தனா லாட், பாலி

இந்தோனேஷியாவின் பாலி தீவு அருகே உருவான பாறை

தனா லாட் (Tanah Lot)என்பது இந்தோனேசிய தீவான பாலிக்கு வெளியே அமைந்துள்ள ஒரு பாறை உருவாக்கம் ஆகும். இது பழங்கால இந்து புண்ணிய கோயிலான புரா தனா லாட் (அதாவது "தனா லாட் கோயில்"), இங்கு அமைந்துள்ளது. சிறந்த சுற்றுலா இடமாகவும், புகைப்படம் எடுப்பதற்கான பிரபலமான இடமாகவும் இது அமைந்துள்ளது.[1]

பூரா தனா லாட்
பூரா தனா லாட்டில் சூரிய அஸ்தமனம்
புரா தனா லாட்டிலிருந்து சிறிது தொலைவில் தனா லாட் பகுதியில் உள்ள புரா பட்டு போலோங் என்ற மற்றொரு கோயில்.

தனா லாட் கோயில் தொகு

தனா லாட் என்ற சொற்களுக்கு பாலினிய மொழியில் "கடல் [கடலில்] நிலம்" என்று பொருள் ஆகும்.[2] தபனானில் அமைந்துள்ளது. டென்பாசரின் வடமேற்கில்,சுமார் 20 கிலோமீட்டர்கள் (12 mi) தொலைவில் ஒரு பெரிய கடல் பாறையில் இந்த கோயில் உள்ளது. இது பல ஆண்டுகளாக கடல் அலைகளால் தொடர்ந்து வடிவமைக்கப்பட்டுள்ள பாறையாகும்.

தனா லாட் என்பது 16 ஆம் நூற்றாண்டின் டாங்யாங் நிரார்த்தா என்பவரின் படைப்பு என்று கூறப்படுகிறது. தென் கடற்கரையில் மேற்கொண்ட தனது பயணத்தின்போது, அந்தத் தீவு, பாறையில் அமைந்துள்ள அழகிய அமைப்பைக் கண்டார். அதன் பின்னர் அவர் அங்கே ஓய்வெடுக்க முடிவு செய்தார். சில மீனவர்கள் அவரைப் பார்த்து, அவருக்கு பரிசுகளை வாங்கினர். நிரார்த்தா பின்னர் அந்த சிறிய தீவில் இரவைக் கழித்தார். பின்னர் அவர் மீனவர்களிடம் பேசினார், பாறையில் ஒரு கோயில் கட்டும்படி அவர்களிடம் சொன்னார், ஏனென்றால் அவர் அந்த இடம் பாலினிய கடல் கடவுள்களை வணங்குவதற்கான புனித இடமாக அவர் உணர்ந்தார்.[3] கோயிலின் முக்கிய தெய்வம் தேவா பருணா அல்லது படாரா செகர எனப்படும். நிரார்த்தா அங்கு கடல் கடவுள் அல்லது கடல் சக்தி எனப்படும் அங்கு வழிபட்டார்.[4]

பல நூற்றாண்டுகளாக பாலினிய புராணங்களின் ஒரு பகுதியாக தனா லாட் கோயில் இருந்து வருகிறது. அக்கோயில் அங்கு கட்டப்பட்டது ஆகும். கடற்கரையைச் சுற்றியுள்ள ஏழு பாலினியக் கடல் கோயில்களில் இந்தக் கோயிலும் ஒன்றாகும். கடல் கோயில்கள் ஒவ்வொன்றும் தென்மேற்கு கடற்கரையில் ஒரு சங்கிலியாக, ஒன்றிலிருந்து அடுத்ததைப் பார்க்கும் வகையில் அமைந்துள்ள பெருமையினைக் கொண்டவையாகும். பாலினிய புராணங்களில் கூறப்படுகின்ற முக்கியத்துவம் தவிர, இந்த கோயில் இந்து மதத்தால் கணிசமாக ஒரு தாக்கத்தினை உண்டாக்கிய கோயிலாகக் கருதப்படுகிறது.

