தட்ரார்த் அகாக்கஸ்
தட்ரார்த் அகாக்கஸ் (Tadrart Acacus, அரபி: تدرارت عكاكس) மேற்கு லிபியாவில் உள்ள பாலைவனப் பகுதியாகும். இது சஹாரா பாலைவனத்தின் ஒரு பகுதியாக உள்ளது. இது கத் நகரத்துக்கு அருகில் உள்ளதுடன், அல்ஜீரிய நாட்டின் எல்லையும் அண்மையிலேயே இருக்கின்றது. தட்ரார்த் என்பது உள்ளூர் மொழியில் மலை என்னும் பொருளுடையது. இப் பகுதியில் அதிக அளவில் பாறை ஓவியங்கள் காணப்படுகின்றன.
தட்ரார்த் அகக்கஸ் பாறை ஓவியக் களம் | |
---|---|
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர் | |
வகை | பண்பாடு |
ஒப்பளவு | iii[1] |
உசாத்துணை | 287[1] |
UNESCO region | அரபு நாடுகள் |
பொறிப்பு வரலாறு | |
பொறிப்பு | 1985[1] (9ஆவது தொடர்) |
இப்பகுதி 1985 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டது. இப் பாறை ஓவிங்கள் கிமு 12,000 தொடக்கம் கிபி 100 வரையான காலப்பகுதியைச் சேர்ந்தவை என்பதுடன், பண்பாடு மற்றும் இயற்கை மாற்றங்களை வெளிப்படுத்துவனவாகவும் உள்ளன. இவ்வோவியங்களில், ஒட்டைச்சிவிங்கிகள், யானைகள், தீக்கோழிகள், ஒட்டகங்கள், குதிரைகள் போன்ற விலங்குகளுடன் மனிதர்களின் உருவங்களும் காணப்படுகின்றன. இசை, நடனம் முதலிய அன்றாட நிகழ்வுகள் தொடர்பில் மனிதர்கள் ஓவியங்களில் தீட்டப்பட்டுள்ளனர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 State of Conservation (SOC): Rock-Art Sites of Tadrart Acacus, 2011, பார்க்கப்பட்ட நாள் 4 May 2014