தமிழ்நாடு அரசு வருவாய் துறை நேரடி நியமன அலுவலர்ச் சங்கம்

தமிழ் நாடு அரசு வருவாய் துறை நேரடி நியமன அலுவலர்ச் சங்கம் (ஆங்கிலம்:Tamil Nadu Direct Recruitment Revenue Officers Association) இச் சங்கத்தின் நிறுவனத் தலைவர் ஓய்வு பெற்ற வட்டாட்சியர் திரு. வீ. இருளப்பன் ஆவார்.

தமிழ் நாடு அரசின் முதுகெலும்புத் துறையான வருவாய் துறையில் தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் சார் நிலைப் பணிகள் ஒன்று தொகுதி இரண்டின் கீழ் முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தெரிவு செய்யப்பட்டு மாவட்ட வருவாய் அலகுகளில் உதவியாளர் நிலையில் பணியமர்த்தப் படுகின்றனர். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட நேரடி நியமன வருவாய் உதவியாளர்கள் (புரோ அசிஸ்டண்ட்) மாவட்ட வருவாய் அலகுகளில் பணி நியமனம் செய்யப்பட்டு முதல் ஒருமாதக் காலம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் பயிற்சி மேற்கொண்டு இரண்டு மாத கால பவானி சாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று ஒருமாத கால ஒரத்தநாடு நில அளவைப் பயிற்சி முடித்து பின்னர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 12 மாதமும் வருவாய் துறை தேர்வுகள் மூன்று தாள்களை முடித்த பின்னர் உள்வட்ட வருவாய் ஆய்வாளராக இரண்டு ஆண்டு பணி முடித்து பின்னர் 18 மாத மாவட்ட ஆட்சியர் அலுவலக பணி முடித்த பின்னர் இக் கால கட்டத்தில் நீதித் துறை தாள்கள் மூன்றில் தேர்ச்சி பெற்ற பின்னர் மண்டல துணை வட்டாட்சியராகப் பதவி உயர்வு வழங்கப்படுகிறது. இவ்வாறு பதவி உயா்வு பெறுவதில் நேரடி நியமன உதவியாளா்களுக்கும் பதவி உயா்வில் வரும் உதவியாளா்களுக்கும் 2 - 1 என்ற விகிதத்தில் துணை வட்டாட்சியா் பதவிக்கு பாிந்துரை செய்யப்படுகிறது.

சங்கத்தின் தோற்றமும் வரலாறும்

தொகு

இச் சங்கத்தை தோற்றுவித்ததில் நிறுவனத் தலைவா் வீ. இருளப்பன், அப்ரோஸ் பாஷா, பாாி வேல், குமரேசன், போன்றோா்களின் பங்களிப்புகள் மிக மிக அதிமாகும். தமிழ்நாடு வருவாய் துறை அலுவலா் சங்கத்தின் செயல்பாடுகளால் பாதிக்கப்பட்ட பயிற்சி வருவாய் ஆய்வாளா்களால் ஒன்று சோ்ந்து ஆரம்பிக்கப்பட்ட இயக்கமாகும்.

ஆதாரங்கள்

தொகு

வெளியிணைப்பு

தொகு

தமிழ் நாடு அரசு வருவாய் துறை நேரடி நியமன அலுவலர்ச் சங்கம் பரணிடப்பட்டது 2014-11-10 at the வந்தவழி இயந்திரம்