தன்சிலா கான்
தன்சிலா கான் (Tanzila Khan) ஒரு பாக்கித்தான் ஊனமுற்றோர் உரிமை ஆர்வலர், எழுத்தாளர், ஊக்கமூட்டும் பேச்சாளர், [1] மற்றும் கேர்லிதிங்சின் நிறுவனர் ஆவார், இது குறைபாடுகள் உள்ள பெண்களுக்கு விடாய்க்கால அணையாடைகளை வழங்குகிறது. கான் இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் கல்வி பற்றிய விழிப்புணர்வு மற்றும் அணுகல், குறிப்பாக குறைபாடுகள் உள்ளவர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் கவனம் செலுத்துவதில் முக்கியப் பங்காற்றுகிறார். இவர் இந்த விடயத்தினைப் பற்றி பல புத்தகங்களை எழுதியுள்ளார் மற்றும் பொது உரைகள் மற்றும் கருத்தரங்குகளை வழங்கியுள்ளார். இவர் பாக்கித்தானில் உள்ள குறைபாடுகளை களைவதற்காகவும் பணி செய்து வருகிறார். [1]
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுகான் பிறந்ததிலிருந்து சக்கர நாற்காலியில் இருக்கிறார். [1] இவரது இளமையில், இவர் நாடகச் செயல்பாடுகளில் ஈடுபட்டார். இவர் பின்னர் உலகளாவிய மாற்றங்களை உருவாக்கும் இளைஞர் முகாம் மற்றும் இளைஞர் செயல்பாட்டு உச்சிமாநாடு ஆகியவற்றுக்காக பணியாற்றினார், அது தொடர்பான பல பட்டறைகளை வடிவமைத்தார். பின்னர், பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் உரிமைகள் மற்றும் தொடர்புடைய பிரச்சினைகளுக்கான பயிற்சி தொகுதியான "தியேட்டர் ஆஃப் த டேபூ" இல் நாடக ஊடகத்தை மறுபரிசீலனை செய்தார். கான் லண்டன் பல்கலைக்கழகத்தில் சர்வதேச வளர்ச்சியில் இளங்கலை சட்டப் பட்டம் பெற்றார்.
கேர்லி திங்ஸ்
தொகுஉள்ளூர் மாதவிடாய் தடை காரணமாக, பாக்கித்தானில் பெண் சுகாதாரப் பொருட்களுக்கான ஆதரவு போதுமானதாக இல்லை. இதற்கு பதிலளிக்கும் விதமாக, கான், பாக்கித்தானில் உள்ள பெண்களுக்கு மேலும் அணுகக்கூடிய வகையில், கிரிளி திங்ஸ் பி.கே என்ற தொடக்க நிலை வணிக நிறுவனத்தை நிறுவி, உணவு விநியோக சேவை முறையில் வீட்டிலும், இவசர காலங்களிலும் பெண்களுக்கு விடாய்க்கால அணையாடைகளை வழங்கினார். இவசர கருவிகலப் பெட்டிகளில்"ஒரு ஒற்றைப்பயன்பாடு கொண்ட உள்ளாடைகள், மூன்று பட்டைகள் மற்றும் இரத்தக் கறை நீக்கி" ஆகியனவற்றை உள்ளடக்கி இருக்கும்.
கான், தனது பணிகளைச் செய்யத் துவங்கிய போது ஏற்பட்ட இவரது அனுபவங்களை பின்வருமாறு விவரிக்கிறார். தான் சிறு சிறு வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது மாதவிடாய் ஏற்பட்ட போது தன்னைப் போன்ற சக்கர நாற்காலி பயன்படுத்துபவர்களுக்கு கடைகள் எளிதில் அனுகக் கூடிய வகையில் இல்லாமல் இருந்ததாகக் கூறுகிறார். இவரது நிறுவனம், கருத்தடைகளை வழங்குவதை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. [2] சில பெண்கள் கடைகளில் திறந்தவெளியில் வாங்குவதில் சங்கடமாக இருக்கும் தயாரிப்புகளையும், கழிப்பறை இருக்கை கவர்கள் மற்றும் முடி அகற்றும் குழைவுகளையும் வழங்குகிறது, மேலும் பயன்படுத்தப்பட்ட அணையாடைகளை சுகாதாரமாக அகற்றுவதற்கான வழிமுறைகளையும் ஆராய்ந்து வருகிறது. [3]
படைப்புகள்
தொகுகான் தனது முதல் புத்தகத்தை தனது 16 ஆம் வயதில் வெளியிட்டார், அதன் மூலம் வந்த வருவாயினை தனது பகுதியில் சமூக திட்டங்களுக்கு நிதியளித்தார். இவர் பின்வரும் படைப்புகளை எழுதியுள்ளார்:
- எ ஸ்டோரி ஆஃப் மெக்சிகோ (மெக்சிகோவின் கதை)
- தெ பெர்பெக்ட் சிட்சுவேசன்: சுவீட் சிக்ஸ்டீன் ( சரியான சூழ்நிலை: இனிமையான பதினாறு )
விருதுகள்
தொகுகான் தனது செயல்பாட்டிற்காக பின்வரும் விருதுகளை வென்றுள்ளார்:
எதிர்காலத்தின் இளம் இணைப்பாளர் ( சுவீடிய நிறுவனம் ). இளம் தலைவர் ( உமன் டெலிவர் ). கதீஜா துல் குப்ரா விருது (வாதாடலுக்கான தேசிய அளவிலான அங்கீகாரம்). இளைஞர் வாகையாளர் ( பேக்கார்ட் அறக்கட்டளை ). SRHR மற்றும் குறைபாடுகள் குறித்து லாகூரில் ஒரு பயிற்சி நிறுவனத்தை நிறுவஆம்ப்லிஃபை சேன்ஞ் இலிருந்து நிதி பெறப்பட்டது. 2012 இல் டெட் இல் பேச அழைக்கப்பட்டார் [4]
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "Tanzila Khan Is On A Mission To Inspire Young People With Disabilities". six-two by Contiki (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 2018-04-24. Archived from the original on 2021-03-13. பார்க்கப்பட்ட நாள் 2021-03-13.
- ↑ "'Girly Things' is an app that wants to make menstrual products accessible to every woman" (in en). 2019-05-06. https://images.dawn.com/news/1182647.
- ↑ S, Dhwani (2019-04-21). "In Conversation With Tanzila Khan: Author, Disability Rights Activist, And The Founder Of Girlythings". Feminism In India (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Archived from the original on 2021-01-20. பார்க்கப்பட்ட நாள் 2021-03-13.
- ↑ Surpassing Limitations: Tanzila Khan at TEDxKinnaird (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2021-03-28