தங்கம்(I) சயனைடு
தங்கம்(I) சயனைடு (Gold(I) cyanide) என்பது AuCN என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தங்கம்(I) அயனியின் இருமச் சயனைடு என இது வகைப்படுத்தப்படுகிறது. நெடியற்றதாகவும் சுவையற்றதாகவும் மஞ்சள் நிறத்துடன்[4] ஒரு திண்மமாக தங்கம்(I) சயனைடு காணப்படுகிறது. ஈரமான தங்கம்(I) சயனைடு நிலைப்புத்தன்மை அற்றதாகும்.
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
தங்கம் மோனோசயனைடு
| |
இனங்காட்டிகள் | |
506-65-0 [PubChem] | |
ChemSpider | 61479 |
EC number | 208-049-1 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 68172 |
| |
பண்புகள் | |
CAuN | |
வாய்ப்பாட்டு எடை | 222.98 g·mol−1 |
தோற்றம் | அடர் மஞ்சள் தூள்[1] |
அடர்த்தி | 7.12 கி·செ.மீ−3[2] |
கரையாது | |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | அறுகோணம் |
புறவெளித் தொகுதி | P6mm (எண். 183) |
Lattice constant | a = 340 பைக்கோமீட்டர், c = 509 பைக்கோமீட்டர்[2] |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H300, H310, H330, H400, H410 | |
Kategorie:Wikipedia:Gefahrstoffkennzeichnung unbekannt ? | |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய நேர் மின்அயனிகள் | தாமிர(I) சயனைடு வெள்ளி சயனைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுபொட்டாசியம் இருசயனோ ஆரேட்டுடன் ஐதரோகுளோரிக் அமிலத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் தங்கம்(I) சயனைடு வீழ்படிவாகக் கிடைக்கிறது.
தங்கம்(III) குளோரைடுடன் பொட்டாசியம் சயனைடு சேர்த்து வினைபுரியச் செய்தாலும் தங்கம்(I) சயனைடு உருவாகிறது.[2]
வினைகள்
தொகுதங்கம்(I) சயனைடு திண்மமானது நீரில் கரையக்கூடிய சேர்மங்களை பல்வேறு சயனைடுகள், ஐதராக்சைடுகள், அமோனியா, தயோசல்பேட்டுகள் மற்றும் ஐதரோசல்பேட்டுகள் போன்ற ஈந்தணைவிகளுடன் உருவாக்குகிறது.[2]
பெரும்பாலான தங்கம் சேர்மங்களைப் போலவே, இதுவும் வெப்பமடையும் போது உலோகத் தங்கமாக மாறுகிறது.
கட்டமைப்பு
தொகுதங்கம்(I) சயனைடானது AuCN இன் நேரியல் சங்கிலிகளைக் கொண்ட ஓர் ஒருங்கிணைப்பு பலபடியாகும். அதாவது ஒவ்வொரு Au(I) மையமும் கார்பன் மற்றும் நைட்ரசனுடன் பிணைக்கப்பட்டுள்ளன. a = 3.40 Å மற்றும் c = 5.09 Å அடையாள அளவுருக்களுடன் அறுகோண வடிவத்தை ஏற்றுள்ளது.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ Sigma-Aldrich Co., product no. 254088.
- ↑ 2.0 2.1 2.2 2.3 O. Glemser; O. Glemser, H. Sauer (1963). "Gold(I) Cyanide". In G. Brauer (ed.). Handbook of Preparative Inorganic Chemistry, 2nd Ed. Vol. 2pages=1064. NY, NY: Academic Press.
- ↑ "C&L Inventory". echa.europa.eu. பார்க்கப்பட்ட நாள் 19 February 2022.
- ↑ Meyers Konversations-Lexikon, 1888: Goldcyanid
- ↑ Bowmaker, Graham A.; Kennedy, Brendan J.; Reid, Jason C. (1998). "Crystal Structures of AuCN and AgCN and Vibrational Spectroscopic Studies of AuCN, AgCN, and CuCN". Inorganic Chemistry 37 (16): 3968–3974. doi:10.1021/ic9714697. பப்மெட்:11670511.