கழிவு மேலாண்மை

(கழிவகற்றல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கழிவுப்பொருள் மேலாண்மை (Waste management) என்பது கழிவுப்பொருட்களை சேகரித்தல், கொண்டுசெல்லுதல், பாதிப்பில்லாத உருவுக்கு மாற்றல், மீள் சுழற்சிக்குள்ளாக்குதல் அல்லது நீக்குதல், மற்றும் கழிவுப்பொருட்களை கண்காணித்தல்[1] ஆகிய செயற்பாடுகளை உள்ளடக்கியதாகும். இந்தச் சொல் பொதுவாக மனித செயல்பாடுகளால் விளையும் கழிவுப் பொருட்களைக் கையாள்வதைக் குறிக்கும். மேலும் கழிவுப்பொருட்களால் மனிதனின் உடல்நலம், சுற்றுச்சூழல் அல்லது அழகியல் தன்மை ஆகியவற்றில் ஏற்படும் பாதிப்பை முடிந்த அளவு தடுக்கவோ குறைக்கவோ கழிவு மேலாண்மை மேற்கொள்ளப்படுகிறது. வள ஆதாரங்களை கழிவுப்பொருட்களில் இருந்து மீட்பதற்கும் கழிவுப்பொருள் நிருவாகம் தேவை. கழிவுப்பொருள் நிருவாகத்தில் தின்ம, நீர்ம, வளிம கழிவுகளையும் சில வேளைகளில் கதிரியக்கப் பொருட்களையும் கையாள வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படலாம். ஒவ்வொருவகை கழிவுக்கும் அதற்கேற்ற தனிப்பட்ட முறைகளை அதற்கான வல்லுநர்களின் உதவியுடன் கவனத்துடன் செயலாற்ற வேண்டும்.

இங்கிலாந்தில் பெர்க்சைரில் உள்ள ஒரு மூடுதொட்டி
நேபாளத்தில் உள்ள காட்மண்டுவில் கழிவுப்பொருள் மேலாண்மை

கழிவு மேலாண்மை முறைகளானவை மேம்பாடு அடைந்த நாடுகள், மேம்பாடு அடைந்து வரும் நாடுகள், நகர்ப்புறம், கிராமப்புறம், குடியிருப்பு இடங்கள் மற்றும் தொழிலகங்கள் போன்ற ஒவ்வொரு நிலையிலும் வேறுபடும். நகரப்புறங்களில், இடர் விளையாத குடியிருப்பு மற்றும் அலுவலகக் கழிவுகளை அகற்றும் பொறுப்பு நகராட்சியினுடையதாகும். இடர் விளையாத வணிக, வணிகரீதியிலான மற்றும் தொழில்நிறுவனங்களில் இருந்து வெளிப்படும் கழிவுப்பொருட்களை தகுந்த முறையில் மீட்டு அகற்ற அவற்றின் உற்பத்தியாளர்கள் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும்.

