தமிழக காட்டுயிர்ச் சரணாலயங்கள்
ஓரிடத்தில் உள்ள அரிய அல்லது அபாயத்திற்குள்ளான உயிரனத்தைப் பாதுகாக்கும் பொருட்டு அது வாழும் இயற்கையான சூழல் சரணாலயமாக அங்கீகரிக்கப்படுகிறது. தமிழகத்தின் காட்டுயிர்ச் சரணாலயங்கள்:[1]
- முதுமலை சரணாலயம் - 217.76 ச.கி.மீ. - நீலகிரி மாவட்டம்.
- கோடியக்கரை சரணாலயம் - 17.26 ச.கி.மீ. - நாகப்பட்டினம் மாவட்டம்.
- களக்காடு காட்டுயிர் சரணாலயம் - - திருநெல்வேலி மாவட்டம். 1962 ஆம் ஆண்டு, களக்காடு புலிகள் சரணாலயமும் (251 சதுர கிலோ மீட்டர்கள்), முண்டந்துறை புலிகள் சரணாலயமும் (567 சதுர கிலோமீட்டர்கள்) உருவாக்கப்பட்டன. 1988 ஆம் ஆண்டில், இந்த இருசரணாலயங்களையும் ஒன்றிணைந்து, இக்காப்பகம் உருவாக்கப்பட்டது.
- இந்திராகாந்தி காட்டுயிர் சரணாலயம் - 850 ச.கி.மீ. - கோயம்புத்தூர் மாவட்டம்.
- வல்லநாடு வெளிமான் சரணாலயம் - 16.41 ச.கி.மீ. - தூத்துக்குடி மாவட்டம்.
- திருவில்லிபுத்தூர் நரை அணில் சரணாலயம் - 485.2 ச.கி.மீ. - விருதுநகர் மாவட்டம்.
- கன்னியாகுமரி காட்டுயிர் சரணாலயம் - 402.39 ச.கி.மீ. - கன்னியாகுமரி மாவட்டம்.
- கொடைக்கானல் காட்டுயிர் சரணாலயம் - 608.95 ச.கி.மீ. - திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டம்.
- கங்கைகொண்டான் புள்ளிமான் சரணாலயம் - 2.88 ச.கி.மீ. - திருநெல்வேலி மாவட்டம்.
- காவேரி வடக்கு காட்டுயிர் சரணாலயம் - 504.33 ச.கி.மீ. - கிருட்டிணகிரி மற்றும் தருமபுரி மாவட்டம்.
- சத்தியமங்கலம் வனவிலங்கு உய்வகம் மற்றும் புலிகள் காப்பகம்
- உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம் -திருவாரூர் மாவட்டம்
மேற்கோள்கள்
தொகு- ↑ மனோரமா இயர் புக் 2015. மலையாள மனோரமா. 2015. pp. 178, 194.