தனிசா முகர்ஜி

இந்திய நடிகை

தனிசா முகர்சி (பிறப்பு 3 மார்ச் 1978 [1] ) என்பவர் இந்தி, தெலுங்கு, தமிழ் திரைப்படங்களில் நடிக்கும் ஓர் இந்திய நடிகை ஆவார். முகர்ஜி-சமர்த் குடும்பத்தில் ஒரு உறுப்பினர், இவர் திரைப்பட தயாரிப்பாளர் சோமு முகர்சி மற்றும் நடிகை தனுஜாவின் மகளாவார். ஸ்ஸ்ஸ்ஷ்ஷ்... என்ற 2003 இல் வெளியான இந்தி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சனுடன் தோன்றிய ராம் கோபால் வர்மாவின் சர்கார் திரைப்படம் மூலம் இவர் தனது முதல் வெற்றியைப் பெற்றார்.[2] இவர் உண்மைநிலை நிகழ்ச்சியான பிக் பாஸ் 7 இல் ஒரு போட்டியாளராக இருந்தார்.

தனிசா முகர்ஜி
பிறப்பு3 மார்ச்சு 1978 (1978-03-03) (அகவை 46)
மும்பை, மகாராஷ்டிரா, இந்தியா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2003–தற்போது
பெற்றோர்

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

தனிஷா முகர்ஜி ஷோமு முகர்ஜியின் மகள். இவரது தந்தை ஷோமு முகர்ஜி ஒரு வங்காள இந்து பாலிவுட் திரைப்பட இயக்குநர். இவரது தாயார் தனுஜா ஒரு மராத்தியர் மற்றும் மூத்த பாலிவுட் நடிகை. இவரது கஜோல் தங்கை ஒரு பாலிவுட் நடிகை.[3]

இவர் தனது பிக் பாஸ் 7 அர்மான் கோக்லியுடன் ஒரு வருடம் உறவில் இருந்தார். பின்பு அக்டோபர் 2014 இல் பிரிந்து சென்று விட்டார்.[4]

தொழில்

தொகு

தனிசா பாலிவுட்டில் தனது முதல் வெற்றியை ஸ்ஸ்ஸ்ஷ்ஷ்... திரைப்படம் தந்தது. வினய் ராய்க்கு ஜோடியாக இவர் நடித்த உன்னாலே உன்னாலே என்ற தமிழ் திரைப்படம் வெற்றி பெற்றது மேலும் சிறந்த அறிமுக நடிகைக்கான விஜய் விருதுகளில் இவருக்கு பரிந்துரைக்கப்பட்டது.

2005 ஆம் ஆண்டில், உதய் சோப்ராவுக்கு ஜோடியாக நீல் 'என்' நிக்கி என்ற திரைப்படத்தில் நிக்கிதா பக்ஷி என்ற பெண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இவர் பாப்கார்ன் காவ்!, மஸ்த் ஹோ ஜாவோ, சர்க்கார், டேங்கோ சார்லி பல திரைப்படங்களில் நடித்துள்ளார்[5]

திரைத்துறை பங்களிப்புக்கள்

தொகு

திரைப்படங்கள்

தொகு
  • இந்த பட்டியலில் உள்ள அனைத்து திரைப்படங்களும் இந்தி திரைப்படங்களாகும். இல்லையெனில் குறிப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆண்டு தலைப்பு பங்கு குறிப்புகள்
2003 ஸ்ஸ்ஸ்ஷ்ஷ்... மகேக் குஜ்ரால் திரைப்பட அறிமுகம்
2004 பாப்கார்ன் காவோ! மஸ்த் ஹோ ஜாவ் தான்யா
2005 நீல் 'என்' நிக்கி நிக்கிதா பக்ஷி
சர்க்கார் அவந்திகா
டேங்கோ சார்லி லச்சி நாராயணன்
2007 உன்னாலே உன்னாலே தீபிகா தமிழ் திரைப்பட அறிமுகம்
2008 ஒன்னு டூ திரீ சாந்தினி
காந்த்ரி பியாசி பிரியா தெலுங்கு திரைப்பட அறிமுகம்
சர்கார் ராஜ் அவந்திகா
2010 தும் மிலோ தோ சாஹி பெயரிடப்படாதது Cameo appearance
2016 அண்ணா ஷிகா
2021 காடே நமே அப்துல் சல்மா

தொலைக்காட்சி

தொகு
ஆண்டு தலைப்பு பங்கு குறிப்புகள்
2013 பிக் பாஸ் 7 பங்கேற்பாளர் 1வது இரண்டாம் இடம் [6]
2014 கேங்க்ஸ் ஆஃப் ஹசீபூர் நீதிபதி
2016 ஃபெயர் பாக்டர்: கற்றோன் கே கிலாடி 7 பங்கேற்பாளர் 4வது இடம்
2023 ஜலக் திக்லா ஜா (பாகம் 11) பங்கேற்பாளர்

மேற்கோள்கள்

தொகு
  1. "Tanisha Mukerji celebrates her birthday". https://www.indiatoday.in/amp/movies/celebrities/story/tanishaa-mukerji-turns-42-kajol-shares-throwback-pic-to-wish-little-sister-a-happy-birthday-1652238-2020-03-04. 
  2. "'Gangs of Haseepur' has something for all: Mandira Bedi". CNN-IBN. Archived from the original on 2014-04-21. பார்க்கப்பட்ட நாள் 2023-11-11.
  3. "Tanishaa Mukerji reveals how her 'amazing' family feels about her being unmarried at 43" (in ஆங்கிலம்). 18 July 2021. பார்க்கப்பட்ட நாள் 24 October 2021.
  4. "Tanishaa Mukerji breaks her silence on her split with Armaan" (in ஆங்கிலம்). 9 October 2014. பார்க்கப்பட்ட நாள் 7 December 2022.
  5. "Tanishaa Mukerji's candid confessions". http://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/Tanishaa-Mukerjis-candid-confessions/photostory/47453337.cms. 
  6. "'Bigg Boss 7' complete list of contestants". பார்க்கப்பட்ட நாள் 15 September 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தனிசா_முகர்ஜி&oldid=4162293" இலிருந்து மீள்விக்கப்பட்டது