)13-11-26)41(68)57-31(42(69)55-29)20-25-6-2-1-3-7-25/h1-3,6-7,10-13,28-34,61H,4-5,8-9,14-24H2,(H2,47,62)(H2,48,63)(H2,49,64)(H,53,66)(H,54,65)(H,55,69)(H,56,71)(H,57,68)(H,58,67)(H,59,70)(H4,50,51,52)/t28-,29+,30+,31+,32+,33+,34+/m1/s1 N
    Key:NFLWUMRGJYTJIN-PNIOQBSNSA-N N

தலைவலி, வயிற்றுப்போக்கு மற்றும் இரத்த சோடிய அளவு குறைவு போன்றவை பொதுவான பக்கவிளைவுகள் ஆகும். இரத்த சோடிய அளவு குறையும்போது காக்காய் வலிப்பு நோயை இது ஏற்படுத்துகிறது. இதனை சிறுநீரக கோளாறு உள்ளவர்கள் அல்லது இரத்த சோடிய அளவு குறைபாடு உள்ளவர்கள் பயன்படுத்தக்கூடாது. கர்ப்பகாலத்தில் இதனை பயன்படுத்துவது பாதுகாப்பனது என கருதுகிறார்கள். இது வேசோப்பிரஸ்ஸினின் செயற்கை விருத்தாந்தம் ஆகும். சோப்பிரஸ்ஸின் என்பது சிறுநீர் உற்பத்தியை குறைக்கும் ஹார்மோன் ஆகும்.

டெஸ்மோப்பிரஸ்ஸின் ஜக்கியநாடுகளின் மருத்துவ பயன்பாட்டிற்காக 1978ல் அனுமதி பெறப்பட்டது. இது உலக சுகாதார நிறுவன முக்கிய மருந்துகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. மேலும் சுகாதார முறையில் அதிக நற்பயனளிக்கக்கூடிய மற்றும் பாதுகாப்பான மருந்தாக உள்ளது. இது பொதுவான மருந்தாக கிடைக்கிறது. ஜக்கியநாடுகளில் குறிப்பிட்ட மாதங்களில் இதன் விற்பனை 100 லிருந்து 200 USD வரை உள்ளது.

மருத்துவ பயன்பாடுகள் தொகு

படுக்கையில் சிறுநீர் கழித்தல் தொகு

டெஸ்மோப்பிரஸ்ஸின் நாக்டர்னல் எனுரெஸிஸை (படுக்கையில் சிறுநீர் கழித்தல்) குணப்படுத்தப்பயன்படுகிறது. இது பொதுவாக டெஸ்மோப்பிரஸ்ஸின் அஸிடேட் என்ற வடிவில் வாய் வழியாக உட்கொள்ளும் மருந்தாக எழுதி கொடுக்கப்படுகிறது. குழந்தைகள் DDAVPயை எடுத்துக்கொள்ளும்போது ஒரு வாரத்திற்கு ஈர இரவு 2.2 ஆகவும், மருந்துப்போலியோடு ஒப்பிடும்போது, தொடர்ந்து தூங்கும்பட்சத்தில் 4.5 ஆகவும் உள்ளது.

இரவில் சிறுநீர் கழித்தல் தொகு

இரவில் சிறுநீர் கழிக்கும் பிரச்சனை (நாக்டூரியா) உள்ள இளம்வயதினர்களுக்கு டெஸ்மோப்பிரஸ்ஸின் சில நன்மை அளிக்கிறது. FDAவானது அதிகமாக சிறுநீர் கழிக்கும் பிரச்சனை உள்ளவர்களுக்கு இதை பயன்படுத்தலாம் என்று அனுமதி வழங்கியுள்ளது.

உறைதலில் கோளாறு தொகு

என்டோதீலியல் செல்களையுடய வீபெல் பேலட் உடலங்களிலிருந்து வான் வில்லிபிரண்ட் காரணியை (vWF) வெளியிட டெஸ்மோப்பிரஸ்ஸின் (DDAVP) தூண்டுகிறது. இதனால் vWF (உறைதல் காரணி VIII) 3 லிருந்து 5 வது ஃபோல்டுக்குக்கு உயருகிறது. உறைதலில் கோளாறு உள்ள நோயளிகளான வான் வில்லிபிரண்ட் நோய், தீவிரமில்லாத ஹீமோஃபிலியா-A (காரணி VIII குறைபாடு) நோய் மற்றும் திரம்போசைட்டோநீயா போன்றவைகளுக்கு வில்லிபிரண்ட் காரணியை வெளியிட டெஸ்மோப்பிரஸ்ஸினை பயன்படுத்தலாம். யூரிமிக் இண்டியூஸ்ட் பிளேட்லெட் செயல்படாமையை சரிசெய்ய இது பயன்படுகிறது. ஹீமோஃபிலியா-B (காரணி IX குறைபாடு) அல்லது தீவிரமான ஹீமோஃபிலியா-Aவை குணப்படுத்துவதில் நல்ல விளைவை ஏற்படுத்துவதில்லை.

