தனுஜா
தனுஜா சமார்த் (Tanuja Samarth) பிறப்பு: செப்டம்பர் 23, 1943 ) தனுஜா' என்று பிரபலமாக அறியப்படும் இவர் இந்திய திரைப்பட நடிகை ஆவார், இவர் பெரும்பாலும் பாலிவுட் திரைப்படத் துறையில் பணியாற்றுகிறார். முகர்ஜி-சமார்த் குடும்பத்தைச் சேந்ர்தவரான இவர் நடிகை ஷோபனா சமார்த் மற்றும் தயாரிப்பாளரான குமார்சென் சமார்தின் மகள் ஆவார். இவர் திரைப்பட தயாரிப்பாளரான சோமு முகர்ஜியை திருமணம் செய்து கொண்டார். நடிகைகள் கஜோல் மற்றும் தனிஷா ஆகிய இரு மகள்கள் இவருக்கு உள்ளனர். .[1] இவர் இருமுறை பிலிம்பேர் விருதுகள் பெற்றுள்ளார். இவர் நடித்த படங்களில் " மெம்டிடி (1961), சந்த் அவுர் சூரஜ் (1965), பஹ்ரேன் பிர் பி பை ஆயேங்கி (1966), ஜுவெல் தீப் (1967), நை ரோஷினி (1967), ஜீனி கி ரா (1969), ஹாத்தி மேரா சாத்தி (1971), அனுபவ் (1971), மேரே ஜீவன் சாத்தி" (1972) மற்றும் தோ சோர் (1972) போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கவையாகும்..[1] நடிகர்கள் சஞ்சீவ் குமார், ராஜேஷ் கன்னா மற்றும் தர்மேந்த்ரா ஆகியோருடன் இணைந்து 60 களின் பிற்பகுதியிலும் 70 களின் ஆரம்பத்திலும் பிரபலமாக இருந்தார்.
தனுஜா | |
---|---|
பிறப்பு | 23 செப்டம்பர் 1943 பாம்பே, மும்பை மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1952–1999; 2002–த்ற்போதைய |
பெற்றோர் | குமார்சென் சமார்த் மற்றும் ஷோபன சமார்த் |
வாழ்க்கைத் துணை | ஷோமு முகர்ஜி (m.1973 – 2008; அவரது இறப்பு) |
பிள்ளைகள் | 2 (கஜோல் மற்றும் தனிஷா) |
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுதனுஜா மராத்தி குடும்பத்தை சேர்ந்த நடிகை ஷோபனா சமார்த் மற்றும் தயாரிப்பாளரான குமார்சென் சமார் ஆகியோரின் மகள் ஆவார். நடிகை நூதன் உட்பட மூன்று சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரன் உள்ளனர். இவருடைய பாட்டி ராட்டன் பாலி மற்றும் அத்தை நளினி ஜெயவந்த் ஆகியோரும் நடிகைகளாவார்கள். தனுஜாவின் பெற்றோர் அவர் குழந்தையாக இருந்த சமயத்தில் பிரிந்தனர், ஷோபனா மோதிலால் என்ற நடிகருடன் இணைந்தார். ஷோபனா தனுஜா மற்றும் அவரது மூத்த சகோதரி நூதனுக்காக ஒரு படத்தை தயாரித்தார். இவரது இரண்டு சகோதரிகள்; சதுரா, ஒரு கலைஞர், ரேஷ்மா மற்றும் அவரது சகோதரர் ஜெய்தீப், நடிப்புலகிற்கு வரவில்லை.
தனுஜா தயாரிப்பாளர் ஷோமு முகர்ஜியை 1973 இல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நடிகைகள் கஜோல் மற்றும் தனிஷா ஆகிய இரு மகள்கள் உண்டு . கஜோல் நடிகர் அஜய் தேவ்கானை மணந்தார். 64 வயதான ஷோமு 2008 ஏப்ரல் 10 அன்று மாரடைப்பால் காலமானார். தயாரிப்பாளகள் ஜோய் முகர்ஜி மற்றும் தேப் முகர்ஜி ஆகியோருக்கு இவர் அண்ணியாவார், நடிகைகள் மோனிஷ் பேகில், ராணி, ஷர்பானி மற்றும் இயக்குனர் அயன் முகர்ஜி போன்றோருக்கு அத்தையாவார்..
