டோடிக்கனீசு போர்த்தொடர்

டோடிக்கனீசு போர்த்தொடர் (Dodecanese Campaign) என்பது இரண்டாம் உலகப் போரில் அச்சு நாடுகளில் ஒன்றான பாசிச இத்தாலியின் கட்டுப்பாட்டில் இருந்த டோடிக்கனீசு தீவுக்கூட்டத்தைக் கைப்பற்ற நேச நாடுகள் மேற்கொண்ட போர் நடவடிக்கைகளைக் குறிக்கிறது.

டோடிக்கனீசு போர்த்தொடர்
நடுநிலக்கடல், மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க களத்தின் பகுதி

டோடிக்கனீசு தீவுகளின் நிலப்படம்
நாள் செப்டம்பர் 8 – நவம்பர் 22, 1943
இடம் டோடிக்கனீசு தீவுகள், ஏஜியன் கடல்
ஜெர்மானிய வெற்றி
நிலப்பகுதி
மாற்றங்கள்
டோடிக்கனீசு தீவுகள் ஜெர்மனியால் ஆக்கிரமிக்கப்பட்டன
பிரிவினர்
 ஐக்கிய இராச்சியம்
 இத்தாலி
 தென்னாப்பிரிக்கா
 கிரேக்க நாடு
 ஜெர்மனி
தளபதிகள், தலைவர்கள்
ஐக்கிய இராச்சியம் ராபர்ட் டில்னி
இத்தாலி இனீகோ காம்பியோனி
நாட்சி ஜெர்மனி ஃபிரடரிக்-வில்லெம் மியூல்லர்
இழப்புகள்
113 வானூர்திகள்
4,800 பேர்
6 டெஸ்டிராயர்கள் மூழ்கடிப்பு
8 குரூசர்கள் சேதம்
2 நீர்மூழ்கிகள் மூழ்கடிப்பு
10 கண்ணிவெடி அகற்றும் கப்பல்கள் மூழ்கடிப்பு[1]
15 தரையிறங்கு படகுகள்
1,184 பேர்

டோடிக்கனீசு தீவுத்தொடர் ஏஜியன் கடலில் உள்ள ஒரு தீவுக்கூட்டம். இவை இத்தாலியின் கட்டுப்பாட்டில் இருந்தன. வடக்கு ஆப்பிரிக்கப் போர்முனையில் நேச நாடுகள் வெற்றி பெற்ற பின்னால் அவற்றின் கவனம் டோடிக்கனீசு பக்கம் திரும்பியது. பிரித்தானிய பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் டோடிக்கனீசு தீவுகளைக் கைப்பற்றினால் அருகிலிருந்த துருக்கியை நேச நாட்டுக் கூட்டணியில் இணைய வற்புறுத்தலாம் என திட்டமிட்டார். துருக்கி நேச நாடுகளுடன் இணைந்து விட்டால் சோவியத் ஒன்றியத்துக்கு கருங்கடல் வழியாக தளவாடங்கள் அனுப்ப முடியும் என்பது அவரது எண்ணம். இதனால் கேசபிளாங்கா மாநாட்டில் டோடிக்கனீசு தீவுத்தொடரைக் கைப்பற்ற முடிவு செய்யப்பட்டு அதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டன. ஆனால் நேச நாடுகளின் இத்தாலியப் படையெடுப்பு காரணமாக இத்தாக்குதல் தள்ளிப்போடப்பட்டது. ஆகஸ்ட் 1943இல் இத்தாலி நேச நாடுகளிடம் சரணடைந்த பின்னர், டோடிக்கனீசைக் கைப்பற்றித் தாக்க நேச நாடுகள் முனைந்தன. அங்கு நிறுத்தப்பட்டிருந்த இத்தாலியப் படைகள் சரணடைய முற்பட்டாலும், நாசி ஜெர்மனியின் படைகள் அத்தீவுகளைக் கைப்பற்ற அனுப்பப்பட்டன.

செப்டம்பர் முதல் வாரத்தில் நேச நாடுகள் மற்றும் ஜெர்மானியப் படைகள் டோடிக்கனீசு தீவுகளில் தரையிறங்கத் தொடங்கின. நேச நாட்டுப் படைகளுக்கு ஆதரவாக இத்தாலியப் படைகளும் செயல்பட்டன. அடுத்த இரு மாதங்கள் பல டோடிக்கனீசு தீவுகளில் இரு தரப்பு படைகளும் மோதின. ரோட்ஸ், கோஸ், லெரோஸ் ஆகிய முக்கிய தீவுகளில் நடந்த சண்டைகளில் ஜெர்மானியப் படைகள் வெற்றி பெற்று அவற்றை ஆக்கிரமித்தன. பின் படிப்படியாக பிற தீவுகளும் ஜெர்மானியர்களிடம் சரணடைந்தன. நவம்பர் 22ம் தேதி எஞ்சியிருந்த நேச நாட்டுப் படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டன. இரண்டாம் உலகப் போரில் ஜெர்மானியர்களுக்குக் கிட்டிய கடைசி வெற்றிகளுள் இதுவும் ஒன்றாக அமைந்தது.

குறிப்புகள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-01-08. பார்க்கப்பட்ட நாள் 2011-09-04.

மேற்கோள்கள்

தொகு