தமிழர் மட்பாண்டக்கலை

(தமிழர் மண்பாண்டக்கலை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தமிழர் மட்பாண்டக்கலை அல்லது தமிழர் வனைதற்றெழில் என்பது தமிழர்கள் மரபுரீதியாக மட்பாண்டங்களை உருவாக்கும் கலையைக் குறிக்கும். தமிழ்நாட்டில் இன்றும் இக்கலை நிலைபெற்றிருக்கின்றது. இத் தொழிற்கலையில் ஈடுபடுபவர்கள் குயவர் எனப்படுவர்.

ஒரு மட்பாண்டக் கடை

மண்பாண்டங்களை உருவாக்குவது, குறிப்பாக குயவர் சக்கரத்தின் கண்டுபிடிப்பு உலக நாகரிகத்தின் ஒரு மைல்கல்லாகும். குயவர் சக்கரம் எகிப்து அல்லது மெசொபொத்தேமியா அல்லது சீனாவிலோ கண்டுபிக்கப்பட்டு வட இந்தியா வந்து சில காலம் சென்று தென்னிந்தியா வந்தது.

மண்பாண்டங்கள் தொகு

 
குயவரின் சக்கரம்

வளோர் இன மக்கள் அடுப்பு. மண் சட்டி, பானை, குளுமை (தானியங்களைப் பாதுகாக்கும் மட்கலம்) போன்ற பொருட்களை அன்றாடம் செய்து விற்றுத் தங்களது தேவைகளைப் பூர்த்தி செய்து வருகின்றனர்.[1] மேலும், தோண்டி, குடம், கலையம், விளக்கு, முகூர்த்தப் பானை, தாளப் பானை, கடம், பூத்தொட்டி, அகல் என்று பலவகையான பொருட்களையும் கலைத் தன்மையோடு உருவாக்கி வருகின்றனர். வருகின்றன. மண் பாண்டத்தில் சமைப்பதும், மண் பானைச் சோறும்

அமைப்புகள் தொகு

தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் சங்கம் மண்பாண்டக்கலையில் ஈடுபடுவோரின் முன்னேற்றத்துக்காகவும், மண்பாண்டக்கலையை வளர்ப்பதையும் நோக்கமாகவும் கொண்டு செயற்படும் ஒர் அமைப்பு ஆகும். இது தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கிளைகளைக் கொண்டுள்ளது

யாழ்ப்பாணம் மண்பாண்ட கலைஞர் கூட்டுறவு சங்கம் யாழ்ப்பாணத்தில் மண்பாண்டத் தொழிற்கலையில் ஈடுபடுபவர்களுக்கான கூட்டுறவு ஆகும். இதில் 25 குடும்பங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன, 15 வரையான குடும்பங்கள் தொழிலில் ஈடுபட்டு வருகின்றார்கள். இதன் தலைவராக பழனிமுருகையா ராஜேந்திரம் செயற்படுகிறார்.[2]

படத் தொகுப்பு தொகு

இவற்றையும் பார்க்கவும் தொகு

உசாத்துணைகள் தொகு

  • கி. விசாகரூபன். (2004). நாட்டார் வழக்காற்றியல். யாழ்ப்பாணம்: மலர் பதிப்பகம்.

மேற்கோள்கள் தொகு

  1. http://www.tamilvu.org/courses/diploma/a081/a0814/html/a0814662.htm
  2. "அழிவடைந்து வரும் மட்பாண்டக்கலை". Archived from the original on 2015-02-08. பார்க்கப்பட்ட நாள் 2015-10-30.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழர்_மட்பாண்டக்கலை&oldid=3595774" இலிருந்து மீள்விக்கப்பட்டது