ஹீமோஃபிலியா-Aவில் டெஸ்மோப்பிரஸ்ஸின் பயனானது குணம்சார்ந்த குறைபாட்டிலோ (அதாவது செயல் திடீர் மற்றத்தினுடைய புரதத்திலேயே உள்ளது) அல்லது அளவு சார்ந்த குறைபாட்டிலோ (செயல்படும் சாதரண புரத உற்பத்தி குறைபாட்டிலோ) என்பதை பொறுத்தமைகிறது. டெஸ்மோப்பிரஸ்ஸின் அளவு சார்ந்த குறைபாடுடைய நோயளிகளுக்கு அதிக பயனை அளிக்கிறது. ஏனெனில் vWFன் வெளியீட்டை அதிகரிப்பதனாலும், செயல்படும் காரணி VIII னுடைய சுழல்தொகுப்பை அதிகரிப்பதனால் ஆகும். காரணி VIIIல் செயல்பாட்டு குறைபாடு உள்ள நோயளிகளுக்கு டெஸ்மோப்பிரஸ்ஸினை பயன்படுத்துவது விவாதத்திற்குரியது, ஏனெனில் செயல்படாத புரதத்தினையுடைய சுழல் அளவீட்டினை மட்டுமே அதிகப்படுத்தலாம்.

டயபெட்டிஸ் இன்சிபிடஸ் (நீரிழிவு நோய்) தொகு

டெஸ்மோப்பிரஸ்ஸின் மத்திய நீரிழிவு நோயை(DI) குணப்படுத்தப்பயன்படுகிறது. இது என்டோஜீனஸ் ஆன்ட்டி டையூரிட்டிக் ஹார்மோன் (ADH)க்கு மற்றாக உள்ளது. பின்புற பிட்யூட்டரி அல்லது ஹைப்போதலாமஸினால் உற்பத்தியாகும் ADHன் உற்பத்தி குறைவிற்கு காரணம் சுரக்காமலிருத்தல், போதுமான அளவு இல்லாமலிருத்தலே காரணம். இது டயபெட்டிஸ் இன்சிபிடஸ்யை (நீரிழிவு நோய்) நிர்ணயம் செய்யவும், மத்திய நீரிழிவு நோயிலிருந்து (DI) வேறுபடுத்தவும் உதவுகிறது. பொதுவாக இது நெஃப்ரோஜெனிஸிஸ் உடைய சுட்டிகாட்டியாகவுள்ளதால், இது நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

பக்கவிளைவுகள் தொகு

  • தலை வலி
  • முகம்சிவந்து போதல்
  • வாந்தி எடுக்க வேண்டிமென்ற உணர்வு( நாசியா)
  • ஹைப்போ நெட்ரீமியா
  • காக்காய் வலிப்பு

நேசல் ஸ்பிரே எடுத்துக்கொண்டதனால், இருவர் மரணமடைந்து, மேலும் 59 பேர் காக்காய் வலிப்பால் பாதிக்கப்பட்டதால், ஐக்கியநாடுகளின் மருத்துக்கட்டுப்பாட்டாளர்கள் எச்சரிக்கைவிடுத்தனர். இது ஹைப்போ நெட்ரீமியா, உடல் சோடிய அளவு குறைபாட்டினால் நேரிட்டது. இந்நிகழ்விற்குப்பின்பு ஐக்கியநாடுகளின் குழந்தைகளுக்கு நேசல் ஸ்பிரே பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டது. இருந்தபோதிலும், ஐக்கியநாடுகளின் மருத்துக்கட்டுப்பாட்டாளர்கள் டெஸ்மோப்பிரஸ்ஸின் மாத்திரைகளை இப்போதும் குழந்தைகளுக்கு ஏற்படும் நாக்டர்னல் எனுரெஸிஸை குணப்படுத்த, நலமுடன் இருக்கும் பட்சத்தில், பயன்படுத்த பாதுகப்பானது என கூறுகிறது.

