தன திரயோதசி
தன திரயோதசி (Dhana Trayodashi) அல்லது தந்தேரசு (Dhanteras, நேபாளி: धनतेरष, இந்தி: धनतेरस, மராத்தி: धनत्रयोदशी) இந்தியாவில், குறிப்பாக வட மாநிலங்களில், தீபாவளிக் கொண்டாட்டங்களில் முதல்நாளாக அமைகின்றது. நேபாளத்தில் இது திகார் திருவிழாவின் முதல்நாளாகும். இத்திருவிழா "தனவந்தரி திரயோதசி" எனவும் அழைக்கப்படுகின்றது. இது விக்ரம் நாட்காட்டியில் ஐப்பசி மாதத்தில் வரும் தேய்பிறையின் பதின்மூன்றாம் நாளில் கொண்டாடப்படுகின்றது.[1] இன்றைய நாளில் விலையுயர்ந்த தங்கம், வெள்ளி,பிளாட்டின நகைகளும் காசுகளும் வாங்கப்படுகின்றன.
கடைப்பிடிப்போர் | இந்துக்கள் (வட இந்தியா) |
---|---|
வகை | சமயம், இந்தியாவிலும் நேபாளத்திலும் |
முக்கியத்துவம் | தன்வந்தரி வழிபாடு |
அனுசரிப்புகள் | தங்கம்,வெள்ளி வாங்குதல் |
நாள் | தேய்பிறை துவாதசி |
நிகழ்வு | ஆண்டுதோறும் |
இந்நாளில் தன்வந்திரி வழிபடப்படுகின்றார். இந்து சமய நம்பிக்கைகளில் தனவந்திரி அனைத்து மருத்துவர்களுக்கும் ஆசிரியராகவும் ஆயுர்வேதத்தின் நிறுவனராகவும் கருதப்படுகின்றார்.
கொண்டாட்டம்
தொகுதந்தேரசு செல்வச்செழிப்பிற்காக வழிபடப்படும் திருவிழாவாக பரவலாக அறியப்பட்டாலும் தன்வந்திரிக் கடவுள் செல்வத்துடன் தொடர்பானவர் அல்ல; உடல்நலத்தை அருள்பவராகவே கருதப்படுகின்றார். மற்றொரு சமயக்கதையில் இன்றைய நாளில் பாற்கடலிலிருந்து இலக்குமி தோன்றியதாகக் கூறப்படுகின்றது. எனவே இலக்குமியும் குபேரரும் வழிபடப்படுகின்றனர்.
தொடர்புடைய மற்ற திருவிழாக்கள்
தொகுமேற்சான்றுகள்
தொகு- ↑ "About Dhanteras - Dhantrayodashi - Dhanwantari Triodasi". Archived from the original on 2016-10-28. பார்க்கப்பட்ட நாள் 2016-10-31.