டையாம்போடாக்சின்

டையாம்போடாக்சின் (Diamphotoxin) என்பது டையாம்பிடியா என்ற வண்டு பேரினத்தின் இளம் உயிரிகளும் கூட்டுப்புழுக்களும் உற்பத்தி செய்யும் ஒரு நச்சு ஆகும். டையாம்போடாக்சின் சிவப்பணுச்சிதைவினை ஏற்படுத்தக்கூடியதும், இதயத்தினைப் பாதிப்பதாகவும் உள்ளது. இது நிலைமாறும் தன்மையுடைய ஒற்றை சங்கிலி பலபுரதக்கூறு ஆகும். இதனுடன் பிணைக்கப்பட்ட புரதம் இதன் நச்சினைச் செயலிழக்காமல் பாதுகாக்கிறது.[1][2][3]

டையாம்போடாக்சின்
இனங்காட்டிகள்
87915-42-2
ChemSpider none
ம.பா.த diamphotoxin
பண்புகள்
வாய்ப்பாட்டு எடை ~ 60,000 g/mol
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

டையாம்போடாக்சின் சிவப்பு இரத்த அணுக்களின் உயிரணுச் சவ்வுகளின் ஊடுருவலை அதிகரிக்கிறது. இது உயிரணுக்களுக்கு இடையேயான அயனிகளின் இயல்பான ஓட்டத்தைப் பாதிக்காது என்றாலும், இது அனைத்துச் சிறிய அயனிகளையும் உயிரணு சவ்வுகள் வழியாக எளிதில் செல்ல அனுமதிக்கிறது. இது உயிரணுக்களின் அயனி அளவை மோசமாகப் பாதிக்கிறது.[4] டையாம்போடாக்சின் எந்த நரம்பியல் நச்சு விளைவையும் கொண்டிருக்கவில்லை என்றாலும், இதன் சிவப்பணுச் சிதைவினை ஆபத்தானது. மேலும் குருதிவளிக்காவியின் அளவை 75% வரை குறைக்கலாம்.[5]

தென்னாப்பிரிக்காவின் சான் மக்கள் வேட்டையாடும் போது அம்பின் முனையில் டையாம்போடாக்சினைப் தடவிப் பயன்படுத்துகின்றனர்.[1] இந்த நச்சுத்தன்மை படிப்படியாக விலங்குகளின் தசைச் செயல்களை முடக்குகிறது. இம்முறையில் வேட்டையாடப்படும் பெரிய பாலூட்டிகள் விசத்தின் பாதிப்பால் மெதுவாக இறக்கின்றன.[6]

லெப்டினோடார்சா பேரினத்தின் பல இலை வண்டுச் சிற்றினங்கள் லெப்டினோட்டார்சினை என்ற ஒத்த நச்சுத்தன்மையை உற்பத்தி செய்கின்றன.[6]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 de la Harpe, J.; Reich, E.; Reich, K. A.; Dowdle, E. B. (October 1983). "Diamphotoxin. The arrow poison of the !Kung Bushmen". The Journal of Biological Chemistry]] 258 (19): 11924–31. doi:10.1016/S0021-9258(17)44321-3. பப்மெட்:6311829. http://www.jbc.org/cgi/pmidlookup?view=long&pmid=6311829. பார்த்த நாள்: 4 July 2013.  பிழை காட்டு: Invalid <ref> tag; name "harpe" defined multiple times with different content
  2. Mebs, D.; Brüning, F.; Pfaff, N.; Neuwinger, H. D. (July 1982). "Preliminary studies on the chemical properties of the toxic principle from Diamphidia nigroornata larvae, a source of Bushman arrow poison". Journal of Ethnopharmacology 6 (1): 1–11. doi:10.1016/0378-8741(82)90068-X. பப்மெட்:7109661. 
  3. Woollard, J. M.; Fuhrman, F. A.; Mosher, H. S. (1984). "The Bushman arrow toxin, Diamphidia toxin: Isolation from pupae of Diamphidia nigro-ornata". Toxicon 22 (6): 937–46. doi:10.1016/0041-0101(84)90185-5. பப்மெட்:6523515. https://archive.org/details/sim_toxicon_1984_22_6/page/n98. 
  4. Jacobsen, T. F.; Sand, O.; Bjøro, T.; Karlsen, H. E.; Iversen, J. G. (1990). "Effect of Diamphidia toxin, a Bushman arrow poison, on ionic permeability in nucleated cells". Toxicon 28 (4): 435–44. doi:10.1016/0041-0101(90)90082-i. பப்மெட்:2161574. https://archive.org/details/sim_toxicon_1990_28_4/page/n86. 
  5. Kao, C. Y.; Salwen, M. J.; Hu, S. L.; Pitter, H. M.; Woollard, J. M. (1989). "Diamphidia toxin, the Bushmen's arrow poison: Possible mechanism of prey-killing". Toxicon 27 (12): 1351–66. doi:10.1016/0041-0101(89)90067-6. பப்மெட்:2629177. 
  6. 6.0 6.1 Chaboo, Caroline (2011). "Defensive behaviors in leaf beetles: From the unusual to the weird" (PDF). In Weir, Tiffany; Vivanco, Jorge M. (eds.). Chemical Biology of the Tropics: An Interdisciplinary Approach. Signaling and Communication in Plants. Berlin: Springer Verlag. pp. 59–69. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-642-19079-7. இணையக் கணினி நூலக மைய எண் 706961677. Archived from the original (PDF) on 7 December 2013. பார்க்கப்பட்ட நாள் 4 July 2013.

மேலும் வாசிக்க

தொகு
  • Gelashvili, D. B. (2002). "Natural toxins in inter- and intraspecies interaction of human being (elements of ethnotoxinology)" (in ru). Zhurnal Obshcheĭ Biologii 63 (3): 258–69. பப்மெட்:12070945. 
  • Bernheimer, A. W.; Rudy, B. (June 1986). "Interactions between membranes and cytolytic peptides". Biochimica et Biophysica Acta (BBA) - Reviews on Biomembranes 864 (1): 123–41. doi:10.1016/0304-4157(86)90018-3. பப்மெட்:2424507. 

வெளி இணைப்புகள்

தொகு
  • பப்செமில் டயம்போடாக்சின். 4 ஜூலை 2013 அன்று பெறப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டையாம்போடாக்சின்&oldid=4174150" இலிருந்து மீள்விக்கப்பட்டது