தமிழ்நாட்டில் நடந்த குறிப்பிடத்தக்க கொலைகள்
தமிழ்நாட்டில் நடந்த குறிப்பிடத்தக்க கொலைகள் (அல்லது படுகொலைகள்) எனும் இக்கட்டுரை தமிழ்நாட்டில் நடந்த அரசியல், தொழில் அல்லது அமைப்புகளின் முக்கிய நபர்கள் அல்லது செய்திகளில் அதிகம் இடம்பிடித்த குறிப்பிடத்தக்கவர்களைப் பற்றியது.
- இராஜீவ் காந்தி திருபெரும்புத்தூரில் 1991ல் மனித வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார்.
- லீலாவதி, இந்தியப் பொதுவுடமைக் கட்சி, (மார்க்சிஸ்ட்) கட்சியின் உறுப்பினர் 1997 ஆம் ஆண்டு கொல்லப்பட்டார்.[1]
- பழனி பாபா கொலை.
- திமுக முன்னாள் அமைச்சர் தா. கிருட்டிணன் மதுரையில் 2003ல் படுகொலை செய்யப்பட்டார்.
- காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கடந்த 3.9.2004ல் கோயில் வளாகத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.[2]
- திமுகவைச் சேர்ந்த ஆலடி அருணா ஆலங்குளத்தில், கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார்
- முன்னாள் திமுக அமைச்சர் நேருவின் தம்பி இராமஜெயம் திருச்சியில் மார்ச் 28, 2012 ல் கொலை செய்யப்பட்டார்.[3]
- பாஜக தலைவர்களில் ஒருவரான கணக்கு தனிக்கையாளர் ரமேஷ் 2013 ஜூலை 19ல் அவரது அலுவலகத்தில் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
- சாதிமறுப்பு திருமணம் செய்துகொண்ட உடுமலைப்பேட்டை சங்கர் 2016 மார்ச் 13ல் பேருந்துநிலையத்தில் கொலை செய்யப்பட்டார்.
- ஹாசினி என்ற சிறுமி கொலை 2017ல் செய்யப்பட்டார்
மேற்கோள்கள்
தொகு- ↑ "எழுவர் விடுதலை : சட்டமும் அரசியலும்". சவுக்கு. பார்க்கப்பட்ட நாள் 26 செப்டம்பர் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "சங்கரராமன் கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி வெட்டி கொலை". தமிழ்முரசு.ஆர்க். மார்ச்சு 21, 2013. Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் சூலை 26, 2013.
- ↑ "இன்னமும் மர்மம் விலகாத ராமஜெயம் கொலை வழக்கு: மினி தொடர் - பாகம் 1". விகடன். சூன் 26, 2013. Archived from the original on 2013-06-29. பார்க்கப்பட்ட நாள் சூலை 26, 2013.