பாறை தீவின் அடிவாரத்தில், விஷமுள்ள கடல் பாம்புகள் இக்கோயிலை தீய சக்திகள் மற்றும் ஊடுருவல்காரர்களிடமிருந்து பாதுகாத்து வருவதாக நம்பப்படுகிறது. இந்த கோயில் ஒரு மாபெரும் பாம்பால் பாதுகாக்கப்படுவதாக நம்புகின்றனர். அந்தப் பாம்பு இது தீவை நிரார்த்தா நிறுவியபோது அவருடைய செலெண்டாங் (ஒரு வகை சாஷ்) இலிருந்து உருவாக்கப்பட்டதாகும்.

மறுசீரமைப்பு தொகு

1980 ஆம் ஆண்டில், கோயிலின் பாறை முகம் நொறுங்கத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து கோயிலைச் சுற்றியுள்ள பகுதியும், கோயிலின் உட்பகுதியும் ஆபத்தை எதிர்கொள்ளும் சூழல் எழுந்தது.[5] அப்போது ஜப்பான் அரசாங்கம் வரலாற்றுசிறப்பு மிக்க இந்த கோவில் மற்றும் பாலி சுற்றி அமைந்துள்ள குறிப்பிடத்தக்க இடங்களையும் பாதுகாக்கும் நோக்கில் இந்தோனேசிய அரசாங்கத்திற்கு கடனாக ஆர்.பி. 800 பில்லியன் (சுமார் US $ 130 மில்லியனை [6] வழங்கியது. இதன் விளைவாக, ஜப்பானிய நிதியுதவி மற்றும் மேற்பார்வையிடப்பட்ட புதுப்பித்தல் மற்றும் உறுதிப்படுத்தல் திட்டத்தின் காரணமாக தனா லாட்டின் "பாறை" மூன்றில் ஒரு பங்கு சிறப்பாக உரு பெற்றது.

சுற்றுலா தொகு

 
தனா லாட் கோயிலில் புனித நீர்

நுழைவுச் சீட்டுக் கட்டணம் இந்தோனேசிய நாட்டினருக்கு 20,000 ரூபியா ஆகும். (குழந்தைகளுக்கு Rp 15,000). ஆனால் வெளிநாட்டினர் மூன்று மடங்கு கட்டணமாக Rp 60,000 (குழந்தைகளுக்கு Rp 30,000) செலுத்த வேண்டும்.[7] கோயிலை அடைய, பார்வையாளர்கள் பாலினிய சந்தை வடிவில் அமைந்துள்ள கடைகளைக் கடந்து நடந்து செல்ல வேண்டும், அவை கடலுக்கு செல்லும் பாதையின் ஒவ்வொரு பக்கத்திலும் காணப்படுகின்றன. நிலப்பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக உணவகங்கள் உள்ளன.

அமைவிடம் தொகு

இந்த சுற்றுலாத் தலமானது தபனான் தென் பகுதியில் தோராயமாக 13 கிலோமீட்டர் (8 மைல்) தொலைவில் கேடிரி என்ற இடத்தில் உள்ள பெராபனில் அமைந்துள்ளது.

மேலும் காண்க தொகு

குறிப்புகள் தொகு

  1. South-East Asia on a shoestring. Lonely Planet South-East Asia: On a Shoestring. Lonely Planet Edition 7. Lonely Planet Publications, 1992.
  2. Philip Hirsch, Carol Warren. The politics of environment in Southeast Asia: resources and resistance. Publisher Routledge, 1998 ISBN 978-0-203-03017-2. 325 pages. pp 242-244
  3. South-East Asia on a shoestring. Lonely Planet South-East Asia: On a Shoestring. Lonely Planet Edition 7. Lonely Planet Publications, 1992. ISBN 0-86442-125-7, ISBN 978-0-86442-125-8. 922. pp257
  4. "Tanah Lot". balistarislad.com. Archived from the original on 10 ஜூலை 2015. பார்க்கப்பட்ட நாள் 5 July 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. Pringle, p 192-194
  6. 1980 exchange rate of US $1 to Rp 6000 from Gordon De Brouwer, Masahiro Kawai. Indonesian Rupiah in Exchange rate regimes in East Asia Vol 51. Publisher: Routledge, 2004. ISBN 0-415-32281-2, ISBN 978-0-415-32281-2. 466 pages
  7. "Harga tiket (Ticket Prices)". Tanah Lot website. பார்க்கப்பட்ட நாள் 16 February 2018.

குறிப்பு நூல்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தனா_லாட்,_பாலி&oldid=3765947" இலிருந்து மீள்விக்கப்பட்டது