டைபாசுபரசு டெட்ரா அயோடைடு
டைபாசுபரசு டெட்ரா அயோடைடு (Diphosphorus tetraiodide) என்பது P2I4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஆரஞ்சு நிறத்தில் ஒரு படிகத்திண்மமாகக் காணப்படும் இச்சேர்மம் கரிம வேதியியலில் ஓரு ஒடுக்கும் முகவராகப் பயன்படுத்தப்படுகிறது. பாசுபரசு +2 என்ற ஆக்சிசனேற்ற நிலையில் காணப்படும் பாசுபரசு சேர்மத்திற்கு இதுவோர் அரிய உதாரணமாகும். பாசுபரசின் சார் ஆலைடு என்று இச்சேர்மம் வகைப்படுத்தப்படுகிறது. டைபாசுபரசு டெட்ரா ஆலைடுகளில் மிகவும் அதிக நிலைப்புத்தன்மை கொண்டது டைபாசுபரசு டெட்ரா அயோடைடு ஆகும்[1].
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
டைபாசுபரசு டெட்ரா அயோடைடு
| |
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
டெட்ரா அயோடோபாசுபேன் | |
வேறு பெயர்கள்
பாசுபரசு(II) அயோடைடு
| |
இனங்காட்டிகள் | |
13455-00-0 | |
EC number | 236-646-7 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 83484 |
| |
பண்புகள் | |
P2I4 | |
வாய்ப்பாட்டு எடை | 569.57 கி/மோல் |
தோற்றம் | ஆரஞ்சுநிற படிகத் திண்மம் |
உருகுநிலை | 125.5 °C (257.9 °F; 398.6 K) |
கொதிநிலை | சிதையும் |
சிதையும் | |
தீங்குகள் | |
ஈயூ வகைப்பாடு | C |
R-சொற்றொடர்கள் | R14, R34, R37 |
தீப்பற்றும் வெப்பநிலை | தீப்பற்றாது |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | டைபாசுபரசு டெட்ரா புளோரைடு டைபாசுபரசு டெட்ரா குளோரைடு டைபாசுபரசு டெட்ரா புரோமைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | ஈரார்சனிக் நான்கையோடைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு மற்றும் கட்டமைப்பு
தொகுஉலர் டையெத்தில் ஈதரிலுள்ள பாசுபரசு டிரை அயோடைடு விகிதச்சம்மாதலின்றி சிதைவு அடைவதால் டைபாசுபரசு டெட்ரா அயோடைடு உருவாகிறது.
- 2 PI3 → P2I4 + I2
பாசுபரசு முக்குளோரைடுடன் பொட்டாசியம் அயோடைடு சேர்த்து நீரற்ற நிபந்தனையில் சூடுபடுத்துவதாலும் இதைத் தயாரிக்க முடியும் [2].
2.230 Å என்ற பிணைப்பு நீளம் கொண்ட ஒரு P-P பிணைப்பைக் கொண்ட நேர்மாற்று மைய இடக்குழுச் சீர்மை கட்டமைப்பை டைபாசுபரசு டெட்ரா அயோடைடு ஏற்கிறது [3]
கனிம வேதியியல்
தொகுபுரோமினுடன் டைபாசுபரசு டெட்ரா அயோடைடு வினைபுரிந்து PI3−xBrx கலவையாக உருவாகிறது. கந்தகத்துடன் வினைபுரியும்போது டைபாசுபரசு டெட்ரா அயோடைடு ஆக்சிகரணம் செய்யப்பட்டு P2S2I4 சேர்மமாக உருவாகி P-P பிணைப்பை தக்க வைத்துக் கொள்கிறது.[1]
கரிம வேதியியல்
தொகுகரிமத் தொகுப்பு வினைகளில் டைபாசுபரசு டெட்ரா அயோடைடு முக்கியமாக ஓர் ஆக்சிசன் நீக்கும் முகவராகப் பயன்படுத்தப்படுகிறது.[4] அசிட்டால் மற்றும் கீட்டால்களை காப்புநீக்கம் செய்து ஆல்டிகைடு மற்றும் கீட்டோன்களாக மாற்றவும், எப்பாக்சைடுகளை ஆல்க்கீன்களாக மாற்றவும், ஆல்டாக்சைம்களை நைட்ரைல்களாக்கவும் இது பயன்படுத்தப்படுகிறது. மேலும், 2-அமினோ ஆல்ககால்களை அசிரிடீன்களாக வளையமாக்கவும் இது பயன்படுகிறது.[5] α,β-நிறைவுறா கார்பாக்சிலிக் அமிலங்களை α,β-நிறைவுறா புரோமைடுகளாக மாற்றவும் இது பயன்படுகிறது.[6] மேலே கூறப்பட்டுள்ளபடி பெர்த்தோலெட்டு 1855 ஆம் ஆண்டு [4] டைபாசுபரசு டெட்ரா அயோடைடை குன் விண்டெர்சிடீன் வினையில் கிளைக்காலை ஆல்க்கீனாக்கலில் பயன்படுத்தினார் [7].
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth–Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.
- ↑ H. Suzuki; T. Fuchita; A. Iwasa; T. Mishina (December 1978). "Diphosphorus Tetraiodide as a Reagent for Converting Epoxides into Olefins, and Aldoximes into Nitriles under Mild Conditions". Synthesis 1978 (12): 905–908. doi:10.1055/s-1978-24936. https://archive.org/details/sim_synthesis_1978-12_12/page/905.
- ↑ Z. Žák, M. Černík "Diphosphorus tetraiodide at 120 K" Acta Crystallographica Section C 1996, vol. C52, pp. 290-1. எஆசு:10.1107/S0108270195012510
- ↑ 4.0 4.1 Alain Krief, Vikas N. Telvekar "Diphosphorus Tetraiodide" Encyclopedia for Reagents in Organic Synthesis 2009. எஆசு:10.1002/047084289X.rd448.pub2
- ↑ H. Suzuki; H. Tani (1984). "A mild cyclization of 2-aminoalcohols to aziridines using diphosphorus tetraiodide". Chemistry Letters 13 (12): 2129–2130. doi:10.1246/cl.1984.2129.
- ↑ Vikas N. Telvekar; Somsundaram N. Chettiar (June 2007). "A novel system for decarboxylative bromination". Tetrahedron Letters 48 (26): 4529–4532. doi:10.1016/j.tetlet.2007.04.137.
- ↑ Richard Kuhn, Alfred Winterstein (1928). "Über konjugierte Doppelbindungen I. Synthese von Diphenyl-poly-enen". Helvetica Chimica Acta 11 (1): 87–116. doi:10.1002/hlca.19280110107.