பைலக்குப்பே

பைலக்குப்பே (Bylakuppe, கன்னடம்: ಬೈಲಕುಪ್ಪೆ; திபெத்தியம்: བལཀུཔེ) இந்தியாவின் கருநாடக மாநிலத்தில் மைசூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரம்.

பைலக்குப்பே
Bylakuppe
நகரம்
கௌதம புத்தரின் பொற்சிலைகள்
கௌதம புத்தரின் பொற்சிலைகள்
நாடு இந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்மைசூர்
பரப்பளவு
 • மொத்தம்2 km2 (0.8 sq mi)
மக்கள்தொகை (அண்.)
 • மொத்தம்20,000
 • அடர்த்தி10,000/km2 (26,000/sq mi)
மொழிகள்
 • அதிகாரபூர்வகன்னடம்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அசுஎ571104
Telephone code08223
வாகனப் பதிவுKA-45
அயல் நகரம்குசாலநகரம்
மக்களவைத் தொகுதிபெரியபட்டணம்
காலநிலைஈர, உலர் (கோப்பன்)

இந்தியாவில் தஞ்சமடைந்த திபெத்தியர்களுக்காக, ஏற்படுத்தப்பட்ட பல குடியேற்றங்களில் இரண்டு அகதி மறுவாழ்வு மையங்கள் பைலக்குப்பேயில் உள்ளன. இத்தகைய குடியேற்றங்கள் லக்சும் சாம்டூப்ளிங்க் (1961 இல்) மற்றும் டிக்யி லார்சோ (1969 இல்) ஆகியோரால் அமைக்கப்பெற்றது. தென்னிந்திய மாநிலமான கர்நாடகாவில், மைசூர் மாவட்டத்தின் மேற்கே, குடகு மாவட்டத்தில் உள்ள குஷால்நகருக்கு 6 கி.மீ. தொலைவில் இக்குடியேற்றம் உள்ளது.

மக்கள் தொகு

இங்கு பெரும்பாலும் திபேத்தியர்களே வாழ்கின்றனர். 1998ஆம் ஆண்டு, மத்திய திபேத் நிர்வாக அமைப்பின் திட்டக்குழு எடுத்த மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி 10,727 திபெத்தியர்கள் பைலக்குப்பேயில் இருந்தார்கள். புத்த விகாரையில் உள்ள திபெத்திய புத்த பிக்குகளும் இந்த எண்ணிக்கையில் அடங்குவார்களா என்று சரியாகத் தெரியவில்லை. இந்தியா வந்த திபேத்திய அகதிகளுக்காக 1959 ஆம் ஆண்டு கர்நாடக மாநில அரசால் ‘லீசாக’ அளிக்கப்பட்ட நிலங்களில் குடியேறியுள்ள திபேத்தியர்களின் தற்போதைய எண்ணிக்கை ஏறத்தாழ 20,000 அளவில் இருக்கக்கூடும்.

பைலகுப்பேயில் நிறைய விவசாயக் குடியேற்றங்கள் உள்ளன; உறைவிடங்கள் நெருக்கமாக உள்ளன; புத்த விகாரைகளும், வழிபாட்டு இடங்களும் மிகுதியாகக் காணப்படுகின்றன. புத்தர் வழிபாட்டின் மரபுகளுக்கு ஏற்றவாறு தனித்தனியாக வழிபாட்டு மையங்களும், கல்வி மையங்களும் இங்கு உள்ளன. புத்தமதக் கல்வி மையங்களில் குறிப்பிடத்தக்கவை  :

புத்தமதத்தைப்பற்றிய மேற்படிப்புக்காகவும் இங்கு பல்கலைக்கழகங்கள் உள்ளன. இவற்றில் முக்கியமானவை ‘செராஜெ’, ‘செராமெ’ மற்றும் ‘நாலந்தா’ ஆகும்.

வசதிகள் தொகு

பைலகுப்பே ஒரு சிறு நகரமாகும். இங்கு ஒரு காவல் நிலையமும், வங்கிகள், தொலைபேசி இணைப்பகம் மற்றும் அஞ்சலகமும் உள்ளன. உணவு விடுதிகளும், தங்கும் விடுதிகளும் கூட உள்ளன. பேருந்து, ஆட்டோ மற்றும் கார் வசதிகளும் உண்டு.

போக்குவரத்து தொகு

பைலகுப்பே, மாநில நெடுஞ்சாலை எண்.88 இல் அமைந்துள்ளது. தென்னிந்தியாவின் பிற முக்கிய நகரங்களோடு சாலை இணைப்பு உள்ளது. மைசூரு, பெங்களூரு, மங்களூர், சென்னை மற்றும் பனாஜி ஆகிய நகரங்களில் இருந்து பேருந்து வசதி உள்ளது.

பிற நகரங்களிலிருந்து பைலகுப்பேக்கு உள்ள தொலைவு(கி,மீ.களில்) : மைசூரு (82), பெங்களூரு (220), மங்களூர் (172), மண்ட்யா (122), சென்னை (585), ஹாசன் (80), மெர்காரா(36), காசர்கோடு (145).

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பைலக்குப்பே&oldid=3806424" இலிருந்து மீள்விக்கப்பட்டது