டோஸ்மோச்சே
டோஸ்மோச்சே | |
---|---|
லே அரண்மனையில் டோஸ்மோச்சே பண்டிகையின்போது ஆடப்படும் சம் நடனம் | |
கடைப்பிடிப்போர் | புத்தமதம் |
வகை | புத்தமதம் சார் புத்தாண்டுத் திருவிழா |
முடிவு | பிப்ரவரி |
நிகழ்வு | வருடத்திற்கு ஒருமுறை |
டோஸ்மோச்சே என்பது இந்தியாவின் லடாக்கில் கொண்டாடப்படும் ஒரு புத்த பண்டிகையாகும். இது லே, லிகிர் மற்றும் டிஸ்கிட் மடாலயங்களில் கொண்டாடப்படுகிறது. [1]இது லோசர் புத்தாண்டு பண்டிகையைப் போலவே புத்தாண்டு கொண்டாட்டங்களின் கடைசி திருவிழா ஆகும்.[2] இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த டோஸ்மோச்சே திருவிழாவின் போது லே மாவட்டம் மற்றும் ஜான்ஸ்கர் துணைப் பிரிவுக்குக் கட்டாய அரசு விடுமுறை வழங்கப்படுகிறது. டோஸ்மோச்சே "பலிகடாவின் திருவிழா" என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் இது லடாக்கின் மிகவும் பிரபலமான பிரார்த்தனை திருவிழாக்களில் ஒன்றாகும். [3] ஊரை தீய சக்திகளிடமிருந்து தூய்மைப்படுத்தும் நம்பிக்கையின் பேரிலும் இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.
வரலாறு
தொகுலடாக் ஆட்சியாளர்களால் டோஸ்மோச்சே பண்டிகை தொடங்கப்பட்டது. [4][5] லாச்சென் கோங்டுப் / லா-சென்-டனோஸ்-க்ரப் (1295-1320) அரசரின் ஆட்சியின் போது இத்திருவிழா தொடங்கப்பட்டது.[5] அழிவை ஏற்படுத்தும் படையெடுப்புக்ளுக்கு எதிராக அவர் நியுங்டி (இமாச்சலப் பிரதேசத்தின் குலு) படையெடுப்பாளர்களுடன் இரண்டு போர்களை நடத்தினார். [5] சாம் நடனம் என்று அழைக்கப்படும் புனித முகமூடி நடனங்கள், லே அரண்மனையின் வாயில்களுக்குக் கீழே பழைய தேவாலயத்தின் முற்றத்தில் நடத்தப்படுகின்றன. [6] இந்தத் திருவிழாவிற்காகச் சுழற்சி அடிப்படையில் லடாக்கின் பல்வேறு மடங்களிலிருந்து லாமாக்கள் அழைத்துவரப் படுகின்றனர்.
கொண்டாட்டங்கள்
தொகுமேள தாளங்களுடன் வெற்று பாறைச் சரிவுகளில் சீரான இடைவெளியில் சங்குகளின் ஓசையுடன் கூடிய உயரமான கியாலிங் ஒலி எழுப்பப்பட்டு எதிரொலிக்கப்படுகிறது. [5] புத்தர் உட்பட பல்வேறு வகையான தெய்வங்களைக் குறிக்கும் வகையில்துறவிகள் பலவண்ண ஆடைகள் மற்றும் பலவிதமான முகமூடிகளில் கவர்ச்சியாகத் தோன்றுகின்றனர்.[5] தீமையைத் தடுக்கவும் உலகளாவிய அமைதி மற்றும் மகிழ்ச்சியை வரவேற்கவும் வண்ணமயமான படபடப்பு எழுச்சியுடன் அவர்கள் துடிப்புக்கு நடனமாடுவார்கள். [5] முகமூடி நடனங்கள் மகாயான பௌத்தத்தின் தாந்த்ரீக பாரம்பரியத்தின் இன்றியமையாத பகுதியாகும்.[7]
மோதி சந்தையிலிருந்து லே பஜார் தெருவின் மறுமுனை வரை ஒரு கிலோமீட்டர் தூரத்தில், ஆயிரக்கணக்கான விற்பனைக் கடைகள் இரண்டு நாள் திருவிழாவிற்காக அமைந்திருக்கும். இவை மிகவும் பிரபலமானவை.[8] லாட்டரிகள், தம்போலா போன்ற விளையாட்டுகளுக்காகவும், கடைவலங்களுக்காவும் ஆயிரக்கணக்கான மக்கள் பலவண்ண ஆடையலங்காரங்களுடன் லே பஜார் தெருவில் குவிகின்றனர். [7]
அட்டவணை
தொகுதிபெத்திய சந்திர நாட்காட்டியை திபெத்து பின்பற்றுவதாலும், திபெத்திய நாட்காட்டியின் பன்னிரண்டாவது மாதத்தில், இருபத்தி எட்டாவது மற்றும் இருபத்தி ஒன்பதாம் தேதிகளில் டோஸ்மோச் திருவிழா வருவதாலும் ஒவ்வொரு ஆண்டும் கிரிகோரியன் நாட்காட்டியில் வெவ்வேறு தேதியில் திருவிழா நடைபெறும்.[9]
ஆண்டு | தேதி |
---|---|
2014 | 27-28 பிப்ரவரி |
2015 | 17-18 பிப்ரவரி |
2016 | 6-7 பிப்ரவரி |
2017 | 24-25 பிப்ரவரி |
2018 | 13-14 பிப்ரவரி |
2019 | 2-3 பிப்ரவரி |
2020 | 21-22 பிப்ரவரி |
2021 | 12-13 பிப்ரவரி |
2022 | 28 பிப்ரவரி - 1 மார்ச் |
2023 | 18-19 பிப்ரவரி |
படக்கோப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Leh, Likir Dosmoche begins". பார்க்கப்பட்ட நாள் 3 March 2018.
- ↑ "Dosmoche Festival". பார்க்கப்பட்ட நாள் 3 March 2018.
- ↑ "Dosmoche: Festival of the Scapegoat". Ladakh-Leh.com. பார்க்கப்பட்ட நாள் 5 November 2021.
- ↑ Antiquities of Indian Tibet. Asian Educational Services. 1992. pp. 98–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-206-0769-9.
- ↑ 5.0 5.1 5.2 5.3 5.4 5.5 "Ladakh celebrates winter festival of 'Dosmoche'". பார்க்கப்பட்ட நாள் 3 March 2018.
- ↑ "Likir Festival in Likir Gompa". india.com. பார்க்கப்பட்ட நாள் 9 March 2018.
- ↑ 7.0 7.1 "'Leh, Likir Dosmoche begins'". பார்க்கப்பட்ட நாள் 3 March 2018.
- ↑ Usha Sharma (1 January 2008). Festivals In Indian Society (2 Vols. Set). Mittal Publications. pp. 107–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8324-113-7.
- ↑ "Calendar of Monastic festival". Leh official website. http://leh.nic.in/tourist/calender.html.