முறைகள்

தொகு

நீக்கல் முறைகள்

தொகு

குப்பைநிரப்பு நிலம்

தொகு
 
ஹவாயியில் கழிவு உர நிரப்பு நிலத்தில் நடவடிக்கை

கழிவுப்பொருட்களை ஒரு குப்பை நிரப்பு நிலத்தில் நிரப்புவது என்பது கழிவுப்பொருட்களை (குப்பையை) குழியிலிட்டுப் புதைப்பதாகும். இந்த நடைமுறை பல்வேறு நாடுகளில்பொதுவாகக் காணப்படுகிறது. குப்பை நிரப்புநிலங்களுக்காக கைவிட்ட அல்லது பயன்பாட்டில் இல்லாத கற்சுரங்கங்கள், சுரங்கவியல் குழிகள் அல்லது அயலிடக் குழிகள் போன்றவை தேர்ந்தெடுக்கப்படுகின்றன. சரியான முறையில் வடிவமைக்கப் பெற்ற மற்றும் நன்கு நிர்வகிக்கப்பெற்ற குப்பை நிரப்பு நிலமானது, கழிவுப்பொருள்களை அகற்ற அல்லது நீக்க, சுகாதாரமானதாகவும் ஒப்பீட்டளவில் குறைந்த செலவுடையதாகவும் இருக்கும். பழைய சரியாக வடிவமைக்காத அல்லது சரியாக நிர்வகிக்காத குப்பைநிரப்பு நிலங்கள் காரணமாக பலவகையான எதிரிடையான சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படுகிறது. எ.கா: காற்று அடித்துச்சென்ற குப்பையானது ஏற்கெனவே சுத்தம் செய்த இடங்களில் பரவி மீண்டும் சுத்தம் செய்ய வைக்கும் நிலைமையை உருவாக்குதல், ஊறுவிளைவிக்கும் பூச்சிகளை ஈர்ப்பது, மற்றும் வேதிப்பொருட்கள் கலந்த கழிவுநீர் முதலானவை. குப்பைநிரப்பு நிலங்களில் பொதுவாக கிடைக்கப்பெறும் பக்க விளைபொருளான வளி, (மீத்தேன் வாயு மற்றும் கரியமில வாயு), கரிம கழிவுப்பொருட்களை காற்றிலா முறையில் மக்கி உருச்சிதைக்கும் போது உற்பத்தியாகின்றன. இந்த வளியானது துர்நாற்றமடிக்கும் பிரச்சினை கொண்டது, மேல்பரப்பில் தாவரங்களின் வளர்ச்சியை குன்றவைக்கும் தன்மையுடையது, மற்றும் இவை பைங்குடில் வளிகளாகும்.

 
ஒரு கழிவு உர நிரப்பு நிலத்தில் கெட்டிப்பு செய்யும் வாகனம் பணியில்

ஒரு நவீன குப்பைநிரப்பு நில வடிவமைக்கும் முறையின் சிறப்பியல்பு, களிமண் அல்லது பிளாஸ்டிக்கால் ஆன அக உறைகள் (lining) கொண்ட தொட்டிகளை திரவக்கரைச்சல் வெளியேறாமலிருக்க தொட்டிகளுக்கு உள்ளேயே அடக்குவதற்காக அமைப்பதாகும். படிந்திடும் கழிவுப்பொருட்கள் பொதுவாக திடமான கட்டியாகவும், அதன் அடர்த்தி மற்றும் நிலைப்புத்தன்மை கூட்டியதாகவும் மற்றும் சுண்டெலிகள் மற்றும் எலிகள் போன்ற ஊறுவிளைபூச்சிகளால் பாதிப்பு ஏற்படாமலிருக்க, அதை சரியாக பொதிந்தும் வைக்க வேண்டும். பல குப்பைநிரப்பு நிலங்களில் வளியை பிரித்தெடுக்கும் முறைகள் அமைத்து அதன் மூலம் குப்பைநிரப்பு நில வளி பிரித்தெடுக்கப் படுகிறது. குப்பைநிரப்பு நில வளிகள் துளையிட்ட குழாய்கள் மூலமாக எக்கி (pumped) வெளியேற்றுகின்றனர். ஒரு வளி எந்திரத்தின் மூலமாக வளியை கிளரொளித்து அல்லது எரித்து அதன் மூலமாக மின்சாரம் தயாரிக்கிறார்கள்.

சாம்பலாக்குதல்

தொகு
 
வியன்னாவில் உள்ள ச்பிட்டெலு சாம்பலாக்கும் ஆலை.

இது கழிவுப்பொருட்களை எரித்து சாம்பல் மற்றும் வாயு மீதிகளாக அகற்றும் முறையாகும். எரிசூளைகள் கழிவுப்பொருட்களை வெப்பம், வளி, நீராவி மற்றும் சாம்பலாக மாற்றுகிறது. இதனால் திண்மக் கழிவுப்பொருள் நிறையளவில் 20-30 சதவீதம் வரைக்கும் குறைவடைகின்றது. இத்தகைய சாம்பலாக்குதல் மற்றும் ஏனைய மிகை வெப்பத்தில் கழிவுப்பொருட்களை பரிகாரப்படுட்தும் முறைகளும் "வெப்பப்பரிகார முறை"என அறியப்படுகிறது.

