டொமினிக் பிரசண்டேசன்

டொமினிக் பிரசண்டேசன் (Dominic Presentation; பிறப்பு: பெப்ரவரி 19, 1949) ஒரு இந்திய அரசியல்வாதியும், கேரள மாநிலத்தின் கொச்சி தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.[1][2][3] இவர் கேரள பிரதேச காங்கிரசு குழுவின் நிர்வாக உறுப்பினரும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரும் ஆவார். உம்மன் சாண்டி தலைமையில் நடத்தப்பட்ட 11 வது கேரள சட்டசபையில் மீன்வளம், விளையாட்டு, விமான நிலையம் மற்றும் சிறுபான்மையினர் நலன் ஆகிய துறைகளுக்கு அமைச்சராக இருந்தார்.[4][5][6]

டொமினிக் பிரசண்டேசன்
Dominic Presentation
ச.பே.உ
பதவியில்
2011–2016
தொகுதிகொச்சி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு19 பெப்ரவரி 1949 (1949-02-19) (அகவை 75)
கட்டூர், கேரளம், இந்தியா
தேசியம்இந்தியா இந்தியர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்மேரி ஆபிரகாம்
பிள்ளைகள்1
வாழிடம்(s)ஏலம்குளம், கொச்சி

ஆரம்ப வாழ்க்கை தொகு

டொமினிக் பிரசண்டேசன் 1949 பிப்ரவரி 19 இல் பெலிக்சு பிரசண்டேசன், ரோசம்மா ஆகியோருக்குக் கட்டூரில் பிறந்தார்.[5]

பணி தொகு

இவர் தனது அரசியல் வாழ்க்கையை பள்ளிக்கல்வி கற்றபோதே தொடங்கினார்.[5] எர்ணாகுளம் நகரில் செயல்பட்ட கேரள மாணவர் சங்கத்தின் செயலாளர், இந்திய தேசிய மாணவர் சங்க உறுப்பினர், புனித ஆல்பர்ட் கல்லூரியின் தலைவர், 1998ம் ஆண்டில் கொச்சின் நகராட்சி ஆணையத்தின் எதிர்க்கட்சி தலைவர், எர்ணாகுளம் மாவட்ட காங்கிரஸ் குழுவின் செயலாளர், கேரள பல்கலைக்கழக சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் என்பவை உள்ளிட்ட பல்வேறு பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.[5]

குறிப்புகள் தொகு

  1. "Ernakulam District MLA List". Archived from the original on 7 April 2013. பார்க்கப்பட்ட நாள் 9 January 2013.
  2. News The Hindu 10 November 2009
  3. News The Hindu 03 September 2010[தொடர்பிழந்த இணைப்பு]
  4. "News The Hindu 07 September 2004". Archived from the original on 17 ஜனவரி 2005. பார்க்கப்பட்ட நாள் 7 ஜனவரி 2021. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  5. 5.0 5.1 5.2 5.3 MLA official Web portal Gov of Kerala
  6. Niyamasabha MLA list

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=டொமினிக்_பிரசண்டேசன்&oldid=3930574" இலிருந்து மீள்விக்கப்பட்டது