டெஸ்மோப்பிரஸ்ஸின் பயன்படுத்தும் நோயளிகளுக்கு தீவிர வாந்தி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல், தீவிர சளி, ஆகியவை ஏற்படும்போது, கண்டிப்பாக இதை எடுத்துக்கொள்வதை நிறுத்த வேண்டும். வெப்பமான சீதோஷ்ண நிலை, ஊக்கமுள்ள உடற்பயிற்சியின்போது, உடலின் எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் நீர் சமனிலையில் அழுத்தம் ஏற்படும்போது, இதை எடுத்துக்கொள்வதை பற்றி எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

உடலானது நீர் மற்றும் சோடிய அளவினை சமனிலை படுத்துவது அவசியமாகிறது. அதிக நீர் உட்கொள்ளல் அல்லது உப்பின் அளவு குறையும்போது, சோடிய அளவானது அதிகம் குறைகிறது (ஹைப்போ நெட்ரீமிய), இதனால் அந்நபருக்கு காக்காய் வலிப்பு ஏற்படலாம், இது அதிகமாகும்போது இறக்கவும் நேரிடலாம்.

செயல் படும் விதம் தொகு

டெஸ்மோப்பிரஸ்ஸின் அல்லது ஆன்ட்டி டையூரிட்டிக் ஹார்மோன் (ADH) நீரை சிறுநீரில் வெளியேற்றுவதன் மூலம் நீரின் அளவை கட்டுப்படுத்துகிறது. இது V2 ஏற்பிகளோடு இணைவதால், சிறுநீரக சேகரிப்பு குழாய் அளவுகளில் இது செயல்படுகிறது. அக்வாஃபோரின் சேனல் இடப்பெயர்வுகான சைகையை எபிகல் சவ்வினுடய சேகரிப்பு குழாயுக்கு சிஸ்டோலிக் வெஸிக்கிள் மூலமக தருகிறது. டிஸ்டல் நெஃரானிலுள்ள அக்வாஃபோரின் சேனலானது, சிறுநீரிலிருந்து, நீரின் மீள்உரிஞ்சுதலை அதிகப்படுத்துகிறது. இதனால் நெஃரானிலிருந்து சிஸ்டமேடிக் சுழற்சிக்கு திரும்ப பேசோலேட்ரல் சவ்வு சேனல் வழியாக மெதுவாக அனுப்பப்படுகிறது. டெஸ்மோப்பிரஸ்ஸின் என்டோதீலியல் செல்லிலிருந்து V2 ஏற்பியின் மீது செயல்பட்டு வான் வில்லிபிரண்ட் காரணியை தூண்டுகிறது. மறுசேர்க்கை வேசோப்பிரஸ்ஸினை விட டெஸ்மோப்பிரஸ்ஸின் வெகு மெதுவாக சிதைவடைகிறது. மேலும் வேசோப்பிரஸ்ஸினை ஆர்டீரியல் ஹைபர்டென்ஷன் ஏற்படும்போது, இது இரத்த அழுத்தத்தின் மீது, சிறிய விளைவை ஏற்படுத்துகிறது. வேசோப்பிரஸ்ஸின் ACTH வெளியீட்டை தூண்டுகிறது. இதனால் மறைமுகமாக, மிருதுவான தசைகளிலுள்ள இரத்த குழாய்களில் ஆல்ஃபா –I ஏற்பியை, வெசல் டோன் மற்றும் இரத்த அழுத்தத்தை அதிகப்படுத்துகிறது. டெஸ்மோப்பிரஸ்ஸின் ACTH வெளியீட்டை தூண்டுவதில்லை என பல ஆய்வுகள் காட்டுகிறது (குஷீங் நோய் தவிர). மேலும் இது இரத்த அழுத்தத்தை நேரடியாக ஏற்படுத்தாமலிருந்தாலும், சுகாதாரமாக இருக்கும் பட்சத்தில், 50% ACTH வெளியீட்டை தூண்டுகிறது என, ஒரு ஆய்வானது காட்டுகிறது. டெஸ்மோப்பிரஸ்ஸின் ACTHயை தூண்டவல்லது. சாதரண நிலையில் oCRH நிர்வகிக்கும்போது, கார்ட்டிசசோலை வெளியிடுகிறது. ஆனால் அனரெக்ஸியா நெர்வோசா நோயாளிகளுக்கு மட்டும் இல்லை.

