தமிழ்க் கல்வி

தமிழ் மொழியை பேச, வாசிக்க, எழுத, பல்வேறு தேவைகளுக்கும் பயன்படுத்த உதவும் கல்வியே தமிழ்க் கல்வி ஆகும். தமிழ்க் கல்வி, பாடத்திட்டத்தையும், கற்பிக்கும் பயற்சி முறையையும் சிறப்பாக குறிக்கும். மாணவருக்கு ஆர்வம் ஊட்டி, சூழலுக்கேற்ப, தமிழின் சிறப்புக்களை விளக்கி, இயல்பாக கற்பிப்பதை தமிழ்க் கல்வி வலியுறுத்துகிறது. தமிழர் தாயக நிலங்களான தமிழ்நாடு, இலங்கை பகுதிகளில் மட்டுமின்றி உலகின் பல பகுதிகளிலும் தமிழ் கற்பிக்கப்படுகிறது.

தமிழ் இளங்கலை

தொகு

இந்தியா (தமிழ்நாடு), இலங்கை, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் இருக்கும் சில பல்கலைக்கழகங்களில் தமிழ் ஒரு பட்டப்படிப்பு துறையாக இருக்கிறது. தமிழ் இளங்கலை கல்வி பொதுவான பணிகளுக்கு நல்ல அடித்தளமாக இருக்கின்றது.

தமிழ்க் கல்வியை வழங்கும் பல்கலைக்கழகங்கள்

தொகு

தமிழ் இளங்கலைப் பாடங்கள்

தொகு

தமிழியல்

தொகு

முதன்மைக் கட்டுரை: தமிழியல்

தமிழ் மொழியையும் தமிழர் பண்பாடு, வரலாறு, சமூகம், அறிவியல் போன்ற அம்சங்களையும் முதன்மையாக ஆயும் இயல் தமிழியல் ஆகும். தமிழியல் தமிழும் தமிழருக்கும் பிற மொழிகளுக்கும் இனங்களுக்கும் இருக்கும் உறவுகளைச் சிறப்பாக ஆய்கின்றது. தமிழையும் தமிழர் சார் விடயங்களைப் பிறருக்கும், பிறர் மொழியையும் அவர்களுடைய சிறப்புகளைத் தமிழ் புலத்துக்கும் பரிமாறும் ஒரு துறையாகவும் தமிழியலைப் பார்க்கலாம்.

இணையத்தில் தமிழ் கல்வி

தொகு

தமிழை பள்ளியில் முழுமையாக கற்க இயலாமலும், தகுந்த ஆசான்கள் இல்லாமலும் இருக்கும் தமிழ் மாணவர்களுக்கு இணையம் நல்ல கருவி. பின்வரும் இணைய தளங்கள் தமிழ் கற்பதற்கு உதவும்.

தமிழில் கல்விக்கான இணையம்

தொகு

[http://www.tamilnotes.com[

தமிழில் கல்விக்கான இவ்விணையம் சிறப்பாக இன்றைய உலக அறிவியல் மற்றும் கலை தொழில்நுட்பங்கள் சார்பான விடையங்களை தமிழில் வெளிக்கொண்டுவருவதற்கான ஓர் சிறிய ஆரம்பமாகும்.

தமிழ் மொழி மூலம் தம் கல்வியினை தொடர்கின்ற, மற்றும் தமிழ் மொழி மூலம் தம் கல்வியினை கற்பதற்கு ஆவலாய் இருக்கின்ற மாணவர்களை பிரதானமாக மையப்படுத்துகின்றபோதும் ஆர்வம் உள்ள அனைவரும் தம் துறைசார் தகவல்களை பெறுவதற்கு வழியமைக்க வேண்டும் என்பதே குறிக்கோளாகும். இதனை அடிப்படையாகக் கொண்டே இணையத்தின் பெரும்பாலான தலைப்புக்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அத்தலைப்பு தொடர்பாக நீங்கள் ஆர்வம் உடையவர்கள் எனின் நீங்களும் உங்கள் ஆக்கங்களை பகிர்ந்துகொள்ளலாம்.

தமிழ் இணையப் பல்கலைக்கழகம்

தொகு

உலக தமிழர்களுக்கு தமிழ் கல்வி பயில உதவும் முறையில் தமிழக அரசால் அமைக்கப்பட்ட தளம். உத்யோக பூர்வமான, பட்ட படிப்புக்கான சேவைகளை தருகின்ற தளம்.

பென்சல்வேனிய பல்கலைக்கழகத்தின் தமிழ் கல்வித் தளம்

தொகு

இணையத்தை பாவித்து ஆசிரியர் உதவியுடன் தமிழில் பேசவும், எழுதவும் கற்றுக்கொள்ள உதவும் பென்சல்வேனிய பல்கலைக்கழகத்தின் தளம். தொடக்க நிலையில் இருந்து படிப்படியாக உயர்நிலை நோக்கி பயிற்சிகள் உள்ளன. ஒலி கோப்புக்கள், யாவா நுட்பம் கொண்டு செய்யப்பட்ட பயிற்சிகள், படிநிலை தேர்வுகள் என்பன சிறப்பம்சங்கள்.

தமிழ் பாடநூல்

தொகு

ஆங்கிலம் மூலம் படிபடியாக தமிழ் கற்பதற்கு 38 பகுதிகளை கொண்ட "தமிழ் பாட நூல்".

ஆங்கிலம் மூலம் தமிழ் படித்தல்

தொகு

செந்தில் குமார் சேரன் அமெரிக்காவில் ஆங்கில சூழலில் வளர்ந்து பின் தன் சுய முயற்சியால் தமிழ் கற்றவர். அவரது அனுபவங்கள் பலருக்கு உந்துதலாக வழிகாட்டலாக அமையும். பயிற்சிகள், கதைகள், பாட்டுக்கள், உரையாடல்கள், பொது சொற்கள் என பல மூலங்களை தந்து பாவித்து தமிழ் படிக்க இத்தளம் உதவுகின்றது.

தமிழம்

தொகு

பொள்ளாச்சி நசன் அவர்களின் கல்வி ஆராச்சி அனுபவங்கள் இணைய நுட்பங்களை ஒருங்கே இணைத்து உருவாக்கப்பட்டுவரும் படி நிலை தமிழ் பாடங்கள்.

உசாத்துணைகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்க்_கல்வி&oldid=3369051" இலிருந்து மீள்விக்கப்பட்டது