தமிழ்நாடு எல்லை மீட்புப் போராட்டங்கள்

(தமிழக எல்லை மீட்புப் போராட்டங்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தமிழ்நாடு எல்லை மீட்பு போராட்டங்கள் என்பது விடுதலை இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் பகுப்பது தொடர்பாக தமிழகம் செய்த போராட்டங்களை குறிக்கப் பயன்படுகிறது. தமிழ்நாடு திருவாங்கூர்-கொச்சி மாகாணத்தை மேற்கிலும், மைசூர் மாகாணத்தை வடமேற்கிலும், தெலுங்கானாவை வடக்கிலும் கொண்டிருந்தது. இது தவிர தமிழகத்துக்கும் இலங்கை நாட்டுக்கும் இடையான கட்சத்தீவு போன்ற தீவுகளையும் கிழக்கில் கொண்டிருந்தது.

தமிழ்நாடு எல்லை மீட்புப் போராட்டங்கள் நடத்திய மாநாட்டில் ம. பொ. சி. மற்றும் இடி. கே. சண்முகம்
தமிழ்நாடு எல்லை மீட்புப் போராட்டங்கள் நடத்திய ஊர்வலம்

தமிழ்நாடு எல்லைக்குழு

தொகு

தமிழ்நாடு எல்லைகள் குறித்த சிக்கல்களுக்காகவும் அதன் தீர்வுகளுக்காகவும் அன்றைய தமிழ்நாடு காங்கிரசு கட்சித்தலைவராக இருந்த காமராசர் தமிழ்நாடு எல்லைக்குழு ஒன்றை அமைத்தார். இதற்குத் தலைவராக முத்துரங்க முதலியார் இருந்தார். எல்லைகளில் உள்ள தமிழர் பகுதிகள் தமிழகத்தோடு இணைய பல்வேறு முயற்சிகளை இக்குழுவினர் மேற்கொண்டனர்.[1]

தமிழர் - தெலுங்கர் மாநில எல்லைகளில்

தொகு

படாசுக்கர் எல்லை ஆணையம்

தொகு

படாசுக்கர் தலைமையில் எல்லை ஆணையம் 1957ல் அமைக்கப்பட்டது. அது சித்தூர் மாவட்டத்தில் உள்ள தமிழர் பகுதிகளை கண்டறிந்து 1957இல் தீர்ப்பு வழங்கியது. அதன்படி திருத்தணி வட்டத்தில் 290 கிராமங்கள், சித்தூரில் 29 கிராமங்கள், புத்தூரில் 320 கிராமங்களும், 417 சதுர மைல் நிலப்பரப்பும் தமிழகத்தில் சேர ஆணையிட்டது. அதனால் 2,39,502 மக்களும் தமிழகத்திற்குள் வந்தனர். வள்ளிமலை, திருவாலங்காடு, திருத்தணி, ஓசூர் பகுதிகள் தமிழகத்துக்கு கிடைத்தன. சித்தூர் நகரம், புத்தூர், நகரி, புதுப்பேட்டை, ஏகாம்பரக்குப்பம் பகுதிகள் ஆந்திராவிலேயே இருந்தன.[1]

தமிழர் - கன்னடர் மாநில எல்லைகளில்

தொகு

தமிழர் - மலையாளிகள் மாநில எல்லைகளில்

தொகு

பொதுவுடைமை கட்சிகளின் நிலைப்பாடுகள்

தொகு

ஐக்கிய கேரளம் வேண்டுமென்று மலையாளிகள் போராடினர். கேரளப் பொதுவுடைமைக் கட்சியின் செயலாளர் ஏ.கே.கோபாலன் தேவிகுளம், பீர்மேடு எங்களுக்குதான் சொந்தமென்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அப்போது தமிழ்நாடு பொதுவுடைமைக் கட்சியின் செயலாளராக இருந்த ஜீவானந்தம் பின்வருமாறு அறிக்கை வெளியிட்டார். அதன் காரணமாக தமிழகப் பொதுவுடைமைக் கட்சிக்குள்ளே சிக்கல்கள் எழுந்தன.[2] [உரை 1]

திராவிட இயக்கத்தின் நிலைப்பாடு

தொகு

‎திருவாங்கூர்-கொச்சி மாகாணத்தில் இருந்த தமிழர் அதிகம் வாழும் பகுதிகளை ‎திருவாங்கூர்-கொச்சி மாகாணத்திலேயே இருப்பதற்கு ஈ. வெ. இராமசாமி ஒப்புதல் அளித்தார். ஈ. வெ. இராமசாமியின் இந்த போக்கை மலையாளிகளின் பக்கம் ஈ. வெ. இராமசாமி சார்புத்தன்மையுடன் நடந்ததாக குற்றம் சாட்டுகின்றன தமிழ்த்தேசிய அமைப்புகள்.[3] தினத்தந்தி நாளிதழில் ஈ. வெ. இராமசாமி இந்த சிக்கல் தொடர்பாக அளித்த பேட்டி.[உரை 2]

தீவுகள்

தொகு

கச்சத்தீவு

தொகு

அந்தமான்

தொகு

நிக்கோபார்

தொகு

மேற்கோள் நூல்கள்

தொகு
  1. 1.0 1.1 பழ. நெடுமாறன் (1995). தமிழன் இழந்த மண். மதுரை: தமிழ்க்குலம் பதிப்பாலயம். p. 14.
  2. எழில். "தமிழ்நாடு எல்லைப் போராட்டம் ஒரு சோக வரலாறு". http://ilakkiyam.nakkheeran.in/. Archived from the original on 2015-04-01. பார்க்கப்பட்ட நாள் 24 மார்ச் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help); External link in |publisher= (help)
  3. மணியரசன் (மார்ச்சு 2012). "தேவிகுளம் பீர்மேடு மீட்பும் திராவிட குழப்பங்களும்". தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் பிப்ரவரி1_2012 (பிப்ரவரி1_2012). doi:5 மார்ச்சு 2015. http://www.keetru.com/index.php/2009-10-07-10-47-41/12012/18791-2012-03-01-06-36-25. 

உரைகளும் பேட்டிகளும்

தொகு