தன திரயோதசி

தன திரயோதசி (Dhana Trayodashi) அல்லது தந்தேரசு (Dhanteras, நேபாளி: धनतेरष, இந்தி: धनतेरस, மராத்தி: धनत्रयोदशी) இந்தியாவில், குறிப்பாக வட மாநிலங்களில், தீபாவளிக் கொண்டாட்டங்களில் முதல்நாளாக அமைகின்றது. நேபாளத்தில் இது திகார் திருவிழாவின் முதல்நாளாகும். இத்திருவிழா "தனவந்தரி திரயோதசி" எனவும் அழைக்கப்படுகின்றது. இது விக்ரம் நாட்காட்டியில் ஐப்பசி மாதத்தில் வரும் தேய்பிறையின் பதின்மூன்றாம் நாளில் கொண்டாடப்படுகின்றது.[1] இன்றைய நாளில் விலையுயர்ந்த தங்கம், வெள்ளி,பிளாட்டின நகைகளும் காசுகளும் வாங்கப்படுகின்றன.

தன திரயோதசி
கடைபிடிப்போர்இந்துக்கள் (வட இந்தியா)
வகைசமயம், இந்தியாவிலும் நேபாளத்திலும்
முக்கியத்துவம்தன்வந்தரி வழிபாடு
அனுசரிப்புகள்தங்கம்,வெள்ளி வாங்குதல்
நாள்தேய்பிறை துவாதசி
நிகழ்வுஆண்டுதோறும்

இந்நாளில் தன்வந்திரி வழிபடப்படுகின்றார். இந்து சமய நம்பிக்கைகளில் தனவந்திரி அனைத்து மருத்துவர்களுக்கும் ஆசிரியராகவும் ஆயுர்வேதத்தின் நிறுவனராகவும் கருதப்படுகின்றார்.

கொண்டாட்டம்

தொகு

தந்தேரசு செல்வச்செழிப்பிற்காக வழிபடப்படும் திருவிழாவாக பரவலாக அறியப்பட்டாலும் தன்வந்திரிக் கடவுள் செல்வத்துடன் தொடர்பானவர் அல்ல; உடல்நலத்தை அருள்பவராகவே கருதப்படுகின்றார். மற்றொரு சமயக்கதையில் இன்றைய நாளில் பாற்கடலிலிருந்து இலக்குமி தோன்றியதாகக் கூறப்படுகின்றது. எனவே இலக்குமியும் குபேரரும் வழிபடப்படுகின்றனர்.

தொடர்புடைய மற்ற திருவிழாக்கள்

தொகு

மேற்சான்றுகள்

தொகு
  1. "About Dhanteras - Dhantrayodashi - Dhanwantari Triodasi". Archived from the original on 2016-10-28. பார்க்கப்பட்ட நாள் 2016-10-31.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தன_திரயோதசி&oldid=3856505" இலிருந்து மீள்விக்கப்பட்டது