டைஎத்தில் ஈதர் பெராக்சைடு

டைஎத்தில் ஈதர் ஐதரோபெராக்சைடு(Diethyl ether hydroperoxide) என்பது C2H5OCH(OOH)CH3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டை உடைய ஒரு கரிமச் சேர்மம் ஆகும். இது ஒரு நிறமற்ற, வாலைவடிக்கக்கூடிய நீர்மம் ஆகும். டைஎத்தில் ஈதர் ஐதரோபெராக்சைடு மற்றும் அதன் குறுக்கப்பட்ட விளைபொருட்கள் டை எத்தில் ஈதருக்கு வெளிப்படுத்தப்படும் போது மெதுவாக உருவாகும் கரிம பெராக்சைடுகள் சூழலில் உள்ள காற்று மற்றும் வெப்பநிலை சார்ந்து வெடிக்கும் தன்மையைக் கொண்டிருப்பதற்காக குறைகூறப்படுகின்றன.[1][2]

டைஎத்தில் ஈதர் ஐதரோபெராக்சைடு
இனங்காட்டிகள்
18321-53-4 Y
ChemSpider 19985446 Y
InChI
  • InChI=1S/C4H10O3/c1-3-6-4(2)7-5/h4-5H,3H2,1-2H3 Y
    Key: CXWWPQGYBJCHJL-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C4H10O3/c1-3-6-4(2)7-5/h4-5H,3H2,1-2H3
    Key: CXWWPQGYBJCHJL-UHFFFAOYAS
யேமல் -3D படிமங்கள் Image
Image
பப்கெம் 126387
  • CCOC(OO)C
  • CC(OCC)OO
பண்புகள்
C4H10O3
வாய்ப்பாட்டு எடை 106.12 g·mol−1
தோற்றம் நிறமற்ற திரவம்
அடர்த்தி 1.005 கி/செமீ3
கொதிநிலை 62–64 °C (144–147 °F; 335–337 K) 18.7 hPa - இல்(குறைக்கப்பட்ட அழுத்தம்)
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் Explosive
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

தொகுப்பு முறை மற்றும் வினைகள்

தொகு

டைஎத்தில் ஈதரின் ஒளிவழிஆக்சிசனேற்றத்தின் மூலம் டைஎத்தில் ஈதர் ஐதரோபெராக்சைடு உருவாக்கப்படலாம். இது ஒரு தனி உறுப்புச் செயல்முறை ஆகும். இந்தச் செயல்முறை புறஊதாக் கதிர்களின் கிளர்வுறுதலின் மூலம் மூலக்கூற்று ஆக்சிசனை மேலும் வினையுறு வடிவத்திற்கு மாற்றுவதை உள்ளடக்கியுள்ளது. இதன் உருவாதலானது வெடித்துச்சிதறும் அபாயத்தின் வாய்ப்பு காரணமாக விரும்பத்தகாத ஒன்றாக உள்ளது. இதன் காரணமாக, வணிகரீதியான டைஎத்தில் ஈதர் மாதிரிகள் வழக்கமாக பியூட்டைலேற்ம் செய்யப்பட்ட ஐதரோஆக்சிடொலுயீன் போன்ற உயிர் வளியேற்ற எதிர்ப்பொருள்களைக் கொண்டுள்ளன. மேலும், அவை ஆம்பர் கண்ணாடி போன்ற புறஊதாக் கதிர்களைத் தடுக்கும் பொருள்களால் ஆன கொள்கலங்களில் அடைத்து வைக்கப்படுகின்றன.

 

எத்தில் வினைல் ஈதரோடு ஐதரசன் பேரொட்சைடை அமில வினையூக்கம் செய்யப்பட்ட சேர்க்கை வினையின் மூலம் அதிக அளவில் தயாரிக்க முடியும்:[1]

C2H5OCH=CH2 + H2O2 → C2H5OCH(OOH)CH3

இதனையொத்த ஐதரோபெராக்சைடுகள் இதே முறையைப் பின்பற்றித் தயாரிக்கலாம்.

டைஎத்தில் ஈதர் ஐதரோபெராக்சைடினை நீருடன் வெப்பப்படுத்தும் போது, அசிட்டால்டிகைடாக சிதைவுறுகிறது.

C2H5OCH(OOH)CH3 → CH3CHO + C2H5OH + H2O2

டைஎத்தில் ஈதர் ஐதரோபெராக்சைடு டைஎத்தில் ஈதர் பெராக்சைடு' அல்லது எதிலிடீன் பெராக்சைடு எனப்படும் பலபடிகளை உருவாக்குகிறது:

 

பெராக்சைடு ஒரு நிறமற்ற திரவம் ஆகும். இது உராய்விற்கு அதிக உணர்திறன் கொண்ட, எளிதில் வெடிக்கும் தன்மை கொண்ட வெடிபொருள் ஆகும். இருப்பினும், எளிதில் ஆவியாகும் டைஎத்தில் ஈதரின் ஆவியாதல் தூய வெடிபொருட்களின் மெல்லிய படலங்களை விட்டுச்செல்வதால், இந்த பலபடிப் பொருள்களை திண்மமாக்குவது மிகவும் ஆபத்தானதாகும்.

சோதனைகள்

தொகு

டைஎத்தில் ஈதர் பெராக்சைடுகள் அசிட்டிக் அமிலத்தில் உள்ள பொட்டாசியம் அயோடைடு அல்லது பொட்டாசியம் அயோடைடு / ஸ்டார்ச் தாள் கொண்டு சோதிக்கப்படலாம். இச்சோதனைக்கான நேர்மறை முடிவானது அயோடின் (I2) உருவாதலையும் அதன் காரணமாக மஞ்சள் அல்லது பழுப்பு நிற ஈதர் படலம் அல்லது ஒரு ஸ்டார்ச் தாளில் அடர் நீலப்புள்ளி தோன்றுதலைத் தருகிறது. [3]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 . doi:10.1021/ja01638a012. 
  2. A. Rieche, R. Meister (1936). "Modellversuche zur Autoxidation der Äther" (in German). Angewandte Chemie 49 (5): 106. 
  3. "Peroxide Forming Solvents". Sigma-Aldrich. பார்க்கப்பட்ட நாள் 2014-07-09.