டையெத்தில்பாசுபைட்டு

கரிமபாசுபரசு சேர்மம்

டையெத்தில்பாசுபைட்டு (Diethylphosphite) என்பது (C2H5O)2P(O)H என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம பாசுபரசு சேர்மமாகும். பிற கரிமபாசுபரசு சேர்மங்களை உருவாக்கப் பயன்படும் ஒரு வினைப்பொருளாக இது பயன்படுத்தப்படுகிறது. P-H பிணைப்பின் அதிக வினைத்திறனை இப்பயன்பாட்டிற்குரிய அடிப்படைக் காரணமாகும். டையெத்தில்பாசுபைட்டு ஒரு நிறமற்ற நீர்மமாகும் [1]. இதன் மூலக்கூறுகள் நான்முகியின் வடிவத்தில் உள்ளன.

டையெத்தில்பாசுபைட்டு
பெயர்கள்
வேறு பெயர்கள்
டையெத்தில்பாசுபோனைட்டு; டி.இ.பி; பாசுபோனிக் அமிலம், டையெத்தில் எசுத்தர்
இனங்காட்டிகள்
762-04-9
Beilstein Reference
4-01-00-01329
ChemSpider 12437
InChI
  • InChI=1S/C4H11O3P/c1-3-6-8(5)7-4-2/h5H,3-4H2,1-2H3
    Key: SULWMEGSVQCTSK-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 12977
  • CCOP(O)OCC
பண்புகள்
C4H11O3P
வாய்ப்பாட்டு எடை 138.10 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
அடர்த்தி 1.072 கி/செ.மீ3
கொதிநிலை 2 மில்லிமீட்டர் பாதரசத்தில் 50-51 ºசெல்சியசு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு தொகு

பாசுபரசு முக்குளோரைடு மற்றும் எத்தனால் சேர்மங்களைப் பயன்படுத்தி 1850 ஆம் ஆண்டுகளில் அநேகமாக டையெத்தில்பாசுபைட்டு தயாரிக்கப்பட்டிருக்கலாம். ஆனால், தேவைக்காக தயாரிக்கப்படும் தயாரிப்பு முறைகள் பின்வருமாறு உள்ளன :[2].

PCl3 + 3 C2H5OH → (C2H5O)2P(O)H + 2 HCl + C2H5Cl

இச்சேர்மத்தின் பல வழிப்பொருட்களையும் இதேமுறையில் தயாரிக்க முடியும் [3][4]. பாசுபைட்டு என்று பெயரிடப்பட்டிருந்தாலும் மிகப்பெருமளவில் இது பாசுபோனேட்டு (C2H5O)2P(O)H, வடிவிலேயே காணப்படுகிறது. இப்பண்பை தன்னுடைய மூல அமிலமான பாசுபரசு அமிலத்துடன் இது பகிர்ந்து கொள்கிறது. இதுபோன்ற பல வினைகள் இருந்தபோதிலும், பாசுபரசு(V) மற்றும் பாசுபரசு(III) வடிவங்களுக்கு இடையிலான பின்வரும் இடமாற்றிய சமநிலை இருப்பதைக் கருத்தில் கொள்ளாமல் பகுத்தறிவது கடினமாகும் :[5]

(C2H5O)2PV(O)H ⇌ (C2H5O)2PIII(OH).

வினைகள் தொகு

எசுத்தராக்கல் வினை

எத்தனாலைவிட உயர் கொதிநிலை கொண்ட ஆல்ககாலுடன் சேர்த்து டையெத்தில்பாசுப்பைட்டைச் சேர்த்து சூடுபடுத்தும்போது பரிமாற்ற எசுத்தராக்க வினை நிகழ்கிறது :[6]

(C2H5O)2P(O)H + 2 ROH → (RO)2P(O)H + 2 C2H5OH

பொட்டாசியம் மூவிணைய-பியூட்டாக்சைடு போன்ற காரத்தின் முன்னிலையில் இப்பாசுபரசு சேர்மம் புரோட்டான் நீக்கம் அடைந்து பாசுபரசை ஆல்க்கைலேற்றம் அடைய அனுமதிக்கிறது:[7]

(C2H5O)2P(O)H + KOtBu → (C2H5O)2P(O)K + HOtBu
(C2H5O)2P(O)K + RBr → (C2H5O)2P(O)R + KBr

அரைல் ஆலைடுகளை மாற்றுவதற்கு பலேடியம் வினையூக்கிகள் பயன்படுத்தலாம்.[1] C-P பிணைப்பு செயல்முறையானது புச்வால்டு-ஆர்ட்விக் அமீனேற்றத்தை நினைவூட்டுகிறது.

