கே. வி. தங்கபாலு

இந்திய அரசியல்வாதி
(தங்கபாலு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கே. வி. தங்கபாலு (ஆங்கிலம்: K. V. Thangkabalu) ஓர் தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் சேலம் மாவட்டம் குறிச்சி கிராமத்தில் மார்ச் 15,1950ஆம் நாள் பிறந்தார். இவரது மனைவி பெயர் ஜெயந்தி. இவருக்கு 1 மகன்,1 மகள் உள்ளனர்.[1]

தங்கபாலு
தொகுதிசேலம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புமார்ச்சு 15, 1950 (1950-03-15) (அகவை 74)
சேலம் மாவட்டம், தமிழ்நாடு
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
துணைவர்ஜெயந்தி
பிள்ளைகள்1 மகன்,1மகள்
வாழிடம்சென்னை
இணையத்தளம்[1]
மூலம்: [2]

இவர் அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினராகவும்,தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவராகவும், தமிழக காங்கிரஸ் பொதுச்செயலாளராகவும், மத்திய அரசில் சமூகநலத்துறை இணை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.[2] ஒருமுறை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும், இருமுறை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும்,தமிழக காங்கிரஸ் தலைவராகவும் பணியாற்றி உள்ளார். இவரது மனைவி ஜெயந்தி மெகா டிவி எனும் தமிழ்த் தொலைக்காட்சி அலைவரிசையை நடத்தி வருகிறார்.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._வி._தங்கபாலு&oldid=4098565" இலிருந்து மீள்விக்கப்பட்டது