தகிசர் ஆறு (Dahisar River) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் மும்பை பெருநகரப் பகுதியில் உள்ள மும்பை புறநகர் மாவட்டத்தின், மும்பை கிழக்கில் உள்ள சால்சேட் தீவில் உள்ள தகிசரில் பாயும் ஆறு ஆகும். தகிசர் ஆறு சஞ்சய் காந்தி தேசியப் பூங்காவில் உள்ள துளசி ஏரியிலிருந்து உற்பத்தியாகி, சிறீ கிருஷ்ணா நகர், தௌலத் நகர், தொழுநோய் காலனி, கந்தர் படா, சஞ்சய் நகர் வழியாக 12 கிலோ மீட்டர் தொலைவிற்கு பாய்ந்து, மனோர் கடற்கழி வழியாக அரபுக் கடலில் கலக்கிறது.[1] இதன் நீர்பிடிப்பு பகுதி 3,488 எக்டேர் பரப்பளவு கொண்டது.[2]

தகிசர் ஆறு
பெயர்दहिसर नदी
அமைவு
நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரா
மாவட்டம்மும்பை புறநகர்
மாநகராட்சிபெருநகரமும்பை மாநகராட்சி
நகரம்மும்பை
சிறப்புக்கூறுகள்
மூலம்தகிசர், சஞ்சய் காந்தி தேசியப் பூங்கா
 ⁃ அமைவுமும்பை புறநகர், மகாராட்டிரா, இந்தியா
முகத்துவாரம் 
 ⁃ அமைவு
அரபுக் கடல், இந்தியா
நீளம்12 km (7.5 mi)
வடிநில அளவு34.88 km2 (13.47 sq mi)
ஆழம் 
 ⁃ சராசரி10 m

மேற்கோள்கள்

தொகு
  1. "Final Report". Fact Finding Committee on Mumbai floods. March 2006 இம் மூலத்தில் இருந்து 4 மார்ச் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304032348/http://www.unisdr-apps.net/confluence/download/attachments/9994389/Fact+Finding+Committee+on+Mumbai+Floods-vol1.pdf?version=1. 
  2. Catchment number 203 as described in the BRIMSTOWAD report Table A7.1, page ES-14
"https://ta.wikipedia.org/w/index.php?title=தகிசர்_ஆறு&oldid=3784256" இலிருந்து மீள்விக்கப்பட்டது