தங்கக் குரங்கு தேயிலை
தங்கக் குரங்கு தேநீர் (சீன: 金猴 茶; பின்யின்: ஜான் ஹு சா) என்பது சீனாவில் உள்ள புஜியான் மற்றும் யுன்னான் மாகாணங்களிலிருந்து தோன்றிய கருப்பு தேநீர் ஆகும். மொட்டு மற்றும் முதல் இலை மட்டுமே தேயிலைக்காக எடுக்கப்படுகின்றன. இத்தேயிலை இலைகள் வெளிறிய தங்க நூல் போலக் காணப்படும். தங்கக் குரங்கு தேநீர் என்பது வெள்ளி ஊசி வெள்ளை தேநீரின் இணையெதிர் தேயிலை ஆகும். தங்கக் குரங்கு தேநீரின் சுவை மென்மையான, தேன் சுவையுடன், இறுக்கெதிர் தன்மையுடையது. பல்வேறு கருப்பு தேயிலைகளுக்கு "தங்கக் குரங்கு" எனப் பெயரிடப்பட்டுள்ளன. ஆனால் குறிப்பிட்ட சுவை கூறுகளைத் தீர்மானிக்க, இலையினைக் கவனித்து மாதிரியைச் சுவைத்துப் பார்த்தே அறியமுடியும்.[1] தங்க குரங்கு தேநீர் மிகவும் மதிப்புமிக்கது. இது 2009 உலக தேயிலை போட்டியில் சூடான தேயிலை பிரிவில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. இதன் மூலம் இதன் பெருமையினை நாம் அறியலாம்.[2]
இந்த தேயிலை உற்பத்தியானது ஒவ்வொரு வசந்த காலத்திலும் நடைபெறுகிறது. இதன் இலைகளும் மொட்டுகளும் கவனமாக கையால் பறிக்கப்பட்டுப் பதப்படுத்தப்படுகிறது.[3] இத்தேயிலை கிடைக்கக்கூடிய கருப்பு தேயிலைகளில் மிகச்சிறந்த ஒன்றாக கருதப்படுகிறது.[3] தேயிலையின் இலைகள் குரங்குகளின் நகங்களைப் போன்று உள்ளதால் இப்பெயர் வந்தது.[3] தங்கக் குரங்கு தேயிலை கடல் மட்டத்திலிருந்து சுமார் 1200 மீட்டர் உயரத்தில் வளர்க்கப்படுகின்றது.[4] இந்த தேயிலை மலைப்பாங்கான, மேகமூட்டம் மூடுபனி சூழ்ந்த யுன்னான் மாகாணத்தில் விளைகின்றது. இங்கு இத்தேயிலை 1700 ஆண்டுகளுக்கும் மேலாக பயிரிடப்படுகிறது.[4] பண்டைய காலங்களில், தங்கக் குரங்கு தேநீரானது உள்ளூர் நில உரிமையாளர்கள் மற்றும் தைப்பான்களால் நுகரப்பட்டது. தேநீரின் அரிதான தன்மை காரணமாக, தைப்பர்கள் அதற்குச் சிறப்புச் சத்துக்கள் உள்ளதாக நம்பினர். இது தங்களுக்குச் சுறுசுறுப்பு மற்றும் பாலியல் சக்தியினை தருவதாக தைபன்கள் கூறுகின்றனர்.[சான்று தேவை]
1700 ஆண்டுகளாக யுன்னானில் தேயிலை வளர்க்கப்பட்ட போதிலும், தங்கக் குரங்கு தேயிலை ஒப்பீட்டளவில் புதிய தேயிலை ரகமாகும். இது சுமார் 300 ஆண்டுகள் பழமையானது.[5] இது கடந்த 13-18 ஆண்டுகளில் ஏற்றுமதிக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ Teamatica (16 February 2018). "Golden Monkey Tea". Archived from the original on 17 February 2018. பார்க்கப்பட்ட நாள் 16 February 2018.
- ↑ "Two Winners at World Tea Championship / TeasEtc". www.teasetc.com. பார்க்கப்பட்ட நாள் 2019-04-22.
- ↑ 3.0 3.1 3.2 T7 Tea. "Golden Monkey Black Tea". Archived from the original on 4 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 4 April 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)CS1 maint: numeric names: authors list (link) - ↑ 4.0 4.1 "Stash: Golden Monkey Black Tea". பார்க்கப்பட்ட நாள் 4 April 2013.
- ↑ 5.0 5.1 "The Mystery Behind China's Black Tea Production". Archived from the original on 17 மே 2013. பார்க்கப்பட்ட நாள் 4 April 2013.