டைபியூட்டைல் ஈதர்
டைபியூட்டைல் ஈதர் (Dibutyl ether) C8H18O என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஈதர் குடும்பத்தைச் சேர்ந்த இச்சேர்மம் தெளிவானதாகவும், நிறமற்றும், எளிதில் தீப்பற்றி எரியக்கூடியதாகவும் உள்ளது. பிரத்தியேகமாக ஈதரின் நறுமணத்தைப் பெற்ற நீர்மமாக டைபியூட்டைல் ஈதர் காணப்படுகிறது. நீர்மநிலையில் காணப்படும் டைபியூட்டைல் ஈதர் தண்ணீரைக் காட்டிலும் இலேசானது ஆகும். ஆனால் இதன் ஆவி காற்றைவிடக் கனமானது. டைபியூட்டைல் ஈதர் தண்ணீரில் கரையாது. ஆனால் அசிட்டோன் மற்றும் இதர கரிமக் கரைப்பான்களில் கரையும். இப்பண்பினால் டைபியூட்டைல் ஈதர் பல்வேறு வேதிவினைகள் மற்றும் செயல்முறைகளில் கரைப்பானாகப் பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக டைபியூட்டைல் ஈதரில் கரைக்கப்பட்ட பீனைல் இலித்தியத்தின் 1.8 மோலார் கரைசல் வர்த்தகமுறையில் விற்பனைக்குக் கிடைக்கிறது.
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
1-பியூட்டாக்சிபியூட்டேன் | |
வேறு பெயர்கள்
டை-என்-பியூட்டல் ஈதர்
| |
இனங்காட்டிகள் | |
142-96-1 | |
ChemSpider | 8569 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 8909 |
| |
பண்புகள் | |
C8H18O | |
வாய்ப்பாட்டு எடை | 130.23 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற நீர்மம்[1] |
மணம் | பழநெடி[1] |
அடர்த்தி | 0.77 கி/செ.மீ3 (20 °செல்சியசுC)[1] |
உருகுநிலை | −95 °C (−139 °F; 178 K)[1] |
கொதிநிலை | 141 °C (286 °F; 414 K)[1] |
0.3 கி/லி[1] | |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.3992 |
பிசுக்குமை | 0.741 cP (15 ° செல்சியசு) |
கட்டமைப்பு | |
இருமுனைத் திருப்புமை (Dipole moment) | 1.18 D |
தீங்குகள் | |
தீப்பற்றும் வெப்பநிலை | 25 °C (77 °F; 298 K) |
Autoignition
temperature |
175 °C (347 °F; 448 K)[1] |
Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose)
|
7400 மி.கி/கி.கி (வாய்வழி, எலி)[1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
எளிதில் பெராக்சைடாக உருவாகும் என்பதால் இதை வெப்பம், ஒளி மற்றும் காற்று படாமல் பாதுகாப்பாகத் தனித்து வைத்திருக்க வேண்டும்.
தயாரிப்பு
தொகு1-பியூட்டனாலுடன் வினையூக்கியும் நீர்நீக்க முகவருமான கந்தக அமிலத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் நீர்நீக்க வினை நடைபெற்று டைபியூட்டைல் ஈதர் உருவாகிறது.
2C4H9OH → C8H18O + H2O
வினைகள்
தொகுஆக்சிசனேற்றம், ஒடுக்கம், காரம் போன்றவற்றுடனான வினைகளில் டைபியூட்டைல் ஈதர் நிலைத்தன்மையுடன் காணப்படுகிறது. HI மற்றும் HBr போன்ற வலிமையான அமிலங்கள் இச்சேர்மத்தை பிளவுபடச் செய்கின்றன. ஆக்சிசன் முன்னிலையில் டைபியூட்டைல் ஈதர் ஆக்சிசனேற்றமடைந்து பெராக்சைடு அல்லது ஐதரோபெராக்சைடைக் கொடுக்கிறது.
பயன்பாடுகள்
தொகு- கிரிக்னார்டு வினைப்பொருளுக்கு இது கரைப்பானாகப் பயன்படுகிறது.
- கொழுப்புகள், எண்ணெய்கள், கரிம அமிலங்கள், ஆல்கலாய்டுகள், இயற்கை மற்றும் செயற்கை பிசின்களுக்கு கரைப்பானாகப் பயன்படுகிறது.
- பேரளவில் பூச்சிக் கொல்லிகளைத் தயாரிக்க இந்த ஈதர் பயன்படுகிறது (உதாரணம்: சையெக்சாடின்)