தமயந்தி ஜோஷி
தமயந்தி ஜோஷி (Damayanti Joshi) (பிறப்பு: 1928 செப்டம்பர் 5 - இறப்பு: 2004 செப்டம்பர் 19) [1] இவர் ஓர் இந்திய பாரம்பரிய கதக் நடனக் கலைஞராவார். இவர் 1930 களில் மேடம் மேனகாவின் குழுவில் நடனமாடத் தொடங்கினார். இக்குழு உலகின் பல பகுதிகளுக்கும் பயணம் செய்தது. தமயந்தி ஜெய்ப்பூர் கரானாவின் சீதாராம் பிரசாத் என்பவரிடம் கதக் கற்றுக் கொண்டு, மிகச் சிறிய வயதிலேயே ஒரு திறமையான நடனக் கலைஞரானார். பின்னர் அச்சன் மகாராஜ், லச்சு மகாராஜ் மற்றும் லக்னோ கரானாவின் ஷம்பு மகாராஜ் ஆகியோரிடமிருந்தும் பயிற்சி பெற்றார். இதனால் இரு மரபுகளிலிருந்தும் நுணுக்கங்களைத் தெரிந்து கொண்டார். மும்பையில் உள்ள தனது நடனப் பள்ளியில் குருவாக மாறுவதற்கு முன்பு இவர் 1950களில் சுதந்திரமாக நிகழ்ச்சிகளை நிகழ்த்தினார். மேலும், 1960களில் முக்கியத்துவம் பெற்றார். [2]
தமயந்தி ஜோஷி | |
---|---|
பிறப்பு | மும்பை, இந்தியா | 5 செப்டம்பர் 1928
இறப்பு | 19 செப்டம்பர் 2004 மும்பை, இந்தியா | (அகவை 76)
பணி | நடனக் கலைஞர், நடன இயக்குனர், நடன பயிற்றுவிப்பாளர். |
இவர் 1970இல் பத்மசிறீ விருதினை பெற்றார். 1968இல் நடனத்திற்காக சங்கீத நாடக அகாதமி விருதைப் பெற்றார். உத்தரப்பிரதேசத்தின் லக்னோவில் கதக் கேந்திரத்தின் இயக்குநராகவும் இருந்தார். [3]
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் பயிற்சி
தொகு1928 இல் மும்பையில் ஒரு இந்து குடும்பத்தில் பிறந்த இவர், [4] தளபதி முனைவர் சாஹிப் சிங் சோகே மற்றும் அவரது மனைவி லீலா சோகே என்பாரது வீட்டில் வளர்ந்தார். லீலா சோகே அவர்கள் மேடம் மேனகா என்று அறியப்பட்டார். [5] மேனகா தனது சொந்த குழந்தையை இழந்துவிட்டதால், தமயந்தியைத் தத்தெடுக்க முடிவு செய்திருந்தார். ஜோஷியின் தாய் வத்சலா ஜோஷி தனது மகளை தர மறுத்தார். பின்னர் இருவரும் கூட்டு பாதுகாவலர்களாக இருக்க ஒப்புக்கொண்டனர். மேனகாவின் குழுவில் சுற்றுப்பயணம் செய்தபோது பண்டிட் சீதாராம் பிரசாத்திடமிருந்து கதக் பற்றி தமயந்தி அறிந்து கொண்டார். இவர் 15 வயதாக இருந்தபோது ஐரோப்பாவின் முக்கிய நகரங்களில் தனது நடன நிகழ்ச்சிகளை நிகழ்த்தினார். சாஹிப் சிங் சோகே தமயந்தியின் தாயை தன்னிடம் பணியமர்த்தினார். எனவே ஜோஷி அங்கே கல்வியைப் பெற்றார். [6] [7] [8] மேடம் மேனகாவின் சமகாலத்தவர்களில், பார்சி சமூகத்தைச் சேர்ந்த ஒரு முன்னோடி பாரம்பரிய நடனக் கலைஞரான ஷிரின் வஜிஃப்தார் என்பவரும் ஒருவராவார். [9]
மும்பையின் சிறீ ராஜராஜேஸ்வரி பரத நாட்டிய கலா மந்திரின் முதல் மாணவியான தமயந்தி, அங்கு நட்டுவனாரிடையே புகழ் பெற்ற குருவான டி.கே.மகாலிங்கம் பிள்ளையிடமிருந்து பரதநாட்டியம் கற்றுக்கொண்டார். [10]
தொழில்
தொகு1950களின் நடுப்பகுதிக்குப் பிறகு, தமயந்தி ஒரு வெற்றிகரமான தனி கதக் நடனக் கலைஞராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். பண்டிதர்கள், அச்ச்ன் மகாராஜ், லச்சு மகாராஜ் மற்றும் லக்னோ கரானாவின் ஷம்பு மகாராஜ் மற்றும் ஜெய்ப்பூர் கரானாவின் குரு ஹிராலால் ஆகியோரிடமிருந்து பயிற்சி பெற்றார். குறிப்பாக, தில்லியின் கதக் கேந்திராவில், இவர் ஷம்பு மகாராஜின் கீழ் பயிற்சி பெற்றார். [11] கதக் நடனத்தில் " புடவையை " ஒரு உடையாக அறிமுகப்படுத்திய முதல் நபர் இவராவார்.
