தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி, திருவையாறு

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி, திருவையாறு (Tamil Nadu Government Music College, Thiruvaiyaru) தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத் துறையின் கட்டுப்பாட்டில், தமிழ்நாடு தஞ்சாவூர் மாவட்டம் திருவையாற்றில் இயங்கிவருகின்ற கல்லூரியாகும்.

தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி, திருவையாறு

பிற கல்லூரிகள் தொகு

தமிழ்நாட்டில் இசைக் கல்லூரிகள் சென்னை, மதுரை, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் உள்ளன.

துவக்கம் தொகு

இக்கல்லூரி 1965-ல் அரசர் கல்லூரியில் ஒரு துறையாகத் துவங்கப்பட்டு. சென்னை பல்கலைக்கழக இணைவோடும், 1983 முதல் பாரதிதாசன் பல்கலைக்கழக இணைவு பெற்றும் நடைபெற்று வந்தது. 1997ல் அரசர் கல்லூரியின் ஒரு துறையாக செயல்பட்டு வந்த இசைத்துறை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியாக செயல்பட்டு வருகிறது. 2014ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழக இணைவு பெற்று செயல்பட்டு வருகிறது.[1]

பட்டப்படிப்புகள் தொகு

தமிழ்நாட்டில் அரசு இசைக்கல்லூரிகளில் மூன்று ஆண்டு பட்டயம், ஒரு வருட இசை ஆசிரியர் பயிற்சி, இரண்டு ஆண்டு முதுநிலை பட்டயம், மூன்று ஆண்டு இளங்கலை இசை, இரண்டு ஆண்டு முதுகலை இசை, இசையில் முனைவர் பட்டம் அனைத்தும் ஒருங்கே அமையப் பெற்ற கல்லூரி என்ற சிறப்பினை இக்கல்லூரி பெற்றுள்ளது. வீணை, வயலின், மிருதங்கம், பரதநாட்டியம், தவில், நாதசுரம், நாட்டுப்புறக் கலை, குரலிசை, நட்டுவாங்கம் போன்ற பாடங்கள் முதன்மை மற்றும் துணைப்பாடங்களாக அமைந்துள்ளன.[1]

மேற்கோள்கள் தொகு

வெளியிணைப்புகள் தொகு