டோன்சி மாதவ் ஆனந்த் பை

டாக்டர் டோன்சி மாதவ் அனந்த் பை (Dr. Tonse Madhav Ananth Pai)(பிறப்பு 30 ஏப்ரல் 1898 - இறப்பு 29 மே 1979), என்பார் இந்திய மருத்துவர், கல்வியாளர், வங்கியாளர் மற்றும் புரவலர் ஆவார். இவர் இந்தியாவின் கர்நாடகத்தில் மணிப்பால் பல்கலைக்கழக நகரத்தினைக் கட்டியெழுப்பிய பெருமைக்குரியவர்.

டோன்சி மாதவ் ஆனந்த் பை
டோன்சி மாதவ் ஆனந்த் பை, மார்பளவு சிலை
பிறப்பு(1898-04-30)30 ஏப்ரல் 1898
உடுப்பி, கர்நாடகம், இந்தியா)
இறப்பு29 May 1979
மணிப்பால், கர்நாடகா, இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள்மணிப்பால் பல்கலைக்கழகம்]]
கர்நாடகப் பல்கலைக்கழகம்
ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி
வாழ்க்கைத்
துணை
சாரதா பை
பிள்ளைகள்[1] மோகந்தாசு பை, ராம்தாசு பை, பாண்டுரங்க பை, மாலதி செனாய், சுனீதி நாய்க், நாராயண பை, வச்ந்தி செனாய், செயந்தி பை, அசோக் பை, இந்துமதி பை, ஆசா பை
உறவினர்கள்ரமேஷ் பை
விருதுகள்பத்மஸ்ரீ (1972)

இந்தியாவில் முதன்முதலில் தனியார், சுயநிதி மருத்துவக் கல்லூரியை முதலில் தொடங்கிவர் இவராவார். பாய் 1953 ஆம் ஆண்டில் மணிப்பாலின் கஸ்தூர்பா மருத்துவக் கல்லூரியையும், 1957 ஆம் ஆண்டில் மணிப்பால் தொழில்நுட்பக் கழகத்தையும் நிறுவினார். இதைத் தொடர்ந்து மங்களூர் கஸ்தூர்பா மருத்துவக் கல்லூரி, மணிப்பால் பல் அறிவியல் கல்லூரி, மணிப்பால் பாரா மருத்துவ அறிவியல் கல்லூரி மற்றும் மணிப்பால் பல்கலைக்கழக முன்பட்ட கல்லூரி உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்களை நிறுவினார். இவர், தனது சகோதரர் உபேந்திர பாயுடன் சேர்ந்து, சிண்டிகேட் வங்கியை முதலில் கர்நாடகாவின் உடுப்பியில் நிறுவினார். இதனுடைய தலைமையகம் இப்போது மணிப்பால் மற்றும் பெங்களூரில் உள்ளது. அதன் பிரபலமான பிக்மி வைப்புத் திட்டத்தினை பிரபலப்படுத்தியவர் இவராவார்.

விருதுகள்

தொகு

டாக்டர் டி.எம்.ஏ பைக்கு 1972ஆம் ஆண்டில் இந்திய அரசு பத்மஸ்ரீ பட்டம் வழங்கி கௌரவப்படுத்தியது. [1] இவருக்கு 973ஆம் ஆண்டில் கர்நாடக பல்கலைக்கழகமும் 1975ஆம் ஆண்டில் ஆந்திரப்பல்கலைக்கழமும் டி லிட். பட்டம் வழங்கியது.

அக்டோபர் 9, 1999 ஆண்டு இந்திய அரசு பை நினைவுகூரும் முகமாக அஞ்சல் முத்திரையை வெளியிட்டது. வாழ்நாளில் அதிக எண்ணிக்கையிலான கல்வி நிறுவனங்களை நிறுவிய நபராக ரிப்லீஸின் பிலைவ் இட் ஆர் நாட் அமைப்பு பையினை அங்கீகரித்துள்ளது. [2]

மேற்கோள்கள்

தொகு
  1. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.
  2. "TAPMI". Archived from the original on 2015-01-12. பார்க்கப்பட்ட நாள் 2020-10-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டோன்சி_மாதவ்_ஆனந்த்_பை&oldid=3556840" இலிருந்து மீள்விக்கப்பட்டது