கைராகர், இந்திரா கலா விஸ்வத்யாலயா மற்றும் லக்னோவில் உள்ள கதக் கேந்திராவிலும் கதக் நடனத்தைக் கற்பித்தார். சங்கீத நாடக அகாதமி விருது (1968) மற்றும் பத்மசிறீ (1970) ஆகிய விருதுகளால் கௌரவிக்கப்பட்டார். [12] இவர் பைரேஷ்வர் கௌதம் என்பவரின் குருவாகவும் இருந்தார்.
1971ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கத்தின் திரைப்படப்பிரிவு தயாரித்த கதக் குறித்த ஆவணப்படம் மற்றும் 1973இல் ஹுகுமத் சாரின் என்பவர் இயக்கிய "தமயந்தி ஜோஷி" என்ற மற்றொரு படம் இவரைப் பற்றி எடுக்கப்பட்டது.
இறப்பு
தொகுபக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு ஒரு வருடம் கழித்து மும்பையின் தாதரில் உள்ள தனது வீட்டில் 2004 செப்டம்பர் 19, அன்று இவர் இறந்தார். [13]
குறிப்புகள்
தொகு- ↑ "Kathak FAQ: Short notes on the popular Kathak dancers". Nupur Nritya – Sangeet Academy. Archived from the original on 14 April 2010.
- ↑ Massey, p. 64
- ↑ "TRIBUTE: A life of intricate rhythms". The Hindu. 18 September 2005 இம் மூலத்தில் இருந்து 11 நவம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20121111044414/http://www.hinduonnet.com/thehindu/mag/2005/09/18/stories/2005091800360500.htm.
- ↑ Menon, Rekha (1961). Cultural profiles, (Volume 2). Inter-National Cultural Centre. p. 17.
- ↑ Giants Who Reawakened Indian Dance பரணிடப்பட்டது 2020-02-21 at the வந்தவழி இயந்திரம், Kusam Joshi, 2011, Hinduism Today, Retrieved 5 September 2016
- ↑ "TRIBUTE: A life of intricate rhythms" இம் மூலத்தில் இருந்து 2012-11-11 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20121111044414/http://www.hinduonnet.com/thehindu/mag/2005/09/18/stories/2005091800360500.htm.
- ↑ Lakshmi, C. S. (1998). Damayanti, Menaka's daughter: a biographical note based on the Visual History Workshop, February 15, 1998 Issue 8 of Publication (SPARROW). SPARROW. p. 11.
- ↑ Lakshmi, C.S.. "A life dedicated to dance" இம் மூலத்தில் இருந்து 2005-03-25 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20050325212935/http://www.hindu.com/lr/2004/11/07/stories/2004110700280400.htm.
- ↑ Kothari, Sunil. "Remembering Shirin Vajifdar – Pioneer in All Schools of Dance". https://thewire.in/183843/remembering-shirin-vajifdar-dancer/.
- ↑ "Life dedicated to dance". The Hindu. 3 January 2003 இம் மூலத்தில் இருந்து 2 டிசம்பர் 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081202113401/http://www.hinduonnet.com/thehindu/fr/2003/01/03/stories/2003010301520800.htm.
- ↑ Massey, Reginald (1999). India's kathak dance, past present, future. Abhinav Publications. p. 29. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7017-374-4.
- ↑ "Padma Awards". Ministry of Communications and Information Technology. Archived from the original on 10 July 2011.
- ↑ Lakshmi, C.S. (7 November 2004). "A life dedicated to dance". The Hindu இம் மூலத்தில் இருந்து 25 மார்ச் 2005 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20050325212935/http://www.hindu.com/lr/2004/11/07/stories/2004110700280400.htm.