சிறு அளவில் தனிப்பட்ட மனிதர்களாலும், பெரிய அளவில் தொழிலகங்களாலும் கழிவுப்பொருட்கள் சாம்பலாக்கப்படுகின்றன. திட, திரவ மற்றும் வளிப்பொருளாக இருக்கும் கழிவுப்பொருட்களை இம்முறையில் அகற்றலாம். சில வகை இடர் விளையக்கூடிய கழிவுப்பொருட்களை (அதாவது உயிரியல் மற்றும் மருத்துவக் கழிவுப்பொருட்களை) அகற்ற இதுவே நடைமுறைக்கு ஒத்த அங்கீகாரம் பெற்ற அகற்றும் முறையாகும். சாம்பலாக்குதல் என்பது சர்ச்சைக்குரிய கழிவுப்பொருட்களை அகற்றும் முறையாகும், ஏன் என்றால் அதன் மூலம் வெளியாகும் வளிகள் கொண்ட மாசுபடுத்திகள் பிரச்சினைகளை எழுப்புவதாகும்.

ஜப்பான் போன்ற நாடுகளில், நிலம் கிடைப்பது அரிதாக இருப்பதால், கழிவை சாம்பலாக்கும் முறையையே பொதுவாக பின்பற்றுகிறார்கள், ஏன் என்றால் இதற்காக குப்பைநிரப்பு நிலத்தைப்போல மிகையான இடவசதிகள் தேவை இல்லாததாகும். கழிவுப்பொருளில் இருந்து சக்தி (WtE) அல்லது சக்தி கழிவுப்பொருளில் இருந்து (EfW) ஆனவை கழிவுப்பொருளை உலைக்களத்திலோ அல்லது கொதிகலனிலோ வெப்பத்தை ஏற்றுவதற்கோ, நீராவி அல்லது மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கோ எரிப்பதற்காக தேவைப்படும் வசதிகளை குறிக்கும் அகன்ற குறிச்சொற்கள் ஆகும். சாம்பலாக்கிகளில் எரிப்பது எப்பொழுதும் கச்சிதமாக நடப்பதில்லை. மேலும், வாயுப்பொருட்களாக வெளியேறும் நுண்ணிய மாசுபடுத்திகளால் பாதிப்பு ஏற்படலாம். சில நிலைத்த கரிமப்பொருட்கள் கவலைக்கு இடமளிக்கின்றன, எடுத்துக் காட்டாக டையோக்சின் போன்றவை சாம்பலாக்கிகளில் உற்பத்தியாகி வெளியேறினால் அருகாமையிலுள்ள சுற்றுப்புறம் பாதிக்கப்படும். மாறாக இந்த முறையில் உற்பத்தியாகும் வெப்பசக்தியை பயன்படுத்தலாம்.

மீள் சுழற்சி முறைகள்

தொகு

பிவிசி (PVC), எல்டிபிஈ (LDPE), பிபி (PP), மற்றும் பிஎஸ் (PS) (பிசின் அடையாளங்காட்டுதல் குறியைப் பார்க்கவும்) போன்றவைகளையும் மீள் சுழற்சி செய்யலாம், ஆனால் பொதுவாக அவற்றை சேகரிப்பதில்லை. இப்பொருட்கள் யாவும் ஒரே வகையான உட்பொருளைப் பொதிவாக கொண்டுள்ளது, அதனால் அவற்றை மீட்டு புதியதான பொருட்களை எளிதாக செய்யலாம். சிக்கலான பொருட்களை மீட்பது என்பது (கணினிகள் மற்றும் மின்னணுச் சாதனங்கள்) மேலும் கடினமானதாகும், ஏன் என்றால் கூடுதலாக அவற்றை கழற்றியெடுத்து அதன் பாகங்களை ஒவ்வொன்றாக பிரித்தெடுக்க வேண்டும்.