ஐதரோபாசுபோனைலேற்றம்

நிறைவுறா குழுக்களுடன் டையெத்தில் பாசுப்பைட்டு ஐதரோபாசுபோனைலேற்ற வினையின் வழியாக வினையில் ஈடுபடுகிறது. உதாரணமாக இது ஆல்டிகைடுடன் பின்வருமாறு இணைகிறது.

(C2H5O)2P(O)H + RCHO → (C2H5O)2P(O)CH(OH)R

புதோவிக் வினை மற்றும் கபாச்சினிக் பீல்டுசு வினை போன்ற வினைகளில் இமீன்களுடன் வினையில் ஈடுபட்டு அமினோபாசுபோனேட்டுகளைக் கொடுக்கிறது.

கிரிக்னார்டு வினைப்பொருளுடன்

கிரிக்னார்டு வினைப்பொருளுடன் டையெத்தில் பாசுப்பைட்டு வினைபடுவதால் முதலில் புரோட்டான் நீக்கம் நிகழ்ந்து அதைத் தொடர்ந்து ஈத்தாக்சி குழுக்கள் இடப்பெயர்ச்சி அடைகின்றன. [8][9] இவ்வினையின் வழியாக டைமெத்தில்பாசுபீன் ஆக்சைடுகள் போன்ற இரண்டாம்நிலை பாசுபீன் ஆக்சைடுகள் உருவாதலுக்கான வழி கிடைக்கிறது. பின்வரும் சமன்பாடு இவ்வினையை விளக்குகிறது.

(C2H5O)2P(O)H + CH3MgBr → (C2H5O)2P(O)MgBr + CH4
(C2H5O)2P(O)MgBr + 2 CH3MgBr → (CH3)2P(O)MgBr + 2 MgBr(OC2H5)
(CH3)2P(O)MgBr + H2O → (CH3)2P(O)H + MgBr(OH)

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Green, Kenneth (2001). "Encyclopedia of Reagents for Organic Synthesis". Encyclopedia of Reagents for Organic Synthesis. DOI:10.1002/047084289X.rd211. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0471936235. 
  2. Malowan, J. E. (1953). "Diethyl phosphite". Inorg. Synth.. Inorganic Syntheses 4: 58–60. doi:10.1002/9780470132357.ch19. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780470132357. 
  3. Pedrosa, Leandro (March 20, 2011). "Esterification of Phosphorus Trichloride with Alcohols; Diisopropyl phosphonate". ChemSpider Synthetic Pages. Royal Society of Chemistry. SyntheticPage 488. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1039/SP488. பார்க்கப்பட்ட நாள் July 10, 2017.
  4. Fakhraian, H.; Mirzaei, A. (2004). "Reconsideration of the Base-Free Batch-Wise Esterification of Phosphorus Trichloride with Alcohols". Org. Process Res. Dev. 8 (3): 401–404. doi:10.1021/op049958v. 
  5. Doak, G. O.; Freedman, Leon D. (1961). "The Structure and Properties of the Dialkyl Phosphonates". Chem. Rev. 61 (1): 31–44. doi:10.1021/cr60209a002. 
  6. Malowan, John E. (1953). "Dioctyl phosphite". Inorg. Synth.. Inorganic Syntheses 4: 61–62. doi:10.1002/9780470132357.ch20. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780470132357. 
  7. Boeckman, Robert K.; Perni, Robert B.; Macdonald, James E.; Thomas, Anthony J. (1988). "6-Diethylphosphonomethyl-2,2-dimethyl-1,3-dioxen-4-one (Phosphonic acid, [(2,2-dimethyl-4-oxo-4H-1,3-dioxin-6-yl)methyl-, diethyl ester)"]. Organic Syntheses 66: 194. doi:10.15227/orgsyn.066.0194. http://www.orgsyn.org/demo.aspx?prep=CV8P0192. ; Collective Volume, vol. 8, p. 192
  8. Hays, Hugh R. (1968). "Reaction of diethyl phosphonate with methyl and ethyl Grignard reagents". J. Org. Chem. 33 (10): 3690–3694. doi:10.1021/jo01274a003. 
  9. Busacca, Carl A.; Lorenz, Jon C.; Sabila, Paul; Haddad, Nizar; Senanyake, Chris H. (2007). "Synthesis of Electron-Deficient Secondary Phosphine Oxides and Secondary Phosphines: Bis[3,5-bis(trifluoromethyl)phenylphosphine Oxide and Bis[3,5-bis(trifluoromethyl)phenyl]phosphine"]. Organic Syntheses 84: 242. doi:10.15227/orgsyn.084.0242. http://www.orgsyn.org/demo.aspx?prep=v84p0242. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=டையெத்தில்பாசுபைட்டு&oldid=3787173" இலிருந்து மீள்விக்கப்பட்டது