டோக்யோயைட்டு
டோக்யோயைட்டு (Tokyoite) என்பது Ba2(Mn3+,Fe3+)OH(VO4)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். பேரியம் மாங்கனீசு வனேடேட்டு கனிமம் என்று இது வகைப்படுத்தப்படுகிறது. இரும்பு மிகு காமாகாரைட்டு கனிமத்தை ஒத்த மாங்கனீசு வரிசை கனிமம் என்றும் ஈய வனேடேட்டின் பிரேக்கிபசுகைட்டை ஒத்த பேரியக் கனிமம் என்றும் கருதப்படுகிறது [3]. தரங்குறைந்த பல்லுருவாகப் படிந்து உருமாறிய மாங்கனீசு தாதுப் படிவுகளில் டோக்யோயைட்டு தோன்றுகிறது. மேலும், ஐயலோபேன், பிரௌனைட்டு, தமைட்டு போன்ற கனிமங்களுடன் சேர்ந்து இக்கனிமம் கிடைக்கிறது [3].
டோக்யோயைட்டு Tokyoite | |
---|---|
பொதுவானாவை | |
வகை | வனேட்டு கனிமம் |
வேதி வாய்பாடு | Ba2(Mn3+,Fe3+)OH(VO4)2 |
இனங்காணல் | |
நிறம் | செங்கருப்பு |
படிக இயல்பு | சீரற்ற புள்ளிகளுடன் வடிவமற்ற படிக உள்ளடக்கமாக |
படிக அமைப்பு | ஒற்றைச் சரிவச்சு |
பிளப்பு | உணரமுடியவில்லை |
மோவின் அளவுகோல் வலிமை | 4.5 - 5 |
மிளிர்வு | பளபளப்பு |
கீற்றுவண்ணம் | அடர் பழுப்பு சிவப்பு |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளிகசியும் |
ஒப்படர்த்தி | 4.62 கணக்கிடப்பட்ட்து |
ஒளியியல் பண்புகள் | ஈரச்சு (?) |
ஒளிவிலகல் எண் | a=1.99, g=2.03 |
இரட்டை ஒளிவிலகல் | 0.0400 |
பலதிசை வண்ணப்படிகமை | தனித்துவமானது. ஆரஞ்சு சிவப்பு முதல் அடர் பழுப்பு கலந்த சிவப்பு வரை |
மேற்கோள்கள் | [1][2][3] |
சப்பானின் ஒன்சு தீவில் ஒக்குடாமா தமா மாவட்டத்திலுள்ள சிரோமரு சுரங்கத்தில் முதன்முதலில் டோக்யோயைட்டு கண்டறியப்பட்டது. அனைத்துலக கனிமங்களின் கழகம் 2003 ஆம் ஆண்டில் இதை புதிய கனிமம் என்று அங்கீகரித்தது. இத்தாலியில் இரண்டு சுரங்கங்களிலும் சப்பானில் ஒரு சுரங்கத்திலும் கிடைப்பதாக அறியப்படுகிறது. முதலில் சப்பானில் கண்டறியப்பட்டதால் கனிமத்திற்கு இப்பெயர் சூட்டப்பட்டது [2] It has been found in two mines in இத்தாலி and one in Japan, for which it was named.[1].