தொழில்
தொகுதனது மூத்த சகோதரி நூதனுடன் "ஹமாரி பேட்டி" என்ற திரைப்படத்தில் (1950)இல் குழந்தை நட்சத்திரமாக தனுஜா நடித்தார். பின்னர், இவரது சகோதரி நூதன் முன்னணி பாத்திரத்தில் நடிக்க இவரது தாயார் இயக்கிய "சப்லி" (1960) என்ற திரைப்படத்தில் அறிமுகமானார், ராஜ் கபூர், மதுபாலா மற்றும் கீதா பாலி போன்ற நடிகர்கள் நடித்த படமான கிதார் ஷர்மா இயக்கிய "ஹமாரி யாத் ஆயேகி" என்ற திரைப்படம் குறிப்பிடத்தக்கதாகும். .
ஷாஹித் லத்திப் இயக்கிய "பஹ்ரேன் பிர் பி பை ஆயேங்கி" (1966), அவரது ஆரம்பகால திரைப்படங்களில் ஒன்றாகும். குரு தத் குழுவினரின் "வோ ஹன்ஸ்கே மிலே ஹம்சே" பாடலில் தோன்றினார் . மேலும் , அவரது தொழில் வாழ்க்கையிலும் முக்கிய கதாபாத்திரங்கள் கிடைக்கத் துவங்கின.[2] தனுஜா "ஜுவெல் தீப்" என்ற வெற்றிப்படத்தில் துணை நடிகையாக நடிக்க ஆரம்பித்தார். ஜிதேந்திராவுடன் நடித்து அதே ஆண்டில் வெளிவந்த "ஜீனே கி ரா" என்ற அடுத்த படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தனுஜா பைசா யா பியார் என்ற படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருது பெற்றார்.
"ஹாத்தி மேரா சாத்தி" (1971) என்ற படத்தின் வெற்றிக்கு பின்னர் "தூர் கி ராஹி , மேரே ஜீவன் சாத்தி", " சோர் " ,"ஏக் பார் மொசூக்கா டோ" (1972), "காம் சோர்" , "யாரானா", "குத்தார்" , மற்றும் "மசூம்"போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.. "பவித்ரா பாபா", "பூட் பங்லா" மற்றும் "அனுபவ்" ஆகிய படங்களும் இவர் நடித்துள்ளார். "சாகோல்", "உனத் மைனா மற்றும் பிட்ரூரோன் ஆகிய மராத்தி படங்களிலிலும் நடித்துள்ளார்.
பல ஆண்டுகளாக நடித்து வந்த பின்னர், தனுஜா திரைப்படங்களில் இருந்து ஓய்வு பெற்றார், அவரது கணவர் இறந்தவுடன் தற்போது முன்னாள் நடிகர்களுடன் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். "பியார் கி கஹானி, "குதார் "(1982) போன்ற படங்களில் அமிதாப் பச்சன் கதாநாயகனாக நடிக்க அவருக்கு "(அண்ணி) வேடங்களில் நடிக்க வேண்டியிருந்தது. நடிகர் ராஜ் கபூரின் "பிரேம் ராக்" (1982) படத்தில் ஒரு துணை பாத்திரத்தில் நடித்தார்.
விருதுகள் மற்றும் பரிந்துரைகள்
தொகு- 1964: பெங்கால் பிலிம் ஜர்னலிஸ்ட்ஸ் அசோசியேசன் விருது - சிறந்த துணை நடிகை (இந்தி), பெனாசிர் (1964)
- 1968 - பிலிம்பேர் பரிந்துரை - சிறந்த துணை நடிகை ஜுவெல் தீப்
- 1970 - பிலிம்பேர் பரிந்துரை - சிறந்த துணை நடிகை பைசா யா பியார்
- 2013 - சிறந்த நடிகை - மராத்தித்திரைப்படம் "பிட்டுர் ரூன்"
- 2014 - வாழ்நாள் சாதனையாளர் விருது- அப்சர பிலிம் & தொலைக்காட்சி தயாரிப்பளர்கள் குழுவினரின் விருது
- 2014 - பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது
குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 Tanuja Profile, Picture Gallery பரணிடப்பட்டது 18 செப்டெம்பர் 2009 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Baharen Phir Bhi Aayengi review Upperstall.com.
வெளி இணைப்புகள்
தொகு- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் Tanuja
- Sparkling spitfire: Tanuja Dinesh Raheja's profile on Tanuja, ரெடிப்.காம்