டோரிசக்கஸ்
டோரிசக்கஸ் (Doriscus, கிரேக்கம்: Δορίσκος and Δωρίσκος , டோரிஸ்கோஸ் ) என்பது பண்டைய திரேசில் (இன்றைய கிரேக்கம் ), ஏஜியன் கடலின் வடக்கு கடற்கரையில், ஹெப்ரஸ் ஆற்றின் மேற்கே உள்ள சமவெளியில் உள்ள ஒரு குடியேற்றமாகும். இப்பகுதி கிரேக்கத்தின் மீதான பாரசீகத்தின் இரண்டாவது படையெடுப்பிற்குப் பிறகு பல ஆண்டுகள் பாரசீகத்தின் கைவசம் இருந்தது. மேலும் இது ஐரோப்பாவின் கடைசி பாரசீக கோட்டையாக அறியப்படுகிறது. [1]
கிமு 512 இல் பேரரசர் டேரியசால் டோரிஸ்கஸ் குடியேற்றம் நிறுவப்பட்டது. [2] அவர் இங்கு ஒரு கோட்டையைக் கட்டினார். மேலும் சித்தியன் போர்த்தொடரின் போது ஏராளமான பாரசீக துருப்புக்களை இங்கு அவர் நிறுத்திவைத்தார். [3]
எரோடோடச்சின் (7.59) குறிப்புகளின் படி கிரேக்கத்தின் மீதான பாரசீகத்தின் இரண்டாவது படையெடுப்பின் கி.மு. 480 இல் எலஸ்பாண்டைக் கடந்த தனது படைகளை திறனாய்வு செய்ய மாமன்னர் செர்கஸ் படைகளை டோரிஸ்கசில் நிறுத்தினார் என்று குறிப்பிட்டுள்ளார். [4] முதலாம் டேரியஸ் நியமித்த நபருக்கு பதிலாக பாரசீகத்தின் முதலாம் செர்க்செஸ், மெகாடோஸ்டெசின் மகன் மாஸ்கேம்சை டோரிஸ்கசின் ஆளுநராக மாற்றினார் என்றும் எரோடோடஸ் எழுதுகின்றார்.
கிரேக்கத்தின் மீதான பாரசீகத்தின் இரண்டாவது படையெடுப்பிற்குப் பிறகும், பாரசீக ஆதிக்கத்தின் கீழ் பால்கன் குடாவில் இருந்த சில பாரசீக நகரங்களில் இதுவும் ஒன்று என்பதால் டோரிஸ்கஸ் குறிப்பிடத்தக்கது. [5] கிரேக்கத்தில் இருந்து பாரசீகப் படைகளின் பின்வாங்கிய பிறகும் கிரேக்கப்படைகளை வெற்றிகரமாக வழிநடத்திய ஏதெனியன் தளபதி சிமோனால் இதைக் கைப்பற்ற முடியவில்லை. பாரசீகர்களிடமிருந்து டோரிஸ்கஸ் "கைபற்றப்படவில்லை" என்று எரோடோடஸ் கூறுகிறார். [5] இதன் ஆளுநர் மஸ்கேம்சை இதை சிறப்பாக பாதுகாத்ததற்காக பாரசீக மன்னரால் கௌரவிக்கப்பட்டார். [5]
ரபேல் சீலியின் கூற்றுப்படி, அகாமனிசிய ஆட்சியாளர் கிமு 465 இல் தான் காவல் அரணுக்கு வைத்த படைகளுடன் மாஸ்கேம்சை திரும்ப அழைத்துக் கொண்டார். பின்னர் இறுதியாக டோரிஸ்கஸை கைவிட்டார். [6] எவ்வாறாயினும், கிமு ஐந்தாம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் ஹெரோடோடஸ் தனது இஸ்ட்ரீஸ் நூலில் டோரிஸ்கஸ் இன்னும் பாரசீகர்களின் கைவசத்திலேயே இருந்தது என குறிப்பிட்டுள்ளதாக முகமது தண்டமயேவ் குறிப்பிடுகிறார். [7]
டோரிஸ்கசின் தளம் கிழக்கு மாசிடோனியாவின் டோரிஸ்கோஸ் மற்றும் கிரேக்கத்தின் திரேஸ் என்ற நவீன கிராமத்தில் அமைந்துள்ளது.
மேலும் பார்க்கவும்
தொகு
குறிப்புகள்
தொகு- ↑ Raymond A. Bowman. Aramaic Ritual Texts from Persepolis Vol.91 University of Chicago Press, 1970, p. 61.
- ↑ Dandamaev 1989, "Gradually the Greeks also succeeded in expelling the Persian garrisons from Thrace and the Hellespont, except for the town and fortress of Doriscus along the Thracian littoral. This settlement had been founded by Darius I in 512 B.C".
- ↑ Kuhrt 2007.
- ↑ Christopher J. Tuplin, Xerxes' March from Doriscus to Therme, Historia: Zeitschrift für Alte Geschichte, Bd 52, H. 4 (2003), pp. 385–409.
- ↑ 5.0 5.1 5.2 Kuhrt, Amélie (2013). The Persian Empire: A Corpus of Sources from the Achaemenid Period (in ஆங்கிலம்). Routledge. pp. 290–291. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781136016943.
- ↑ Sealey, Raphael (1976). A History of the Greek City States, 700-338 B. C. (in ஆங்கிலம்). University of California Press. p. 208. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780520031777.
- ↑ Dandamaev 1989.