சாம் நடனம்
சாம் நடனம் ( Cham dance) என்பது திபெத்திய பௌத்த மதத்தின் சில பிரிவுகள் மற்றும் புத்த விழாக்களுடன் தொடர்புடைய ஒரு கலகலப்பான முகமூடி மற்றும் ஆடை அணிந்த நடனமாகும்.[1][2] பாரம்பரிய திபெத்திய இசைக்கருவிகளைப் பயன்படுத்தி துறவிகள் இசைக்கும் இசையுடன் இந்த நடனம் நடைபெறுகிறது. நடனங்கள் பெரும்பாலும் உணர்வுள்ள உயிரினங்களுக்கு இரக்கம் தொடர்பான தார்மீக அறிவுரைகளை வழங்குகின்றன. மேலும், அவற்றை உணரும் அனைவருக்கும் தகுதியைக் கொண்டுவரும்.[3][4]
சாம் என்பது தியானத்தின் ஒரு வடிவமாகவும், கடவுள்களுக்கான பிரசாதமாகவும் கருதப்படுகிறது.[5] சாமின் தலைவர் பொதுவாக ஒரு இசைக்கலைஞராகவே இருப்பார், சிம்பல் என்ற ஒரு தாள வாத்தியத்த்தை பயன்படுத்துவார் .
20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இதனை "பிசாசு நடனம்" என்றும் அழைக்க ஆரம்பித்தனர். இது கலைஞர்கள் அணியும் ஆடைகளின் மேற்கத்திய கருத்துகளிலிருந்து பெறப்பட்டது.[5]
உள்ளடக்கம்
தொகுசாம் பெரும்பாலும் பத்மசாம்பவா, 9 ஆம் நூற்றாண்டின் நைங்மாபா பள்ளியின் ஆசிரியர்கள் போன்ற பிற புனிதர்களின் வாழ்க்கைச் சம்பவங்களை சித்தரிக்கிறது.
மோகேயன் மற்றும் கமலசீலா ஆகிய இரு முக்கிய விவாதக்காரர்கள் அல்லது இயங்கியல் வல்லுநர்களுக்கிடையேயான லாசா அமைப்பின் பெரும் விவாதம், கிங்காயில் உள்ள கும்பம் மடாலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் ஒரு குறிப்பிட்ட சாம் நடனத்தில் விவரிக்கப்பட்டு சித்தரிக்கப்படுகிறது.[6] 841 ஆம் ஆண்டு லாங்தர்மா என்ற திபெத்திய கொடுங்கோல் மன்னன் லாக்லுங்பா பெல்கி டோர்ஜே என்ற துறவியால் படுகொலை செய்யப்பட்டதை நினைவுகூரும் வகையில், திபெத்திய புத்தாண்டான லோசரை முன்னிட்டு இந்த நடனத்தின் ஒரு மறு செய்கை நிகழ்த்தப்பட்டது. துறவி, கருப்பு அங்கி மற்றும் கருப்பு தொப்பி அணிந்து, அரண்மனைக்கு வெளியே நடனமாடிக்கொண்டே பேரரசர் முன் நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கப்பட்டார். பின்னர் மன்னரை படுகொலை செய்தார். தீமையின் மீது நன்மையின் வெற்றியைக் குறிக்கும் நடனம் இது.[7]
கருப்பு தொப்பி நடனம் ஒரு வஜ்ரகிலயா நடனம் மற்றும் ஓவியங்களில் அடிக்கடி சித்தரிக்கப்படும் நடனமாகும்.[8] பௌத்தத் துறவிகளால் நிகழ்த்தப்படும் இந்த நடனம் ஞானம் அடையவும் தீய சக்திகளை அழிக்கவும் இரண்டு நிலைகளில் செயல்படுகிறது. நடனக் கலைஞர்கள் பெரும்பாலும் ஒரு மண்டை ஓடு மற்றும் தாவணியை ஒன்றாகக் கட்டிக் கொள்கிறார்கள்.[9]
இந்தியாவின் கீழ்க்காணும் இடங்களில் கலாச்சார மற்றும் மத விழாக்களில் நடனங்கள் நிகழ்த்தப்படுகின்றன:
- இலாகௌல், ஸ்பீதி மாவட்டம்
- சிக்கிம்
- தரம்சாலா
- காளிம்பொங்
- டார்ஜீலிங் )
- கருநாடகம்
- பைலக்குப்பே தங்கக் கோயில்
- லடாக்
திபெத்
தொகுதிபெத்தியர்கள் பொதுவாக மோன்லம் பிரார்த்தனை திருவிழாவின் போது அதிகளவிலான பார்வையாளர்களுக்கு சாம் நடனத்தை நிகழ்த்துகிறார்கள்.[10]
சான்றுகள்
தொகு- ↑ "༈ རྫོང་ཁ་ཨིང་ལིཤ་ཤན་སྦྱར་ཚིག་མཛོད། ༼འཆ-༽" [Dzongkha-English Dictionary: "'CHA"]. Dzongkha-English Online Dictionary. Dzongkha Development Commission, Government of Bhutan. Archived from the original on 29 July 2012. பார்க்கப்பட்ட நாள் 11 November 2011.
