தமிழ்நாடு இசை மற்றும் நுண் கலைகள் பல்கலைக்கழகம்

தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகம் (The Tamil Nadu Dr. J. Jayalalithaa Music and Fine Arts University - TNJMFAU), தமிழக இசை மற்றும் நுண்கலைகளை வளர்ப்பதற்காக 2013-இல் தமிழ்நாடு அரசு சென்னையில் நிறுவிய பல்கலைக்கழகம் ஆகும். [1][2][3] தமிழ்நாடு இசைப் பல்கலைக்கழகம் என்ற பெயரை, மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் டாக்டர். ஜெ. ஜெயலலிதா அவர்களின் பெயரில் செப்டம்பர், 2019 முதல் தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகம் எனப்பெயர் மாற்றம் செய்யப்பட்டது.[4] 31 ஏக்கர் பரப்பளவில் அமைந்த இந்த இசைப் பல்கலைக்கழகத்தில் புதிய கட்டிடங்கள் கட்ட, 11 டிசம்பர் 2020 அன்று தமிழக முதல்வர் எடப்பாடி க. பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.[5][6]

தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகம்
முந்தைய பெயர்
தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகம்
குறிக்கோளுரைபயிற்சி பண்படுத்தும்
வகைஅரசு பல்கலைக்கழகம்
உருவாக்கம்2013
நிறுவுனர்ஜெ. ஜெயலலிதா
வேந்தர்தமிழக முதல்வர்
துணை வேந்தர்டாக்டர். ப்ரமீலா குருமூர்த்தி
அமைவிடம்
இராஜா அண்ணாமலைபுரம், சென்னை, 600 028
, ,
சுருக்கப் பெயர்த.நா.ஜெ.இ.க.க.ப
இணையதளம்tnmfau.ac.in

பியிற்றுக்கும் படிப்புகள் தொகு

இளங்கலை மற்றும் முதுகலை இசை (M. A (Music) தொகு

  1. வாய்ப்பாட்டு
  2. வயலின்
  3. மிருதங்கம்
  4. நாகஸ்வரம்
  5. பரத நாட்டியம்
  6. இசையியல்

இளங்கலை மற்றும் முதுகலை நுண்கலைகள் (M. F. A) தொகு

  1. ஓவியம்
  2. கட்புலத் தொடர்பாடல்

பட்டயப் படிப்புகள் (3 ஆண்டுகள்) தொகு

  • இசை மற்றும் கவின் கலைகள்

சான்றிதழ் படிப்புகள் (2 ஆண்டுகள்) தொகு

  • வாய்ப்பாட்டு
  • வீணை
  • வயலின்
  • மிருதங்கம்

தொடர்பு முகவரி தொகு

தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகம், டாக்டர். டி. ஜி. எஸ். தினகரன் சாலை, சென்னை - 600 028 தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044-24629036 மின்னஞ்சல்: tnmfauvc@gmail.com

இப்பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட உறுப்பு நிறுவனங்கள் தொகு

  1. தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி, சென்னை
  2. தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி, மதுரை
  3. தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி, கோயம்புத்தூர்
  4. தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி, திருவையாறு
  5. தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி
  6. அரசு சிற்பக் கல்லூரி
  7. எம். ஜி. ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம்
  8. இராணி மெய்யம்மை ஆச்சி தமிழ் இசைக் கல்லூரி
  9. சிறீ அன்னை காமாட்சி கலைக்கூடம்
  10. பிரிட்ஜ் கவின் கலைகள் அகாதமி
  11. கலைக்காவேரி கவின் கலைகள் கல்லூரி
  12. அரசு கவின் கலைகள் கல்லூரி
  13. தியாகராசர் இசைக் கல்லூரி
  14. ரவிராஜ் கவின் கலைகள் கல்லூரி
  15. மெக்கன்ஸ் ஊட்டி கட்டிடவடிவமைப்பு நிறுவனம்
  16. அழகப்பா நிகழ்த்துக் கலைக் கல்லூரி
  17. சென்னை திரைப்பட தொழில் பள்ளி
  18. ஸ்ரீ ரேகானுகாம்பாள் கவின் கலைகள் மற்றும் கைவினைக் கல்லூரி
  19. பால்மி டியோர் திரைப்பட மற்றும் ஊடக கல்லூரி

மேற்கோள்கள் தொகு

  1. "State University ,Tamil Nadu". University Grants Commission. பார்க்கப்பட்ட நாள் 20 July 2016.
  2. "Tamil Nadu government to set up music and fine arts university". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 29 October 2013. பார்க்கப்பட்ட நாள் 20 July 2016.
  3. "Sign up for Off-Campus Music, Art Diploma Courses". New Indian Express. 26 August 2015. பார்க்கப்பட்ட நாள் 20 July 2016.
  4. தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தின் பெயர் மாற்றம்: ஜெயலலிதா பல்கலைக்கழகம் என மாற்றி தமிழக அரசு ஆணை
  5. தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழக புதிய கட்டடத்திற்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்
  6. தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழக புதிய கட்டடத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல்

வெளி இணைப்புகள் தொகு