தகரா (திரைப்படம்)
தகரா என்பது 1979-இல் வெளிவந்த மலையாளத் திரைப்படம் ஆகும். பத்மராஜன் என்பவரின் கதையை பரதன் இயக்கியிருந்தார்.
தகரா | |
---|---|
இயக்கம் | பரதன் (திரைப்பட இயக்குநர்) |
தயாரிப்பு | வி. வி. பாலு |
கதை | பி. பத்மராஜன் |
இசை | ம. கோ. இராதாகிருட்டிணன் (பாடல்கள்) ஜான்சன் (பின்னணி) |
நடிப்பு | பிரதாப் போத்தன் சுரேகா நெடுமுடி வேணு கே. ஜி. மேனன் |
ஒளிப்பதிவு | அசோக்குமார் |
படத்தொகுப்பு | என். பி. சுரேஷ் |
கலையகம் | ஜோவியல் பிலிம்ஸ் |
விநியோகம் | Sagarika Release |
வெளியீடு | செப்டம்பர் 28, 1979 |
நாடு | இந்தியா |
மொழி | மலையாளம் |
இத்திரைப்படத்தில் பிரதாப் போத்தன், சுரேகா, நெடுமுடி வேணு மற்றும் கே. ஜி. மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். திரைப்படம் பரதன் மற்றும் வேணும் ஆகியோருக்கு நற்பெயர் பெற்றுத் தந்தது. 1992-இல் தமிழ் மொழியில் ஆவாரம் பூ என்ற பெயரில் மறு ஆக்கம் செய்யப்பட்டது.[1]
நடிகர்கள்
தொகு- பிரதாப் போத்தன் - தகரா
- சுரேகா மேரி - சுபாசினி
- நெடுமுடி வேணு - செல்லப்ப ஆசாரி
- கே. ஜி. மேனன் - மூப்பன்
- அநிருதன் - புள்ளை
- ஸ்ரீலதா (நடிகை) - காமாட்சி
- சாந்த தேவி - சுபாஷினியின் தாய்
விருதுகள்
தொகு- சிறந்த திரைப்படத்திற்கான பிலிம் பேர் விருது - மலையாளம் - (1979)[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Raman, Sruthi Ganapathy. "Vineeth on 'Sarvam Thaala Mayam' and what he wants from his roles: 'There is so much more I can do'". Scroll.in. பார்க்கப்பட்ட நாள் 2020-08-08.
- ↑ "The Times of India Directory and Year Book Including Who's who". 2 December 1982 – via Google Books.