வேதியியல் தொகு

சாதாரண மனித ஹார்மோன் ஆர்ஜினைன் வேசோப்பிரஸ்ஸினிலிருந்து டெஸ்மோப்பிரஸ்ஸின்(1-டெஸ் அமினோ-8-D ஆர்ஜினைன் வேசோப்பிரஸ்ஸின்) மனிதனால் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் பெப்டைடில் ஒன்பது அமினோ அமிலங்கள் உள்ளன. வேசோப்பிரஸ்ஸினோடு ஒப்பிடும்போது, டெஸ்மோப்பிரஸ்ஸினின் முதலாவது அமினோ அமிலம் டீ அமினேட்டானது. மேலும் ஆர்ஜினைன் எட்டாவது இடத்தில் டெக்ஸ்ட்ரோ வடிவத்தில் இல்லாமல் லீவோ வடிவத்தில் உள்ளது. (ஸ்டீரியோ கெமிஸ்ட்ரியை பார்க்கவும்)

மேற்கோள்கள் தொகு

[1]

  1. "Desmopressin Acetate". The American Society of Health-System Pharmacists. Retrieved 2 December 2016. Jump up ^ "WHO Model List of Essential Medicines (19th List)" (PDF). World Health Organization. April 2015. Retrieved 8 December 2016. Jump up ^ Hamilton, Richart (2015). Tarascon Pocket Pharmacopoeia 2015 Deluxe Lab-Coat Edition. Jones & Bartlett Learning. p. 233. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781284057560. Jump up ^ Evans, JH (2001). "Evidence based management of nocturnal enuresis". BMJ (Clinical research ed.). 323 (7322): 1167–9. PMC 1121645 Freely accessible. PubMed. doi:10.1136/bmj.323.7322.1167. Jump up ^ "La prise en charge de l’énurésie nocturne primaire". Paediatr Child Health. 10 (10): 616–620. 2005. PMC 2722621 Freely accessible. PubMed. Jump up ^ Ebell, MH; Radke, T; Gardner, J (Sep 2014). "A systematic review of the efficacy and safety of desmopressin for nocturia in adults.". The Journal of Urology. 192 (3): 829–35. PubMed. doi:10.1016/j.juro.2014.03.095. ^ Jump up to: a b Commissioner, Office of the. "Press Announcements - FDA approves first treatment for frequent urination at night due to overproduction of urine". www.fda.gov. Jump up ^ 2 Deaths Spur sleep apnea Drug Warning. Webmd.com (2007-12-04). Retrieved on 2011-04-18. Jump up ^ [1] Archived December 13, 2007, at the Wayback Machine. Jump up ^ Friedman FM, Weiss JP (December 2013). "Desmopressin in the treatment of nocturia: clinical evidence and experience". Ther Adv Urol. 5 (6): 310–7. PMC 3825109 Freely accessible. PubMed. doi:10.1177/1756287213502116. Jump up ^ Pecori Giraldi, F; Marini, E; Torchiana, E; Mortini, P; Dubini, A; Cavagnini, F (June 2003). "Corticotrophin-releasing activity of desmopressin in Cushing's disease: lack of correlation between in vivo and in vitro responsiveness.". The Journal of endocrinology. 177 (3): 373–9. PubMed. doi:10.1677/joe.0.1770373. Jump up ^ Colombo, P; Passini, E; Re, T; Faglia, G; Ambrosi, B (June 1997). "Effect of desmopressin on ACTH and cortisol secretion in states of ACTH excess.". Clinical endocrinology. 46 (6): 661–8. PubMed. doi:10.1046/j.1365-2265.1997.1330954.x. ^ Jump up to: a b Foppiani, L; Sessarego, P; Valenti, S; Falivene, MR; Cuttica, CM; Giusti Disem, M (October 1996). "Lack of effect of desmopressin on ACTH and cortisol responses to ovine corticotropin-releasing hormone in anorexia nervosa.". European journal of clinical investigation. 26 (10): 879–83. PubMed. doi:10.1111/j.1365-2362.1996.tb02133.x. Jump up ^ Scott, LV; Medbak, S; Dinan, TG (November 1999). "ACTH and cortisol release following intravenous desmopressin: a dose-response study.". Clinical endocrinology. 51 (5): 653–8. PubMed. doi:10.1046/j.1365-2265.1999.00850.x.

மேலும் படிக்க தொகு

  • Leissinger, C; Becton, D; Cornell, C Jr; Cox Gill, J (2001). "High-dose DDAVP intranasal spray (Stimate) for the prevention and treatment of bleeding in patients with mild haemophilia A, mild or moderate type 1 von Willebrand disease and symptomatic carriers of haemophilia A.". Haemophilia 7 (3): 258–66. doi:10.1046/j.1365-2516.2001.00500.x. பப்மெட்:11380629. 

Oxytocin and vasopressin receptor modulators

Category:Hormonal agents Category:Peptides Category:Vasopressin receptor agonists Category:World Health Organization essential medicines Category:World Anti-Doping Agency prohibited substances Category:RTT Category:Antidiuretics

"https://ta.wikipedia.org/w/index.php?title=டெஸ்மோப்பிரஸ்ஸின்&oldid=3539265" இலிருந்து மீள்விக்கப்பட்டது