உயிரியல் மறுசீராக்கல்

தொகு
 
ஒரு செயல்பாட்டிலுள்ள குப்பையுரம் குவியல்.

செடிகளின் இலை தழை போன்ற பொருள்கள் (plant material), உணவுப்பொருள், காகிதப்பொருட்கள் போன்ற இயற்கையாகவே கரிமப்பொருளாக (organic) இருக்கும் கழிவுப்பொருள்கள், உயிரியல் ரீதியில் மக்குதல் (biological composting) மற்றும் செரித்தல் (digestion) போன்ற முறைகளைப் பயன்படுத்தி கரிமப்பொருளை மக்கி உருச்சிதைத்து (decompose) விடலாம். அதன் பயனாக கிடைக்கும் கரிமப்பொருளை மீள் சுழற்சிசெய்து தழைக்கூளம் (mulch) அல்லது கூட்டுரமாக (compost) வேளாண் மற்றும் நிலவடிவமைத்தல் (இயற்கை நிலக்காட்சி) போன்ற தேவைகளுக்கு பயன்படுத்தலாம். மேலும் கூடுதலாக, இந்த செய்முறை (process) மூலம் கழிவுப்பொருள் வாயுக்களை (மீத்தேன்) மீட்டு அவற்றைப் பயன்படுத்தி அதை மின்சாரம் உறபத்தி செய்வதற்கு பயன்படுத்தலாம். உயிரியல் மறுசீராக்கல் செயல்முறைகளை கழிவுப்பொருள் நிருவாகத்திற்கு பயன்படுத்துவதின் நோக்கம் (intention), இயற்கைவழியில் கரிமப்பொருட்களை உருச்சிதைப்பதை கட்டுப்படுத்தி மேலும் அதை விரைவுபடுத்துவதேயாகும்.

கூட்டுரமாக (compost) மாற்றும் முறையில் கழிவுப்பொருள் நிருவாகத்திற்கான ஒரு எடுத்துக்காட்டு கனடாவில் டொரோண்டோவில் உள்ள பச்சை மூடித்தொட்டி திட்டம் (Green Bin Program) ஆகும், இங்கே வீட்டுக் கரிமக் கழிவுப்பொருட்கள் (சமையலறைக் கழிவுகள் மற்றும் வெட்டிய செடிகள் போன்றவை) அதற்கான ஒரு தனிப்பட்ட பாத்திரத்தில் சேகரித்து குப்பையுரமாக்கப்படுகிறது.

தவிர்த்தல் மற்றும் குறைத்தல் முறைகள்

தொகு

கழிவுப்பொருள் நிருவாகத்தில் ஒரு முக்கியமான முறையானது கழிவுப்பொருள் உற்பத்தியாவதைக் குறைப்பது, அதைக் கழிவுப்பொருள் குறைப்பு என கூறுவார்கள். தவிர்த்தல் முறைகளில், இதற்கு முன் கையாண்ட பொருட்களை கூடிய வகையில் மீண்டும் மீண்டும் பயன்படுத்துதல், புதிதாக வாங்காமல் உடைந்த பொருட்களை சரிசெய்து மீண்டும் பயன்படுத்துவது, திரும்பவும் நிரப்பும்படியோ அல்லது பயன்படுத்தும்படியோ பொருட்களை வடிவமைப்பது, (எடுத்துக்காட்டாக பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக பருத்தியால் செய்த பைகளை பயன்படுத்துவது), நுகர்வோர்கள் ஒரு முறை பயன்படுத்தியபின் நிராகரித்துவிடும் பொருட்களைத் தவிர்ப்பது, (எடுத்துக்காட்டாக அப்புறப்படுத்தக்கூடிய வெட்டுக்கருவிகள்,) கெண்டிகளிலிருக்கும் மீதமுள்ள உணவு அல்லது திரவப்பொருட்களை அப்புறப்படுத்துவது, பொட்டலமிடுதல் போன்றவையாகும்.[2]