- ↑ "Tibetan-English-Dictionary of Buddhist Teaching & Practice". Diamond Way Buddhism Worldwide. Rangjung Yeshe Translations & Publications. 1996. Archived from the original on 28 March 2010. பார்க்கப்பட்ட நாள் 11 November 2011. entry: 'cham.
- ↑ Pearlman, Ellen (2002). Tibetan Sacred Dance: a Journey into the Religious and Folk Traditions. Inner Traditions / Bear & Co. pp. 21, 32, 180. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-89281-918-8. பார்க்கப்பட்ட நாள் 16 October 2011.
- ↑ Clements, William M. (2006). The Greenwood Encyclopedia of World Folklore and Folklife: Southeast Asia and India, Central and East Asia, Middle East. Vol. 2. Greenwood Press. pp. 106–110. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-313-32849-7. பார்க்கப்பட்ட நாள் 16 October 2011.
- ↑ 5.0 5.1 Schrempf, Mona (1995). "From 'Devil Dance' to 'World Healing': Some Representations, Perceptions, and Innovations of Contemporary Tibetan Ritual Dances". In Korom, Frank J.; Steinkeller, Ernst (eds.). Proceedings of the 7th Seminar of the International Association for Tibetan Studies: Graz 1995. vol. 4. Wien: Verlag der Österreichischen Akademie der Wissenschaften. pp. 91–102. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 370012659X. இணையக் கணினி நூலக மைய எண் 37538399.
- ↑ Roccasalvo, Joseph F.(1980). 'The debate at bsam yas: religious contrast and correspondence.' Philosophy East and West 30:4 (October 1980). The University of Press of Hawaii. Pp.505-520. Source: "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 3 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 14 பிப்ரவரி 2023.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archive-date=
(help)CS1 maint: unfit URL (link) (accessed: 17 December 2007) - ↑ "Lossar Festival". Archived from the original on 20 January 2008.
- ↑ Chitipati/Shri Shmashana Adhipati (protector) - at Himalayan Art Resources
- ↑ Pearlman, Ellen (2002). Tibetan sacred dance : a journey into the religious and folk traditions. Rochester, Vt.: Inner Traditions. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0892819189.
- ↑ "Backgrounder: Monlam Prayer Festival". Focus on Tibet (Xinhua). 28 February 2010 இம் மூலத்தில் இருந்து 25 ஏப்ரல் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120425013809/http://tibet.news.cn/english/2010-02/28/c_13191476_2.htm.
மேலும் படிக்க
தொகு- Forman, Werner (photographs) & Rintschen, Bjamba (text) Lamaistische Tanzmasken: der Erlik-Tsam in der Mongolei. Leipzig: Koehler & Amelang, 1967 (text translated into German from Russian)
வெளி இணைப்புகள்
தொகு- Description of Black Hat dance in Bhutan பரணிடப்பட்டது 2022-05-22 at the வந்தவழி இயந்திரம்
- Examples of Cham Dance
- Video of Dance of the Ging பரணிடப்பட்டது 2022-03-31 at the வந்தவழி இயந்திரம்