 
குப்பை சேகரிக்கும் பெண்

கல்வி மற்றும் விழிப்புணர்வு

தொகு

கழிவுப்பொருள் மற்றும் கழிவுப்பொருள் நிருவாகத்தைப் பொறுத்த வரை, கல்வி மற்றும் விழிப்புணர்வு பெறுதல் மிகவும் முக்கியமானதாகும், அதுவும் உலக அளவிலான வளங்களுக்கான நிர்வாகத்திற்கான கண்ணோட்டத்தில் மிகவும் முக்கியமானதாகும். தி தல்லோய்றேஸ் சாற்றுரை (The Talloires Declaration) என்பது நிலைநிறுத்தத்தக்க (sustainability) கொள்கையை சார்ந்தது, இன்றைய என்றுமில்லாத அளவிலும் வேகத்திலும் சுற்றுச்சூழல் மாசுபாடு அடைதல், இயற்கையின் தகுதி குறைப்பு, இயற்கை வளங்களின் பேரிழப்புபோன்றவையால் கவனம் ஈர்க்கப்பட்டு அதனால் ஏற்பட்ட சாற்றுரையாகும். உள்நாட்டு, வட்டார, மற்றும் உலக அளவிலான வளி மாசுபாடு; நஞ்சுப்பொருட்கள் குவிதல் மற்றும் விநியோகம்; காடுகளின் அழிவு மற்றும் அவற்றினால் ஏற்பட்ட பேரழிவு, நிலம், மற்றும் (நிலத்தடி) நீர் மாசுபாடு; ஓசோனடுக்கு மற்றும் "பைங்குடில்" வாயுக்களின் வெளியேற்றத்தால் மனித மற்றும் இதர உயிரினங்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து, புவியின் ஒருமைப்பாடு மற்றும் அதன் பல்லுயிரியம், நாடுகளின் பாதுகாப்பு, மற்றும் வருங்கால குழந்தைகளின் பாரம்பரியம் ஆகியவற்றைப் பற்றி உரைக்கிறது. பல பல்கலைக்கழகங்கள் தல்லோய்றேஸ் சாற்றுரையை ஏற்றுக்கொண்டு சுற்றுச்சூழல் நிருவாகம் மற்றும் கழிவுப்பொருள் நிருவாகத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றனர். வாழ்க்கைத் தொழில் சார்ந்த கல்விமுறைகளை பலதரப்பட்ட நிறுவனங்கள் மேம்படுத்தி வருகின்றனர், எ.கா வாமிடப் (WAMITAB) மற்றும் சார்டேர்ட் இன்ச்டிடியுசன் ஒப் வேஸ்ட் மேனேஜ்மென்ட் . பல பேரங்காடிகள் வாடிக்கையாளர்களை மறுசுழற்சி செய்து பொருள் வழங்கும் இயந்திரங்களைப் பயன்படுத்தி வாங்கிச்சென்ற கொள்கலன்களை திருப்பி எடுத்துக் கொள்ளவும் மற்றும் அதற்கான மறு பயனீடு (மீள் சுழற்சி) கட்டணத்தில் இருந்து ஒரு தொகையைத் திருப்பிக் கொடுப்பதையும் வழக்கமாக கொண்டு ஊக்கப்படுத்துகின்றனர். டோம்ற மற்றும் என்விப்கோ போன்ற அடையாளக்குறி பெற்ற நிறுவனங்கள் இவ்வகையான இயந்திரங்களை தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளன.

ஆதாரங்கள்

தொகு

குறிப்புகள்

தொகு
  1. "what_is_waste_management". 2009. Archived from the original on 2010-03-13.
  2. கழிவுப்பொருளை குறைப்பதற்கு உணவில் இருக்கும் மீதி பாகங்களை அகற்றுதல்

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Waste
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கழிவு_மேலாண்மை&oldid=3922944" இலிருந்து மீள்விக்கப்பட்டது